(Reading time: 21 - 41 minutes)

"இது மூணாவது வருஷம் தான? நீங்களும் மதியும் ஒரே கிளாஸ் தானா?"

"ஆமா சார்"

"மதி எப்படி படிப்பா?"

"அவ தான் காலேஜ் பர்ஸ்ட் சார். ஆனா என்ன மார்க் வாங்கி என்ன செய்ய?"

"எதுக்கு அப்படி  சொல்றீங்க?"

"ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லை சார். சும்மா உளறிட்டேன்"

"பரவால்ல சொல்லுங்க. எதை நினைச்சு அப்படி சொன்னீங்க?"

"நீங்க அவளுக்கு சொந்தகாரங்க., அப்புறம் உங்க கிட்ட சொல்லி, அவளுக்கு எதாவது பிரச்சனை வந்துட்டுன்னா?"

"அதெல்லாம் வராது. நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். எனக்கு தெரிஞ்சா நான் எதாவது உதவி செய்வேன்ல?"

"சரி சார்  நம்பி சொல்றேன். மனசுக்குள்ளே  வச்சிக்கோங்க சரியா? மதி ரொம்ப பாவம் சார். நல்லா படிப்பா. ரொம்ப திறமை சாலி. ஆனா ரொம்ப மென்மையானவ. அவளுக்கு நல்ல வேலை கிடைச்சு,  நல்ல வாழ்க்கை அமையும்னு  நினைச்சேன். ஆனா இப்ப எல்லாம் போச்சு"

"ஏன் என்ன ஆச்சு?"

"உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் சார் அவளுக்கு கல்யாணம் ஆனது. எவன்னே தெரியாத ஒருத்தனை அவ தலைல கட்டி வச்சிட்டாங்க. ஏற்கனவே இவ்வளவு வருஷம் அவங்க சித்தியால கொடுமை அனுபவிச்சிருக்கா. இப்ப இவன் வேற என்ன செய்ய போறானோ? உங்களுக்கு தெரியுமா சார் அந்த ஆளை பத்தி? அந்த ஆள் அவளை கொடுமை படுத்துவானா? ஆனா அப்படி ஏதும் ஆகட்டும். அவனை கொன்னுட்டு நானே ஜெயிலுக்கு போயிருவேன்"

"ஐயோ கோபத்தை குறைங்க. அப்படி எல்லாம் ஆகாது. இருந்தாலும் உங்க பிரண்ட் மேல இவ்வளவு பாசமா?"

"ஹ்ம்ம் அவ பாவம் சார். கல்யாணம்  பண்ணி  அவன் முகம் கூட தெரியாம இருக்குறது எவ்வளவு கொடுமை?"

"ஓ முகம் கூட தெரியாதா?"

"ஆமா சார். சரி உங்களுக்கு என்ன வேணும்?"

"இல்லை மாமா வந்துரட்டும். சேந்தே சாப்பிடலாம்"

"அப்ப இருங்க. நான் ஒரு போன் பண்ணிட்டு வரேன் சார்"

"இந்தாங்க என்னோட போன்ல இருந்து பண்ணுங்க"

"ஐயோ அதெல்லாம் வேண்டாம் சார்"

"எதுக்கு தயங்குறீங்க? உங்க லவ்வர் கிட்ட பேச போறீங்களா? அதான் என்னோட போன் வேண்டாம்னு சொல்றீங்களா?"

"அட போங்க சார். நீங்க வேற. அப்படி எல்லாம் எனக்கு யாரும் இல்லை. யாராவது  வீட்ல எனக்குன்னு சேத்து வச்சிருக்க நகை, சொத்து  எல்லாத்தையும்  விட்டுட்டு  ஓடி  போவாங்களா? அதனால  வீட்ல பாக்குற  பையன்  தான் மாப்பிள்ளை"

"நல்ல பாலிசி தான், அப்பறம் என்ன இதை வச்சு  பண்ணுங்க"

"சரி", என்று வாங்கி திலகாவை அழைத்தாள் காவ்யா.

"அம்மா நான் காவ்யா பேசுறேன்?"

"இது யார் நம்பர் காவ்யா?"

"அம்மா, இது மதியோட சொந்தக்காரங்க நம்பர்"

"சரி வீட்டுக்கு கிளம்பலையா?"

"அதை சொல்ல தான் போன் பண்ணேன். இந்த மதிக்கு வீட்ல கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்க மா"

"என்னடி  சொல்ற?", என்று அதிர்ச்சியாக கேட்டார்  திலகா.

"ஆமா மா விவரம் வீட்டில வந்து சொல்றேன். கொஞ்ச நேரத்துல கிளம்பிருவேன். ஹாஸ்டல்  காலி பண்ணனும்  அதான்"

"சரி காவ்யா, அவளை பத்திரமா விட்டுட்டு நீ பத்திரமா மா"

"சரி மா வைக்கிறேன்", என்று சொல்லி வைத்து விட்டு அவனிடம் "தேங்க்யு சார்", என்று சொல்லி போனை கொடுத்தாள்.

சிரித்து கொண்டே அதை வாங்கி வைத்தவன், "உங்க பிரண்ட் யாரையும் விரும்புனாங்களா? இந்த கல்யாணம் அவங்க காதல் வாழ்க்கையை கெடுத்துருச்சா?", என்று கேட்டான்.

"அட நீங்க வேற சார். அவ ஒரு பிள்ளை பூச்சு. அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. அவளாவது லவ் பண்றதாவது", என்று சிரித்தாள்.

அப்போது சண்முகமும், கலைமதியும் வந்தார்கள்.

அவர்கள் அருகே இரண்டு சேர் இருந்தது. அவன் பக்கத்தில் உள்ள சேரில் அப்பாவை உக்கார வைத்து விட்டு காவ்யா அருகில் அமர நினைத்து  சண்முகத்தை "உக்காருங்க பா", என்று சொன்னாள் மதி.

ஆனால் அவர் "மாப்பிள்ளை பக்கத்தில் உக்காரு மா. கல்யாணம் அன்னைக்கு கூட ரொம்ப  நேரம் சேத்து வச்சு பாக்க முடியலை", என்று சொல்லி கொண்டே காவ்யா அருகில் அமர்ந்து விட்டார்.

அதிர்ச்சியில் விழி விரித்து அவனை பார்த்தாள் மதி.

தலையில் இடி விழுந்த மாதிரி அமர்ந்திருந்தாள் காவ்யா. இதயமே வெளியே குதித்து விடும் போல இருந்தது. "இவன்னு தெரியாம இவன் கிட்டயே என்னவெல்லாம் பேசிட்டேன்", என்று முழித்தாள்.

அவர்கள் இவருடைய ரியாக்சனை பார்த்து நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருந்தான்  சூர்யா  என்ற சூர்ய நாராயணன்.

காதல் தொடரும்......

Episode # 02

{kunena_discuss:1169}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.