(Reading time: 21 - 41 minutes)

"எனக்கு அந்த வீட்டை தவிர வேற  எங்க இருந்தாலும் சந்தோசம் தான் காவ்யா.  அந்த வீட்ல இருக்கவே பிடிக்கலை. ரொம்ப வேலை செய்ய சொல்றாங்க அப்படினு எல்லாம் பிடிக்காம இல்லை.  அதெல்லாம் ஒரு கஷ்டமா? ரொம்ப கஷ்ட படுத்துவாங்க காவ்யா. அதை எல்லாம் எல்லாத்தையும் சொல்ல கூட முடியாது.

அங்க அவங்களை  பொருத்தவரைக்கும் நான் வேலைக்காரி மட்டும் தான். அப்படி தான் என்னை பாப்பாங்க. அப்படி தான் நடத்துவாங்க. அவங்களுக்கு போக உள்ள மிச்ச சாப்பாடை தான்  தருவாங்க"

"அது உன்னை பாத்தாலே தெரியுது. நீ கொஞ்சம் சதை போட்டா அழகா இருப்ப டி"

"ஐயோ அழகு எல்லாம் வேண்டாம் பா. இப்படியே இருந்துட்டு போறேன்.  அழகே வேணாம்

"லூசா நீ? எல்லாரும் அழகா இருக்க என்ன எல்லாம் செய்றாங்க? நீ இப்டி சொல்ற"

"நான் இப்படி  இருக்கும் போதே நிறைய பேச்சு  வாங்கிட்டேன் காவ்யா. கொஞ்சம் முகத்துல எண்ணெய் வழியுதுன்னு பவுடர் போட்டாலே எவனை மயக்க இப்படி கிளம்பி போறேன்னு சித்தி கேப்பாங்க"

"ஏய் மதி என்ன டி சொல்ற?"

"ஆமா காவ்யா. நான் எதுவுமே செஞ்சிர கூடாது அவங்களுக்கு. எதுக்கு எடுத்தாலும் திட்டுவாங்க. எனக்கு பரு வந்தா கூட யாரு உன்னை பாக்குறான்னு கேப்பாங்க. இன்னும் நிறைய  இருக்கு காவ்யா. அதுல இருந்து தப்பிக்க தான் இங்க வந்துட்டேன்.  அதுவும் கஷ்ட பட்டு, செலவு இல்லைன்னு சொல்லி  கெஞ்சி கூத்தாடி இங்க வந்து சேந்துருக்கேன்"

"உங்க அப்பா இதெல்லாம் கேக்க மாட்டாரா?"

"சின்ன பிள்ளைல அப்பா முன்னாடி என்னை ரொம்ப கஷ்ட படுத்தமாட்டாங்க. ஆனா அப்புறம் அப்பா முன்னாடி என்னை திட்டுனா கூட அப்பா கண்டுக்க மாட்டாங்க.  முன்னாடியே அவர் என்னை விட்டு விலக ஆரம்பிச்சிட்டாரு. ஒன்னு அவருக்கும் என்னை பிடிக்காம இருக்கணும். இல்லைனா அவர் என்னை பாசமா பாத்துக்கிட்டா சித்தி என்னை இன்னும் கொடுமை படுத்துவங்கன்னு நினைச்சு அப்படி இருக்கணும். நான் ரெண்டாவது காரணத்தை நினைச்சு மனசை தேத்திக்குவேன்"

"உன் தங்கச்சி என்ன படிக்குறா?"

"அவ  ஒரு  வருஷம்  பெயில். அடுத்து பாஸ்  ஆகி  இப்ப தான் சென்னைல இன்ஜினியரிங் சேத்துருக்காங்க. அதுவும் லட்ச கணக்குல டொனேஷன் கொடுத்து. தம்பி இப்ப தான் லவன்த் படிக்கிறான்"

"ஹாஸ்டல் புடிக்குச்சிருக்கா மதி? எங்க வீட்டுக்கு வேணா வரியா? நான் அப்பா அம்மா கிட்ட பேசுறேன்"

"நீ கேட்டதே போதும் டி. நான் இங்க ரொம்ப சந்தோசமா சுதந்திரமா இருக்கேன். சுட சுட சாப்பாடு, என்னோட படிப்பு, நிம்மதியான தூக்கம்னு இருக்கேன். சாப்பாடு நல்லா இல்லைனு நிறைய பிள்ளைங்க சொல்லுவாங்க, ஆனா எனக்கு இது அமிர்தமா தெரியுது காவ்யா. மெஸ் குளோஸ்  பண்ணா தான் வீட்டுக்கு போக வேண்டி இருக்கும். அது தான் கடுப்பா இருக்கும்"

"அப்ப நல்லா சாப்பிட வேண்டியது தான? கொஞ்சம் ஒல்லியா இருக்க?"

"இவ்வளவு நாள் ஒழுங்கான சாப்பாடு இல்லாம குடல் சுருங்கிட்டு  காவ்யா. அதனால ஒரு அளவுக்கு மேல உள்ள போகாது. ஆனா இப்ப கொஞ்சம் நல்லா தான் சாப்பிடுறேன்"

தை எல்லாம் பேச்சு வாக்கில் தான் காவ்யா மதியிடம் இருந்து கறந்திருந்தாள்.

மூணு வருசமா இவர்களின் நட்பு தொடர்ந்து இன்னும் இறுகி போனது. கவர்ன்மென்ட்ல இருந்து வரும் உதவி தொகையை வீட்டில் சொல்லாது, தன்னுடைய தேவைக்கே வைத்து கொள்வாள் மதி.

"இதையாவது செய்றயே", என்று காவ்யா பாராட்டும் போது "வீட்ல யாரும் பணத்துக்கு கஷ்ட படலை காவ்யா. இந்த கொஞ்ச பணம் தான் அவங்களுக்கு உதவ போகுதா? என்கிட்ட இருந்தாவது எனக்கு எதாவது வேணும்னா அவங்க கிட்ட கேக்காம இருக்கலாம்ல அதான்", என்று சொல்லி விடுவாள் மதி.

அந்த பணத்தில் தான் காவ்யாவை அழைத்து கொண்டு உடையே எடுப்பாள் மதி. அப்போதும் ஆடம்பரமாக இல்லாவிட்டாலும் அத்தியாவசியமாக இருக்கும்.

"இப்படி எளிமையா வாழக்கூடிய மதி வாழ்க்கையில் அவளுடைய கனவு நிறைவேறி சந்தோசமா இருப்பான்னு நினைச்சேனே.  படிச்சா உடனே இவளுக்கு வேலை கிடைச்சிரும். அப்புறம் இவ வாழ்க்கை  இன்னும் நிம்மதியா இருக்கும்னு அம்மா அப்பா கிட்ட எல்லாம் சொல்லி சந்தோச பட்டேனே. இப்படி மொத்த வாழ்க்கையையும் புரட்டி போடுற மாதிரி கல்யாணத்தை பண்ணிக்கிட்டு வந்துருக்கா"

"இன்னும் என்ன எல்லாம்  கஷ்ட பட போறாளோ?", என்று நினைத்து கொண்டு கிளாஸ் முடியும் நேரத்துக்காக காத்திருந்தாள் காவ்யா.

"ஏய் எருமை அதான் சார் போய்ட்டாங்களே. இன்னும் என்ன படிச்சு கிழிச்சிகிட்டு இருக்க? மண்டை காயுது? என்னடி நடந்துச்சு? ரெண்டு நாள் லீவ்ன்னு தான ஊருக்கு போன?", என்று கேட்டாள் காவ்யா.

....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.