(Reading time: 22 - 43 minutes)

உங்கமேல் எனக்கு நம்பிக்கை இருக்கு உங்களை தொந்தரவு செய்றது தப்புதான். இருந்தாலும் ப்ளீஸ்.. நான் கோபமாக் உங்களிடம் பேசியதால் இப்போ நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண முடியாதுன்னு சொல்லிடாதீங்க என்று பாவம்போல் கூறினாள்.

அவளது குழந்தைத் தனமான செய்கையை மனதிற்குள் ரசித்தாலும் முகத்தை உர்...ரென்று வைத்துக்கொண்டு, அவள் நீட்டிக் கொண்டிருந்த அந்த மொபைலை டக்கென்று பிடுங்கி, ஹெல்ப்பண்ணி தொலைக்கிறேன். என் அம்மாவின் பிரியமானவளாக ஆகி தொலைச்சுட்ட, என்று வார்த்தைகளை போட்டவன், என்ன இன்னும் உட்கார்ந்துகிட்டே இருக்கிற, காரை விட்டு இறங்கு என்று சத்தமிட்டான் .

அவனின் வார்த்தையை கேட்டதும் இதோ இறங்கிட்டேன் என்றவள், டோரை திறந்து இறங்கிய மறுநொடி விர்ரென்று ஆதித்தின் கார் பறந்து சென்றது .

தித் அவனது கம்பெனியின் சாப்ட்வேர் அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் நண்பனான ஜேம்சை, அழ்குநிலாவை இறக்கிவிட்டதுமே போய் பார்த்தான். ஆதித் அவனின் உதவியுடன் நரேனின் மொபைலில் இருந்த அழகுநிலாவிற்கு தொல்லை கொடுத்த அந்த வீடியோ பதிவை நீக்கச் சொன்னதும் நீண்ட போராட்டத்திற்குப்பிறகு அதை ஓபன் செய்து அதில் இருந்த வீடியோ பதிவை பார்த்த இருவரும், ராஸ்கல்ஸ் எதையெல்லாம் ரெகார்ட் பண்ணியிருகிறாங்க என்ற கோபம் ஏற்பட்டது .

மேலும் நடிகையுடனான போட்டோசில் மாதேசும் இணைந்து இருப்பதையும் மேலும் நரேனுடன் மாதேசும் இருந்த போட்டோஸ் பார்த்ததும் ஆதித்தின் புருவம் யோசனையில் நெரிந்தது.

காலை எழுந்தபின்புமே இன்று மேற்கொள்ளப் போகும் புதிய ஒப்பந்தத்திற்கு கிளம்பியவன் மனம் யோசனைலேயே இருந்தது.

ஏனெனில் புதிய காண்ட்ராக்ட் ஒப்பந்தம் செய்வது குறித்து டீடைல்ஸ் கலெக்ட் செய்யும்போது தான் ஆதித்துக்கு அந்த வசந்த் சாப்ட்வேர் கம்பெனியில் மாதேசும் பார்ட்னர் என்று தெரிந்துகொண்டான். மேலும் அதில் தான் அழகுநிலா வேலை பார்க்கிறாள் என்பதை ஹாஸ்பிடலில் வைத்து ரமேசுடன் பேசும் போது ஆதித் தெரிந்து கொண்டான்.

இந்த நிலையில் நரேனின் மொபைலில் இருந்த மாதேசின் போட்டோஸ் அழகுநிலா ஆபத்தின் கூடாரத்திலேயே வேலை செய்வதாகப் பட்டது. மேலும் தான் அவர்களின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது கூடுதல் கவனமுடன் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் கொடுத்தது. மேலும் அவர்கள் அழகுநிலாவை அந்த மொபைலில் உள்ள ரெகார்ட் மூலம் பிளாக்மெயில் செய்யமுடியாது ஏனெனில் அந்த பதிவு அடங்கிய அந்த போனின் மெமரி கார்டையே உடைத்து போட்டாகிவிட்டது. மேலும் அதிலிருந்த மினிஸ்டர் மற்றும் நரேன் மாதேசுகு எதிரான ரெகார்டுகளை தானும் தன போனில் காபி செய்துகொண்டதால் அவர்களின் குடுமிதான் தன்னிடம் வசமாக மாட்டியிருப்பதை உணர்ந்துகொண்டான் ஆதித்.

ஆனால் இந்த விபரங்கள் யாவும் தனக்கு தெரியும் என்பதை அழகுநிலாவை அவர்களின் பிடியில் இருந்து வெளியில் கொண்டுவந்தபிறகுதான் அவர்களுக்கு உணர்த்தவேண்டும். அதற்குமுன் தெரிந்தால் அவர்களின் கோபம் தற்போது அவர்களிடம் வேலைபார்க்கும் அழகுநிலாவிற்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று பலவாறு யோசித்த்க்கொண்டே பூமிபூஜை நடக்கும் இடத்திற்கு செல்லும்முன் தான் ரெடி செய்திருந்த ஒப்பந்தத்தை ஒருமுறை சரிபார்த்தான் .

