(Reading time: 23 - 46 minutes)

அவள் கூறியதும் சரி நிலா கோவிலுக்கு போகலாம் ஆனால் நீ என்னை அத்தைன்னு சொல்லு ஆண்டின்னு சொன்னாள் எதோ அன்னியமாக தோன்றுகிறது நீதான் நம் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டாயே என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் புன்னகைத்துக்கொண்டே எனக்கு உதவி செய்த காரணத்திற்காக உங்கள் மகனுக்கு ஏற்கனவே பிரச்சனை வந்துவிட்டது “என்று மனதினுள் அவளால் ஏற்கனவே ஆதித்துக்கும் அவனது காதலிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது என்பதனை மனதில் வைத்துக்கூறினாள்” மேலும் எனக்கும் என்நிலமை தெரியும். நீங்கள் வேண்டுமானால் பெருந்தன்மையாக என்னை உங்கள் வீட்டில் ஒருத்தியாக நினைக்கலாம் ஆனால் என் இடத்தை நான் மறக்கக் கூடாது இல்லையா ஆண்டி என்றாள்..

அவள் அவ்வாறு கூறியதும் ஜானகி ச்..சு அது என்ன என் இடம், என்நிலமை என்று கூறுகிறாய்…, அதெல்லாம் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை எனக்கு. உன் கள்ளமில்லா பேச்சிற்கும் உன் அழகிற்கும் உள்ள மதிப்பு உனக்குத்தான் தெரியவில்லை. நான் முடிவு பண்ணிட்டேன் நீ என்னை அத்தையென்று தான் கூப்பிடனும் என்றாள்

அவர்கள் இருவரும் பேசும்போது அங்குகிளம்பி வந்த ஆதித்திடம் ஆதித் இவள் நான் சொன்னாள் எதுவும் ஒத்துக் கொள்ளமாட்டேன் என்கிறாள், அப்பொழுது கூட நீ சொன்னபிறகுதான் நகையைக் கூட வாங்கி போட்டாள், அதேபோல் இப்போ நீ சொன்னால்தான் என்னை அத்தைன்னு சொல்லுவாள் போல அத்தைன்னு கூப்பிடச்சொல்லு ஆதித் என்றார்.

அம்மா நீங்கதானே சொன்னீங்க எங்க ஊருப் பொண்ணு ஒன்னுக்குள்ள ஒன்னு என்று பிறகு ஏன் என்னை இடையில் இழுக்குறீங்க! என்றவன், தனது மொபைலை இயக்கிக் கொண்டே நான் போய் இன்னோவாவை எடுக்கிறேன் ட்ரைவர் வேண்டாம் என்று கூரியவன் தனது மொபைலை ஆன் செய்து அதில் பேசிக்கொண்டே வெளியில் சென்றான் .

ஏனோ அழ்குநிலாவிற்கு ஆதித் அவ்வாறு கூறிச்சென்றது தான் அவன் அம்மாவை அத்தை என்று கூப்பிடுவதில் அவனுக்கு விருப்பம் இல்லையோ என்றும் மேலும் இதற்குமுன் அவன் கூறிய “சரியான பட்டிக்காடு இவளுக்குப் போய் திரிஷ்டி சுத்திப்போடனும் என்று சொல்லி சிரிப்பு மூட்டுறீங்க” என்று கூறியதும் ஞாபகம் வந்தது. மேலும் “வர்சாவின் வழுவழு சருமமும் மாடலான அவளின் தோற்றமும் நினைவு வந்தது” அவ்வளவு அழகான லவ்வர் இருக்கும் போது என்னை பார்த்தால் அப்படித்தான் ஆதித்துக்குத் தோன்றும் என்று நினைத்தவள், ஆதித்துக்கு நான் அழகாகத் தெரியவேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை., தான் ஒன்றும் அவனின் கம்பீரத்தைக் கண்டு அசரமாட்டேன் என்றும் தனக்குத்தானே கூறிக்கொண்டாள் .

ஜானகி அழகுநிலாவிடம் இந்த அர்ச்சனை கூடையை எடுத்துக்கோ, என்று அழகிய வேலைபாட்டுடன் வேங்கலத்தினாலான தேங்காய் பழம் பூ அடங்கிய கூடையைக் கொடுத்தாள்.

அதை வாங்கியவள் அவளுடன் சேர்ந்து காருக்கு நடந்துகொண்டே அந்த கூடையின் அழகை கண்டு ஆண்டி இந்த கூடை சூப்பரா இருக்கு என்று அதன் அழகை வர்ணித்துக்கொண்டே இருவரும் சிரித்தபடி காருக்கு வந்தனர்.

ஜானகி அழ்குநிலாவை நீ முன்னால் உட்கார்ந்துக்கோ அழகி நான் மாமாவுடன் பின்னாடி உட்கார்ந்துகொள்கிறேன். நாம் மூணுபேரும் பின்னாடி உட்கார்ந்தால் என் மகனை பார்த்து யாரும் ட்ரைவர் என்று சொல்லிடப்போறாங்க என்று கூறினாள் ஜானகி.

ஆதித் அவன் அம்மா சொன்னதற்கு அவங்களை முறைக்க முடியாமல் அழகுநிலாவைத்தான் முறைத்துவைத்தான்.

அதனால் அவனின் அருகில் தான் உட்கார்வதை விரும்பாமல்தான் அப்படி முறைக்கிறான் என்று தவறாக புரிந்துகொண்ட அழகுநிலா, ஆண்டி! நான் உங்க கூடவே பின்னாடி உட்கார்ந்துகொள்கிறேனே.... என்று கூறியதும்

ஆதித் கோபமாக அழகுநிலாவை பார்த்து, அவங்க சொன்ன மாதிரி என்னை டிரைவர்னு மத்தவங்க நினைக்கனுமோ அம்மணிக்கு, ஒழுங்கா முன்னாடி உட்கார் என்று கடுப்புடன் கூறினான்.

நீ முன்னால் உட்காருமா என்று அவளிடம் கூறியவள் பின்னால் உள்ள கதவைத் திறந்து அதில் உட்கார்ந்திருந்த வேலாயுதத்தின் அருகில் உட்கார்ந்தவள் ஆதித்திடம், நான் கிண்டல் செய்ததுக்கு அவகிட்ட ஏண்டா கத்துற. பாவம் அவ முகமே வாடிப்போயிடுச்சு பார் என்றவள், அவன் திட்டுவதை எல்லாம் கண்டுக்காதமா. அவன் அப்படித்தான் எப்பவும் பிஸ்னஸ்... பிஸ்னஸ்... என்று அழைந்துகொண்டு அதிகாரம் பண்ணிக்கொண்டு திரிவதுபோல் வீட்டுலயும் இருப்பான் என்றாள்.

அதன்பின் அழகுநிலா அருகில் ஆதித் என்ற ஒருவன் இருப்பதையே கண்டுகொள்ளாமல் லேசாக பின்னல் திரும்பிஉட்கார்ந்தபடி ஜானகியுடன் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே வந்தாள்

ஆனால் ஆதித் தான் ஒவ்வொருமுறை அவள் கலகலத்து ஜானகியுடன் பேசி சிரிக்கும் போது தெரிந்த அவளின் அழகையும் அதில் இருந்த உயிர்ப்பையும் கண்டவன் டிரைவிங்கில் ஒருகண்ணும் அவளின் மீது ஒரு கண்ணுமாக இருந்தபடி கோவிலுக்கு முன் காரை நிறுத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.