(Reading time: 23 - 46 minutes)

கார் நின்றதும் என்னங்க அதற்குள் கோவில் வந்துருச்சா என்றவள், நான் நிலா கூட பேசிகிட்டே வந்ததில் கார் வந்து சேர்ந்தே தெரியவில்லையோ என்று வேலாயுதத்திடம் கேட்டாள்.. அவரும் தாங்கள் இத்தனை தடவை கோவிலுக்கு வரும்போது ஒரு கடமை உணர்ச்சியுடன் மனதில் இறுக்கத்துடன் வரும் இந்த பிரயாணம் அழகுநிலாவின் மூலம் இந்தமுறை எல்லோர் இறுக்கமும் குறைந்து இந்த பயணம் இருப்பதாக உணர்ந்தார்.

எனவே ஜானகியிடம் ம்...ஆமாம் என்றவர், இதற்குத்தான் பெண்பிள்ளை இருக்கும் வீடு கலகலப்பாக இருக்கும் என்கிறார்கள் போல என்றார். ஆனாலும் இந்தக்காலத்தில் இப்படி குடும்பத்தோடு இணைந்து உயிரோட்டமாக வைத்திருக்கும் அழகுநிலாவைப் போன்ற பெண்ணை பார்ப்பது அரிதுதான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார். .

கோவில் வந்து இறங்கியதும் அழகுநிலாவின் மொபைல்ஒலிஎழுப்பியது அதனை எடுத்தவள் ரமேஷ் இப்போ வலி எதுவும் இல்லை ஆனா கொஞ்ம் டையர்ட் ஆக இருக்குது இன்னைக்கு நான் ஆபீஸ் வரமுடியாது என்னுடைய ஆபீஸ் மெயிலில் எனக்கு அடிபட்டதை மென்சன் செய்து இன்று லீவ் சொல்லியிருக்கிறேன் என்று சொன்னவள். ம்..காலையிலேயே சுமதியிடம் ஹாஸ்பிடல் வரவேண்டாம் என்று சொல்லி இன்று விடுமுறை எடுத்ததையும் இன்பார்ம் பண்ணிடேன். நீங்க ஆபீஸ் போனதும் நம்ம பாஸை பார்த்து என்னிலமையை சொல்லிவிட்டு என்ன சொன்னார் என்று எனக்கு போன் பண்ணுங்க என்றவள் தொடர்பைத் துண்டித்தாள்.

அப்பொழுது அந்த கோவிலின் படியேறும் போது சிறிது தூரம்வரை சிரமம் தெரியவில்லை. ஆனால் பாதி தூரத்தைக் கடந்ததும் அவளது முட்டியில் இருந்த காயமும், காலை வலிநிவாரணி இன்னும் உணவு உண்ணாததால் போடவில்லை என்பதாலும் வலியும் சோர்வும் அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

மெதுவாக அவளுடன் பேசியபடி படி ஏறிக்கொண்டிருந்த ஜானகி அவளின் முகச்சினுக்கத்தை வைத்து என்ன நிலா சேர்ந்து போயிட்ட இப்படி வேர்த்துக் கொட்டுதே என்றவள், ஆதித் என்று முன்னால் சென்றுகொண்டிருந்தவனை கூப்பிட்டாள்.

ஆதித்தும் முன்னால் சென்றாலும் அவனது கவனம் முழுவதுவும் இவர்களிடமே இருந்ததால் கூப்பிடவுடன் அருகில் விரைந்துவந்தவன் என்ன ஆச்சு என்று அழகுநிலாவிடம் கேட்டவன் ஒரே நிமிடத்தில் அவளது முகத்தைப் பார்த்தே அவளின் நிலைமையை உணர்ந்துகொண்டான்.

அம்மா நேற்றுதான் அடிபட்டு வந்தவளை, இன்றே இப்படி நாம கூப்பிட்டுக்கொண்டு வந்தது தவறு இப்போ அவஸ்த்தை அவளுக்குத்தான் என்றான்.

அவன் கூறியதை கேட்டதும் அழகுநிலா, அச்சோ.. எனக்கு ஒன்றும் இல்லை இலேசாக அடிபட்டயிடம் வலிக்குது. நான் இங்கே உட்கார்ந்துகொள்கிறேன் நீங்க போய் சாமிகும்பிட்டு வந்துவிடுங்கள் என்று அங்கு படிஏறுபவர்கள் இளைப்பாற அமைக்கப்பட்டிருந்த கல் இருக்கையை காட்டி அவள் கூறினாள்.

