(Reading time: 32 - 63 minutes)

ண்ணை வீடு கங்கா எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல், எளிமையாக அதே சமயம் அழகாக இருந்தது.. அந்த ஊர்க்காரர்  வேறு ஊருக்கு குடிபெயர்ந்ததால், அவர் கட்டிய வீட்டை விற்க நேர்ந்து, அதை தான் துஷ்யந்த் விலைக்கு வாங்கி ஆள் வைத்து பராமரிக்கிறான். சுற்றிலும் மரம், செடி,கொடி என தோட்டம்.. நடுவில் வீடு.. ஒரு குடும்பம் தாராளமாக வசிக்கக் கூடிய அளவிற்கான வீடு.. அதே ஊரை சேர்ந்த ஒரு குடும்பத்தை வேலைக்கு வைத்து அந்த வீட்டை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவர்களிடம் விட்டு வைத்திருக்கிறான்.

துஷ்யந்தும் கங்காவும் அங்கு போய் சேர்ந்த போது, தம்பதிகளான இருவரும் அவர்களை வரவேற்றனர். முதலில் வந்தவர்களுக்கு அந்த தோட்டத்தில் உள்ள தென்னை மரத்திலேயே இளநிர் பறித்து, வெட்டி பருக கொடுத்தனர்.. அதை குடித்ததும் துஷ்யந்தோடு சேர்ந்து வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் வலம் வந்தாள்.

நிறைய மரம், செடி, கொடிகள் என்று இருந்தாலும்,அதிலிருந்து விழும் சருகுகளை அப்படியே விட்டு வைக்காமல், பெருக்கி சுத்தம் செய்து பார்ப்பதற்கே அழகாக இடத்தை வைத்திருந்தனர்.. ஒருப்பக்கம் வெறும் பூச்செடிகளாய் இருந்தது.. ஒவ்வொரு விதமான பூச்செடிகள் என்று, அதிலெல்லாம் பல விதமாக பூக்கள் பூத்து அழகாக காட்சி அளித்தது.. ஒரு பக்கம் வாழைமரங்கள், முந்திரி மரம், அங்கங்கே தென்னை மரங்கள், பனை மரங்கள், மாமரம், பல வகையான காய்கறி செடிகள் என்று ஒவ்வொன்றையும் ஆசை தீர பார்த்துக் கொண்டு வந்தாள்.

ஒருப்பக்கம் குடிசை போன்று அமைத்து மாடுகள் கட்டப்படிருந்தது.. இந்த வீட்டை பராமறிப்பவர்களின் மாடுகள் தான் அது, இங்கேயே வைத்து பார்த்துக் கொள்ளுமாறு துஷ்யந்த் சொல்லியிருந்தான். அந்த மாடுகளுக்கு தீனி போட வைத்திருந்த வைக்கோல்போரில் ஏறி உட்கார்ந்துக் கொண்டாள்.

“ஹே கங்கா பார்த்து..” என்று அவன் அக்கறைக் கொள்ள, நீங்களும் வாங்க என்று அவனையும் மேலே ஏறி உட்கார வைத்தாள். சிறிது நேரம்.அங்கிருந்தப்படியே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின் அந்த தம்பதிகள் இருவரும் வந்து இவர்களை சாப்பிடக் கூப்பிட்டதும், இருவரும் சென்றனர்.. துஷ்யந்த் ஏற்கனவே இருவரும் வருவதை பற்றி சொல்லியிருந்ததால், அவர்களும் அங்கேயே உணவு சமைத்து வைத்தனர்.

பின் சாப்பிட்டு முடித்ததும், இருவரும் காரில் திரும்ப கடற்கரைக்கு சென்றனர்.. சிறிது நேரம் கடற்கரையில் கால் நனைத்து, காற்று வாங்கி,பின் திரும்ப பண்ணை வீட்டுக்கு வர 5 மணி ஆனது.

