(Reading time: 22 - 43 minutes)

அப்பொழுது நிலா...அழகுநிலா....என்ன பண்ற என்று கேட்டபடி வந்த ஜானகியின் குரலில் டக்கென்று அவளை விட்டவன் உட்கார்ந்திருந்த அவளை மறைத்து நின்றபடி சாப்பாடு எடுத்துவச்சுட்டேனு சொன்னீங்கல்லமா, அதனால் இவளையும் கூட சாப்பிடக் கூப்பிடவந்தேன் என்று இயல்பாக ஜானகியிடம் கூறினான்.

அழகுநிலா படபடவென்று துடித்த இதயத்தை மூச்செடுத்து நிலைப்படுத்த பார்த்தபோதும் ஆதித்தின் ”தொலைச்சுடுவேன் உன்னை” என்ற வார்த்தையும் அவனின் கோபமுகமும் பெரிதும் அவளை கலவரப்படுத்தியது. இயல்பாய் அவன் தன்னை தொட்டுப்பேசிய விதமும், கோவிலில் தன்னை அவன் தாங்கி நடந்தபோது பார்த்த முரளிதரனின் பார்வையால் தற்போதைய தன்னுடைய நிலைமையையும் உணர்ந்தவளுக்கு ஆதிதின் மேல் கோபம் வந்தது.

அவள எங்க? என்று ஜானகி கேட்டதும் அவன் திரும்பி பார்த்தான் அவன் பார்வை சென்ற இடத்தை நோக்கிய ஜானகி ஆதித்தை கோபத்துடன் பார்த்துகொண்டிருந்த அழகுநிலவை பார்த்து என்ன நிலா என்ற ஜானகியின் குரலில் தன்னிலையடைந்த அழகுநிலா, நிமிர்ந்து ஜானகியின் முகம் பார்த்து ஆண்டி நான் கிளம்பனும் இப்போவே கிளம்பறேன்! எனக்கு நீங்க செய்தவுதவியை எப்போதும் நான் மறக்கமாட்டேன் என்று கூறுகையில் ஆதித்தின் முகம் பார்த்தே கூறினாள் அழகுநிலா .

அவள் அவ்வாறு கூறியதும் ஏன்..? என்ற ஜானகியின் கேள்வியை மீறி “இப்போ ஒழுங்கா சாப்பிடவா...! பிறகு போவதை பற்றி பேசலாம்” என்ற ஆதித்தின் கோபமான வார்த்தை ஜானகியின் குரலை மழுங்கடித்தது .

ஆதித்தின் அதட்டலில் யோசனையுடன் அவனை பார்த்த ஜானகி “சொல்றத தன்மையா சொல்லலாம்ல ஆதித் அவளை பார்த்தாலே ஓய்ந்துபோய் தெரிகிறாள். இப்படி நீ மிரட்டினா அவள் தாங்க மாட்டாள்” என்றவள், அழ்குநிலாவை கைபிடித்து எழுப்பியபடி “நீ போகலாம் ஆனால் அதற்குமுன் நீ சாப்பாட்டுவிட்டு மாத்திரை மருந்து எடுத்தால்தான் உனக்கு தெம்புவரும், நானும் நிம்மதியாக உன்னை அனுப்பமுடியும் என்று கூறிக்கொண்டே அவளின் கைபிடித்தபடியே சாப்பாட்டு மேஜைக்கு கூட்டிச்சென்றாள் ஜானகி .

ஏனோ இன்று காலையில் கோவிலில் இருந்து வரும்வரை பாதுக்காப்பாக தெரிந்த ஆதித்தின் நிழல் இப்பொழுது அவனது கோபத்தாலும், மொபைலில் அவள் தன்னுடைய வீட்டில் பேசியபின் தன குடும்பத்தாரின் முன் தன்னுடைய குற்றவாளி நிலையை உணர்ந்ததாலும் ஆதித்தின் வீடு பயத்தை கொடுத்தது.