ஆனால் ஆதித்துக்கு அங்கிருந்த பிச்சைகாரர்களின் அருகில் தனியாக அவளை விட்டுச்செல்ல மனம் ஒப்பவில்லை. மேலும் தங்களை சிலர் தொடர்வதுபோல் அவன் உணர்ந்தான். எனவே ம்..கூம் இவ்வளவு தூரம் வந்தாச்சுல்ல இன்னும் கொஞ்ச தூரம்தான் நடக்கனும் என்றவன், அவளின் மறுபுறம் வந்து நின்றவன் அவளை தாங்கிபிடித்தபடி, வா ஏறிடலாம் அங்கபோய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு உனக்கு கொஞ்சம் சாப்பிட எதாவது கொடுத்தால் கொஞ்சம் சரியாகிவிடும் என்றவன் தன்னுடன் அவளை சேர்த்து தாங்கியபடி படி ஏற ஆரம்பித்தான்.

ஜானகியும் கவலையுடன் இப்படி நீ கஸ்ட்டப்படுவாயோ! என்றுதான் நான் இன்று வீட்டிலேயே சாமிகும்பிடுக் கொள்வோம் என்றேன் என்று கூறியபடி அவளும் வேலாயுதத்தின் கை பிடித்து படியேற ஆரம்பித்தார்

அழகுநிலாவிர்க்கு அவன் தன்னை அவனுடன் சேர்த்து தாங்கியபடி படிஏற பிடித்ததும் ஒருநிமிடம் அவன் ஸ்பரிசத்தில் நடுங்கிவிட்டாள். ஆனால் அவன் தனக்கு உதவுவதற்காகத்தான் இப்படி பிடித்துக்கொண்டு ஏறுகிறான் என்பது மண்டையில் உரைக்க, ஆபத்துக்கு பாவம் இல்லை. கடவுளே! யாரும் தெரிந்தவர்கள் இவருடன் நான் ஏறும் கோலத்தைப் பார்த்துவிடக்கூடாது என்று வேண்டுதல் வைத்தாள். ஆனால் அவளின் வேண்டுதல் கடவுளின் காதில் விழாமல் போய்விட்டது.

அந்த படிக்கட்டில் இறங்கிகொண்டிருந்த முரளிதரன் கண்களில் அழகுநிலா யாரோ ஓர் ஆணின் தோழில் சாய்ந்துகொண்டும் அவன் அவளை தாங்களாக பிடித்துக்கொண்டும் ஏறும் காட்சி கண்ணில் விழுந்ததும் கோபத்தில் அவனின் கண் சிவந்தது நேற்று சாயந்தரம்தான் அவன் வீட்டில் அழகுநிலாவை பெண்பார்க்க வரும் புதன்கிழமை வரச்சொல்லி சொல்லியிருப்பதாக போன் செய்து சொல்லியிருந்தார்கள்

அவன் குட்லாம்பட்டியில் உள்ள அவன் பெரியப்பா வீட்டிற்கு கடந்த நான்கு ஆண்டாக வருடா வருடம் அவர்களின் ஊரில் நடக்கும் பொங்கல் திருவிழாவிற்கு போகும்போதெல்லாம் அவனின் கண் அழ்குநிலாவையே சுற்றிச்சுற்றி வரும் ஆனால் அவள் தன்னை ஒரு ஜீவன் பார்ப்பதையே உணராமல் தனது தோழிகளுடன் கலகலத்துக் கொண்டிருப்பாள்

அது கிராமம் ஆதலால் அவளின் கருத்தை கவர்வதற்கு தான் முயன்றால் தர்ம அடிதான் கிடைக்கும் என தெரிந்து கொண்டான். எனவே அவன் அவளின் பெரியப்பா மகனிடம் அது யாருடா இந்த பட்டிகாட்டில் தேவதைபோல இவ்வளவு அழகா ஒரு பொண்ணு இருக்கும் என்று நான் நினைச்சுகூட பார்க்கவிலையே.... என்று கேட்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.