துஷ்யந்த் இங்கு அடிக்கடி வருபவன் தான், ஆனால்  எப்போதும் தனியாக தான் வருவான்.. இதுபோன்று பெண்களை அவன் கூட்டி வந்ததில்லை. துஷ்யந்திற்கு இன்னும் திருமணமாகவில்லை என்று அந்த தம்பதியருக்கு தெரியும், அவன் மேலே நன்மதிப்பு வைத்திருக்கின்றனர். அப்படிப்பட்டவன் இன்று ஒரு பெண்ணோடு வந்ததை பார்த்து முதலில் அவர்கள் ஒருமாதிரி நினைத்தாலும், இருவரையும் ஒன்று சேர்த்து பார்த்தால், அவர்களுக்கு தவறாகவும் தோன்றவில்லை. அதுவும் கங்கா கழுத்தில் தாலி இருப்பதை பார்க்கும் போது, துஷ்யந்த் வீட்டுக்கு தெரியாமல் கங்காவை மணந்திருக்க வேண்டும்.. ஒருவேளை கங்கா துஷ்யந்தை விட அந்தஸ்தில் குறைவாக இருக்கலாம், அதனால் தான் திருமண விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கிறான் போலும், என்று அவர்களாகவே யூகித்துக் கொண்டனர்.

இருவரும் கடற்கரையிலிருந்து வருவதற்கு முன்னரே, ஒருவேளை இருவரும் இரவு இங்கு தங்கினால், இரவுக்கு சாப்பாடு வேண்டுமே என்று, இரவு சாப்படை தயார் செய்து ஹாட் பாக்ஸில் வைத்துவிட்டு, இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி, இருவரும் வந்ததும், அந்த தம்பதியர் அவர்கள் வீட்டுக்கு செல்வதாகவும், ஏதாவது வேண்டுமென்றால், அலைபேசியில் தொடர்பு கொள்ளும்படியும் சொல்லிவிட்டு சென்றனர்.

துஷ்யந்தும் கிளம்பும்போது அவர்களை வரச் சொல்லலாம் என்று இப்போது அவர்களை அனுப்பி வைத்தான். மணி ஐந்து ஆகிவிட்டது.. ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிவிடலாமா? இல்லை இரவு உணவை முடித்துவிட்டு, எட்டி மணிக்கு மேல் கிளம்பளாமா? என்று மனதில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான். ஒருப்பக்கம் அவளுடன் இன்னும் கொஞ்ச நேரம் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்க, இன்னொரு பக்கம் அவள் என்ன  நினைப்பாள்? பேசாமல் கிளம்பிடலாமா? என்றும் தோன்ற, பட்டிமன்றத்துக்கான தீர்ப்பு தான் இன்னும் தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான்.

போர்டிகோவில் நின்றப்படி அவன் யோசித்துக் கொண்டிருக்க, அவளோ வீட்டுக்கு அருகிலேயே இருந்த பூச்செடிகளின் அழகை ரசித்தப்படி நின்றிருந்தாள். அப்போது திடிரென மழை தூற ஆரம்பித்தது..

“ஹைய் இந்த சீஸன்ல மழையா?” என்று குதூகலித்தவள், மழையில் நனைய ஆரம்பித்தாள்.

“கங்கா.. மழை பெய்யுது உள்ள வா..” என்று அவன் குரல் கொடுக்க, அவளொ அதை காதிலேயே வாங்கவில்லை. இன்னுமே நனைந்தப்படி இருந்தாள்.

“கங்கா இந்த சீஸனே பனி ஒத்துக்காம ஜலதோஷம் பிடிக்கும்.. இதுல மழையில நனைஞ்சு உடம்புக்கு முடியாம போய்டபோது” என்று அவன் சொல்ல,

“எனக்கு இப்படி தூரலில் நனைஞ்சா ரொம்ப பிடிக்கும்..” என்று இன்னும் மழையில் நனைந்தப்படியே நின்றிருந்தாள். தனக்கென்று ஒரு திரை போட்டு அதிலிருந்து வெளியே வர விரும்பாமல் இருந்தவள், இன்று தன் இயல்புக்கு மாறியிருந்தாள்.

“சொன்னா கேக்க மாட்டியா? உள்ள வா..” என்று அவன் அதட்ட,

“என்ன என்னோட அம்மா மாதிரியே  பண்றீங்க? நானும் யமுனாவும் இப்படித்தான் மழையில விளையாடினா.. தூரமிருந்து அதட்டிக்கிட்டே, எங்களை ரசிச்சு பார்த்துகிட்டு இருப்பாங்க..” என்று கூறினாள்.