றுநாள் காலை அழகுநிலா காலையில் சீக்கிரமே ஆபீசுக்குள் நுழைந்தாள் அவள் வருவதற்கு முன்பே வசந்த் வந்திருந்தான், அவள் வந்ததும் “குட்மார்னிங் சார்” என்றதும், அவளை ஏறிட்டுப் பார்த்தவன் , வந்தாச்சா இந்தாங்க இந்த பைல்லை எடுத்துக்கோங்க என்றவன், இன்னும் ஹால்ப் ஆன் அவரில் இதில் இருக்கிற டீடெய்ல்ஸ் எல்லாம் நோட் பண்ணிட்டு ரெடியா இருங்க. நாம எல்லோரும் நம்ம நியூ பில்டிங் சைட்க்கு போகணும் என்று சொல்லியவன், பிசியாக மொபைலில் பேசியபடி வெளியில் சென்றான். .

அரை மணிநேரத்திற்குள் வசந்த்துடன் மாதேசும் அங்கே வந்தனர். வசந்த் இன்னும் அவள் வேலை செய்துகொண்டிருப்பதை பார்த்ததும், என்ன இன்னும் நோட் பண்ணி முடிகலையா..? என்று கேட்டதும் இதோ முடிச்சுட்டேன் என்று அழகுநிலா கூறினாள். அவளின் அருகில் வந்த மாதேஷ் அவள் எடுத்துவைத்திருந்த குறிப்பை பார்த்துவிட்டு அன்னைக்கு நீங்கதானே நம்ம பில்டிங் கட்டித்தர வந்த கொட்டேசனை பிரிண்ட் எடுத்து கொடுதீங்க என்று கேட்டான். ஆம் என்னும் விதமாகா அழகுநிலா தலை அசைத்ததும், ஜானகி பில்டர்சிடம் தான் நான் அக்ரீமென்ட் சைன் பண்ணப்போறோம். “சோ” அந்த லேண்ட் பற்றிய டாகுமென்ட் எல்லாம் இந்த பைலில் இருக்கு. நான் அங்கு கேட்கும்போது கரைக்டா எல்லாம் இதில் உள்ளவாறு சொல்லனும் என்றவன், போகலாம் என்றபடி முன்னால் நடக்க ஆரம்பித்தான்.

அவனின் பின்னால் சென்ற அழகுநிலாவிர்க்கு ஏனோ அந்த வேலை பிடிக்கவில்லை, ஆனால் தான் வேலை பார்க்கும் இடத்தின் முதலாளியின் பேச்சை மறுக்கும் நிலையில் அவள் இல்லையே! எனவே மனதிற்குள் சாப்ட்வேர் ஆன எனக்கு பி.ஏ வேலை பார்க்கும் நிலை வந்துவிட்டதே என்று நொந்தபடி வாசலுக்கு சென்றாள்.

அப்பொழுது அவளின் முன் வந்த ரமேஷ் அவளை பார்த்ததும் அழகுநிலா இன்னைக்கே நீங்க எதுக்கு வந்தீங்க? தலையில் இருந்த காயம் எப்படி இருக்கு? இன்னும் உங்க கேப் வரலேயே எப்படி வந்தீங்க? என்று பேச்சுக் கொடுத்தான்.

முன்னால் போய்கொண்டிருந்த மாதேஷ் நின்று அவர்கள் இருவரையும் பார்ப்பதை அறிந்த அழகுநிலா, பாஸ் என்னை வேகமாக வரச் சொன்னதால் வந்துட்டேன் நியூ பில்டிங் கட்டப்போற சைட்டுக்கு போவதற்கு கிளம்பிக் கொண்டிருகிறேன் என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும், ஹாய் நீங்களும் அங்கதான் போறீங்களா? என்கூட வாங்களேன் என்றவன், அவள் அரண்ட முகத்தை பார்த்ததும் பைக்கில் இல்லப்பா! என் வீட்டில் உள்ள மாருதி காரை எடுத்துட்டு வந்திருக்கிறேன் பயப்படாம வாங்க என்று கூறினான். .

அப்பொழுது அவனின் பின்னால் இருந்து மாதேஷ் அவங்க எனக்குத்தான் பி.ஏ உங்க கூட அவங்களை கூப்பிட்டுப்போனால் எனக்கு யார் பி.ஏ வேலை பார்ப்பது? என்று கேட்ட மாதேசின் குரலில் அதிர்ந்து திரும்பிப்பார்த்தவன் சாரி.... சார் நான் அவங்க தனியா போறாங்கனு நினைத்து கேட்டுட்டேன். நீங்க போங்க அழகுநிலா நான் பின்னால் வருகிறேன் என்று சொல்லியவன், விழுந்தடித்துக்கொண்டு உள்ளே உள்ள அட்டன்டன்ஸ் மெசினில் தன விரலை பதிப்பதற்கு விரைந்தான்.

----தொடரும்----

Episode 11

Episode 13

{kunena_discuss:1144}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.