தன அம்மாவுடன் செல்லும் அழகுநிலாவை பார்த்தபடி பின்னால் சென்ற ஆதித்திற்கு அவளின் அரண்டமுகம் மனதை என்னவோ செய்தது. தன்னைத்தானே அவனின் செயலுக்கு கடிந்த ஆதித், அழகுநிலாவிடம் தான் இன்னும் தன மனதை உணர்த்தாத இந்தநிலையில் அவளின்மேல் இவ்வாறு ஆளுமையை செலுத்தினால் அவளால் தாங்கமுடியாது என்பதை உணர்ந்தான். ஆதித் அவளிடம் இனி உணர்ச்சிவசப்பட்டு இதுபோல் கோபத்தை காண்பிக்கக்கூடாது என முடிவெடுத்தான். .இப்பொழுது அவள் இருக்கும் மனநிலைமையில் நான் அவளை விரும்புவதாக சொன்னால் ஒரேயடியாக அவள் தன்னை தவிர்க்கவும் வாய்ப்புள்ளதை உணர்ந்தவன், இப்போதைக்கு அவளிடம் நட்பாக மட்டும் அணுகவேண்டும் என முடிவெடுத்தபடி டைனிங் டேபிளில் உட்கார்ந்து, ஜானகி பரிமாற தட்டில் உள்ளதன் ருசி கூட உணராமலே சாப்பிட ஆரம்பித்தான் .

அழகுநிலாவிற்கு ஒரு வாய் உணவுகூட உள்ளே இறங்கவில்லை. சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறவேண்டும் என்ற உத்வேகத்தில் தட்டில் உள்ளதை இயந்தரத்தனமாக உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தாள்.

இருவரின் முகத்தையும் ஆராய்ந்த வேலாயுதம், என்ன..? என்று கேள்வியை கண்களாலேயே ஜானகியிடம் வைத்தார் .அதற்க்கு அவளும் தெரியவில்லை என்று கூறியவள், ஆதித் கோபமாக உள்ளதாக சவுன்ட் இல்லாமல் உதட்டசைவில் அவரிடம் கூறினாள்.

கோவில் போகும்போது இருந்த கலகலப்பான சூழல் சாப்பாட்டு மேஜையின் முன் மாறி அமைந்து விட்டதை கவனித்த வேலாயுதம் அழகுநிலாவிடம் பேச்சை வளர்க்கும் விதமாக “அழகுநிலா உனக்கு ஆக்சிடென்ட் ஆன விஷயத்தை உன் வீட்டில் சொல்லாமல் மறைப்பது நல்லது இல்லைமா, உன்னை திரும்ப சென்னைக்கு வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் என்று பயந்து நீ சொல்லாததாக ஜானகி சொன்னாள்” ஆனா, இப்படி மறைத்தது அவங்களுக்கு தெரிந்தால் உன்மேல் நம்பிக்கை வைத்து அவங்க உன்னை வேலைக்கு அனுபியிருப்பதையே தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கு. அதனால் இனிமேல் எதுவென்றாலும் உன் வீட்டில் பேசி புரிய வச்சுக்கோ... மறைப்பது நல்லதல்ல என்றார்.

ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருந்த அழகுநிலாவிற்கு அவரின் வார்த்தைகள் மேலும் குற்றவாளியாக்கியது அவளை. நீங்க சொல்றது ரொம்ப சரி அங்கிள், அதனால்தான் நான் இப்போ உடனே புறப்படணும் என்ற முடிவுக்கு வந்தேன். சாப்பிட்டுவிட்டு நான் என் ஹாஸ்ட்டளுக்கு போய் ஊருக்குப் போவதற்கு எல்லாம் எடுத்து வைக்கப்போகிறேன். . நாளைக்கே எனக்கு லீவ் கேட்டு ஊருக்குப்போய் எல்லாத்தையும் அண்ணனிடம் சொல்லிவிடப்போகிறேன் என்றாள். பாவம் அவளால் அவள் எடுத்த முடிவை செயல்படுத்தமுடியாதபடி விதியின் கையில் அவள் வாழ்க்கை பயணிக்கப்போவதை அவள் அறியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.