(Reading time: 22 - 43 minutes)

அவளின் கை பிடித்த்சு அவளைத்தன் அருகில் இழுத்தான் ஆதித் .அதனால் அழகிக்கு ஏற்ப்பட்ட அந்த பயத்தையும் மீறி கூறினாள் “இதோ இப்படிதான் எதற்கெடுத்தாலும் என்னை தொட்டுப்பேசுறீங்க , நீங்க எனக்கு உதவிசெய்தவர் தான் அதற்காக இப்படி என்னை தொட்டுப்பேசுவது எனக்கு பிடிக்காது என்று ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருகிறேன். ஆனா நீங்க எதுக்கெடுத்தாலும் நான் ஒரு பெண் என்பதனை மறந்து இப்படித்தான் என்னை ட்ரீட் பன்றீங்க” என்று படபடவெண்டு பொரிந்தாள்”

ஆதித் அவளின் கைபிடித்து தன அருகில் இழுத்ததுமே அவனின் இழுவையில் அருகில் வந்ததும் அவள் பொரியத்துவங்கியவுடன் அவள் முகத்தை பார்த்தபடி இருந்தவன் அவள் பேசிமுடித்ததும் “திட்டி முடிச்சாச்சா?” என்று கூறிய ஆதித் அவளின் கையில் இருந்த பேக்கை வெடுக்கென்று பறித்தான் பிறகு அதனை திறந்து அதன் உள்ளிருந்த நரேனின் போனை தேடி எடுத்தவன் அவளுடைய பேக்கை மறுபடி அவளின் மடியில் தூக்கிப்போட்டான் .

அழகுநிலாவை பார்த்து உன்மடியில் இருக்கிற இந்த பேக்கை எடுக்கப்போனால் என்னமோ உன்னை கற்பழிக்க நான் வருவதுபோல் கதவுகிட்ட பம்மிக்கிட்டு போஸ் கொடுத்த! அதனால் கடுப்பாகித்தான் உன்னை கையைபிடித்து அருகில் இழுத்து உன் பேக்கை பிடுங்கினேன் என்றவன் சரியான பட்டிக்காடு என்று கூறினான். இப்போ உனக்கு என்ன பிரச்சனை நான் உன்னை தொட்டுப் பேசுவதா..? அல்லது இந்த மொபைலா..? நீ இப்போ என்னையும் அந்த மினிஸ்டரின் மகனைப்போல் பொறுக்கி என்று நினைத்து பேசுகிறாயா? எதுனு சொல்லு என்று கோபமாக பொரிந்தான்

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீதான் வந்து மாலில் என்னை துரத்திடு ஒருத்தன் வந்தான்னு என்னை கட்டிப்பிடிச்ச. அதனால் எனக்கும் என் லவ்வராக இருந்த வர்ஷாவிற்கும் இடையில் பிரச்சனை வந்துருச்சு. ஆனால் உனக்கு உதவி பண்றதுக்காக கோவிலில் உன் கையைபிடிச்சு கூட்டிப்போனதால உனக்கு இப்போ பிரச்சனை வந்ததுபோல் சீன போடடுற! என்று அவன் பதிலுக்கு கோபப்பட்டு சிலிரித்து பேசினான்.

அதற்க்கு “ஆமா... ஆமா... எனக்கு இந்த மொபைளால் எனக்குப் பிரச்சனைதான் அதில் இருந்து தப்பிக்க உங்களிடம் தஞ்சம் புகுந்ததால் உங்களுடைய லவ் வாழ்க்கையிலும் பிரச்சனை... நீங்கள் எனக்கு உதவப்போய் கோவில் வாசலில் நம் இருவரையும் எனக்குப் வீட்டில் பார்த்திருக்கும் மாப்ப்பிள்ளை பார்த்ததால் எனக்கு மேலும் பிரச்சனை.... போதும் இனி எதற்கும் உங்களிடம் வந்து நான் உதவிகேட்டு நிற்கப்போவதில்லை, இதுவரை நீங்க எனக்குச் செய்திருக்கிற உதவியையும் என்நிலையையும் இனி என் வீட்டில் மறைக்கப் போவதில்லை. இனி எதுவந்தாலும் என் வீட்டில் சொல்லி அவர்களுடன் சேர்ந்து நான் சமாளித்துக் கொள்வேன்... உங்களின் லவ்வர் பேர் என்ன சொன்னீங்க... ம்...வர்ஷா தானே நான் அவங்களை சந்தித்து நடந்ததை சொல்லி உங்கள் இருவரையும் சேர்த்துவைப்பது என்பொறுப்பு என்று படபடவென்று பொரிந்தாள் அழகுநிலா.