“அதில்ல கங்கா.. இப்போ நாம கிளம்ப வேண்டாமா? போறப்போ ட்ரஸ் ஈரமாகிட்டா நல்லா இருக்குமா?”

“நாம ஏன் இப்போ போகனும்? உங்கக் கூட ஒருநாள் முழுக்க இருக்கேன்னு சொன்னேன் இல்லையா? அப்படி கணக்கு பார்த்தா, இன்னைக்கு காலையில் எட்டு மணியிலிருந்து, நாளைக்கு காலை எட்டு மணி வரை உங்கக் கூட தான இருக்கனும்..”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல, இவ்வளவு நேரம் நீ என்கூட இருந்ததே போதும்.. இப்போ கிளம்பளாம்.. இப்படி மழையில நனைஞ்சிட்டு ராத்திரி இந்த ஈர ட்ர்ஸோடவா இருக்கறது? அதனால போகலாம்..”

“எனக்கு அதுல ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. இன்னைக்கு நைட், நாளைக்கு காலையில போடல்லாம் ட்ரஸ் எடுத்துட்டு வந்திருக்கேன்.. பெரிய பேக் கொண்டு வந்தேனே எதுக்காம்.. இதுக்காக தான்” என்று சாதாரணமாக சொன்னவள், மழையில் நனைந்தப்படியே இருந்தாள். அப்படியிருக்க, பெய்த மழை திடிரென நின்றுப் போனதும், வருத்தம் கொண்டவள்,

“எனக்கு இப்போ மழை வேணுமே” என்று கொஞ்சலாக கேட்டாள்.. அப்போது தான் அங்கே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச கட்ட்ப்பட்டிருந்த பம்பு செட்டைப் பார்த்து, அதை நோக்கி ஓடினாள்.

திடிரென்று அவள் ஓடவும், என்ன என்று துஷ்யந்த் பின்னாலேயே சென்று பார்க்க, அவளோ பம்பு செட் தொட்டிக்குள் இறங்கிவிட்டாள்.

“கங்கா.. என்ன இது?” என்று அவன் கேட்க,

“ப்ளீஸ் மோட்டார ஆன் பண்ணுங்க..” என்று கெஞ்சினாள். அவனும் அவள் விருப்பத்திற்காக அதை போட்டுவிட, பீய்ச்சி அடித்த தண்ணீரின் முன்னே போய் நின்றுக் கொண்டாள்.

அவளை ரசித்தப்படி துஷ்யந்த் பார்த்துக் கொண்டிருக்க, “நீங்களும் வாங்க” என்று அவனையும் கூப்பிட்டாள்.

அவனோ வேண்டாமென்று மறுக்க, அவன் மேல் தண்ணீரை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள்.. “என்ன கங்கா இது?” என்று அவன் கேட்டதற்கு, “ஒழுங்கா தொட்டிக்குள்ள வாங்க” என்று அழைத்தாள்.

அவனும் பிகு பண்ணாமல் தொட்டிக்குள் இறங்கினான். திரும்பவும் அவன் மீது அவள் தண்ணீரை அடித்து விளையாட, அவனும் பதிலுக்கு செய்தான். இப்படியே மாறி மாறி இருவரும் விளையாடிக் கொண்டிருக்க, எப்போது இவர்கள் விளையாட்டு திசைமாறி போனதென்று தெரியவில்லை.. கங்கா துஷ்யந்தின் அணைப்பில் இருந்தாள். தண்ணீரில் நனைந்திருந்த அவளின் மேனியில் உள்ள ஈரத்தை அவன் உதடுகளால் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தான். கை, கழுத்து, காது, நெற்றி, கன்னம் என ஒவ்வொரு பகுதியாக முன்னேறி வர, அவனுக்கு அவள் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருந்தாள். அவனது செய்கைக்கு முற்றுப்புள்ளியாய் அவன், அவள் இதழ்களை முற்றுகையிடும் முன், காதில் ரகசியமாக, “எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்று கேட்டதுதான், உடனே ஷாக் அடித்தாற்போல் அவனை விட்டு அவள் விலகினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.