அவளின் வார்த்தைகளில் ஒருநிமிடம் உறைந்திருந்த இருவரையும், அழகுநிலாவிற்கு மாதேசிடம் இருந்து வந்த மொபைல் அழைப்பு மீட்டது. . அழகுநிலா அதனை எடுத்து காதிற்குகொடுத்ததும் “மிஸ் அழகுநிலா” என்று மாதேசின் குரலில் ம்...நான் தான், நீங்க...? என்றதும் “ஐ அம் யுவர் பாஸ் மாதேஷ்” என்று கூறினான். உடனே விறைப்பாக அமர்ந்தபடி சொல்லுங்க பாஸ் எனக்கு சின்னதா அடிபட்டிருப்பதால் நான் இன்னைக்கு லீவில் இருக்கிறேன் ஆபிஸ் மெயிலில் நான் அதை இன்பார்ம் செய்திருந்தேனே! என்று கூறினாள் அழகுநிலா.

உடனே “யா... நான் பார்த்தேன்” அதனால்தான் இப்பொழுது உங்களுக்கு போன் பண்ணினேன், இலேசான காயம் என்றுதானே நீங்க மென்சன் பண்ணியிருக்கீங்க “சோ நாளைக்கு கட்டாயம் நீங்க ஆபீசிற்கு காலை ஒண்அவர் முன்னாடியே வந்திருக்கணும்” நம்ம புது பில்டிங் காண்ட்ராக்டில் நாளை பூமிபூஜயின் போது ஜானகி கன்ஸ்ட்ரக்சன்னுடன் அக்ரீமன்ட் சைன் ஆகப்போகுது, அதற்குரிய டாக்குமென்ட் ரெடிபண்ணனும். “சோ” நாளைக்கு நீங்க கண்டிப்பா வந்துதான் ஆகணும். இது என்னுடைய ஆர்டர். என்று கூறியவன் தொடர்பை துண்டித்தான்.

அவள் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போதே அவளின் பேச்சினில் விழைந்த தாக்கத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொண்ட ஆதித், அவள் பேசி முடித்ததும் “லுக்” அழகுநிலா நீ சொல்வதுபோல் இதோட நமக்குள்ள உள்ள எல்லா தொடர்பையும் நாம் விட்டுவிடலாம், அதனால் எனக்கு ஒன்றும் இல்லை ஆனால் நீ மாட்டியிருக்கும் பிரச்சனையின் காரணமானவன் லேசுப்பட்டவன் கிடையாது. மனசாட்ச்சியில்லாதவன். அதிகாரம், பணபலம் எல்லாம் உள்ள ஒரு பக்கா கிரிமினல் அரசியல்வாதி, உன் வீட்டு ஆட்களால் அவனை மோதி கண்டிப்பா மீளமுடியாது உனக்கு என்மேல் நம்பிக்கை இருந்தால் இந்த மொபைலை என்னிடம் கொடு. “ஐ திங்க்” அன்னைக்கு உனக்கு நடந்த அந்த வீடியோ இதில் இருப்பதற்காக மட்டும் இதனை இவ்வளவு தீவிரமாக உன்னிடம் கேட்டு அந்த மினிஸ்டரின் மகன் தொந்தரவு செய்யவில்லை என்றும், இதில் அவனின் ரகசியம் ஏதோ ஒன்று மாட்டியிருக்கும் என நான் நினைக்கிறன். நான் மட்டும்தான் இப்போ உனக்கு உதவ முடியும் என்று கூறியவன், “யோசித்து உன் பதிலை சொல்லு” என்று அவளிடம் அந்த மொபைலை திரும்ப கொடுத்து காரை அவளது ஹாஸ்ட்டலை நோக்கி விரட்டி அதன் முன் நிறுத்தினான். .

ம்...நீ இறங்கலாம் என்று அவன் கூறியதும் அவள் கையில் இருந்த அந்த மொபைலை பாவமாக முகத்தை வைத்தபடி அவனிடம் நீட்டினாள் அழகுநிலா, அவன் அதை வாங்காமல் என்ன என்று தனது ஒற்றை புருவம் உயர்த்தி கேள்வி எழுப்பினான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.