“ப்ரியாதா சொன்னாங்களே எல்லாரும் குளிச்சு ரெடியாக லேட்டாகும்னு, நாமளும் இங்கயே இருந்துட்டு அப்றம் போகலாமே” என்று மனைவியிடம் இரகசியம் பேசிய ராகுலின் காதை பிடித்து திருகினாள் மைத்ரீ.
“ஆஆஆ....”என்று ராகுல் கத்தவும் ஜெய் திரும்பி இவர்களை பார்க்கவும், ராகுல் அசடு வழிந்தான். வெட்கத்தில் சிவந்திருந்த முகத்தை மறைத்தபடி நண்பனை கடந்து சென்றாள் மைத்ரீ.
கடைசியாக வந்த ராகுல், “நடத்து நடத்து” என்றுவிட்டு அவர்களின் சீட்டை கடக்க, “பாஸ்! கொஞ்ச இந்த லைட்டை நிறுத்துறீங்களா?” என்றவனை ராகுல் ஒரு மாதிரியாக பார்க்கவும், “நீங்க நினைக்குற மாதிரியில்ல...சரூ இன்னும் தூங்குறாளே, அதான்....” என்று அவசரமாக விளக்கமளிக்க...
“சரி...சரி.. நான் நம்பிட்டேன்” என்று மார்க்கமாக சொன்னவன் விளக்கை அணைக்கவும் மறக்கவில்லை.
ஏ.சி. அணைக்க பட்டிருக்கவும், அவன் நெஞ்சில் சாய்ந்து நிம்மதியான உறக்கத்திலிருந்தவளுக்கு சற்று நேரத்திற்கெல்லம் கசகசப்பாக இருக்கவும்
“புழுக்கமா இருக்கு” என்று சிணுங்கியவள், கழுத்தை துடைத்தபடி தூக்கத்தை தொடர்ந்தாள்.
‘உன்னால இங்க என் மானமே போகுது... ஆனா உனக்கு புழுக்கமா இருக்கா?’ என்று மனைவியின் சிணுங்கலுக்கு செல்லமாக கடிந்தவன், மூடியிருந்த ஜன்னலை திறந்து வைத்தான்.
கிராமத்திற்கே உரிய கலப்படமற்ற காலை நேரத்து குளிர்க்காற்று சில்லென உடலை அணைக்க, கைவளைவில் அழகான குழைந்தையாய் மாறியிருக்கும் மனைவியும், காதுக்கு இனிமையாக பறவைகளின் கொஞ்சும் கீதமும் மனதிலொரு இதத்தை பரப்பியது.
அந்த ரசனையில் கண்கள் மூடி தன்னை தொலைத்திருந்தவனை கலைத்தது, அவன் வயிற்றில் அலைந்து குறுகுறுப்பை ஏற்படுத்திய மனைவியின் கை. இடது கையால் அவள் கையை தடுத்தவன்,
“என்னடா தேடுற?” தூக்கத்தில் தான் எதையோ தேடுகிறாள் என்று புரிந்து கேள்வி கேட்க...
கையை நகர்த்த முடியாததில் புருவங்கள் முடிச்சிட, “ம்ஹூம்..” என்று சிணுங்கியவள் கையை உருவிக்கொள்ள முயல, தன் கையை விலக்கியவன், அவள் புருவத்தை நீவி விடவும், மறுபடியும் அவன் வயிற்றில் தேடினாள் சரயூ.
‘இம்சை புடிச்சவ! கையை வச்சுட்டு சும்மா இருக்காளா பாரு...எதையாவது செய்து என்னை சீண்டுறதே வேலையா போச்சு’ அவள் கையினால் உசுப்பிவிட பட்ட உணர்ச்சிகளை அடக்க முயன்றவன்,
“சரூமா, என்ன தேடுறாங்க?” ஒரு தந்தையின் பரிவோடு அவன் கேட்க....
“அப்பா! உங்க தொப்பை.... காணும்”
‘இதை தான் இவ்வளவு நேரமா தேடினியா? இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்குறது கஷ்டம்டா சாமி! அப்பா வச்சா புடிக்குற தொப்பை புருஷன் வச்சா மட்டும் கசக்குது’
“நீ கவலைபடாதடா! போலிஸ்ல சொன்னா கண்டுபிடிச்சு தந்துருவாங்க”
“ம்ம்... சரிப்பா!” என்றவளின் உதடு சிறிதாக விரிந்து பழைய நிலைக்கு திரும்பியது.
இவன் சொன்னதை அப்படியே நம்பி ஏற்கும் சரயூ, ஜெய்க்கு மிகவும் புதியவள். அவன் சொன்னதை ஒரு ஆர்க்யூமெண்ட் இல்லாது அவள் ஒப்பியதே கிடையாது. இன்றோ, சிறு குழந்தை கூட நம்ப மறுப்பதை அவன் சொன்னபோதும் சரியென ஏற்றது ஆச்சரியம். அது அவளின் மனதில் அவளுடைய அப்பாவிற்கான இடத்தை மிகத் தெளிவாக காட்டியது.
சட்டென அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து, அவன் வலது கன்னத்தில் இதழ் பதித்தவள், “குட் நைட் பா!.... என்னை பெட்ல விட்றுங்க பா....ப்ளீஸ்” என்றுவிட்டு அவன் நெஞ்சில் புதைந்து, கைகளை அவன் கழுத்துக்கு மாலையாக்கினாள்.
பஞ்சத்தில் சிக்கியவனுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது மனைவியின் எதிர்பாரா முத்தத்தில்... அவளை இறுக்கி அணைத்து சரயூவின் செயலுக்கு பதில் சொல்லிட துடித்த மனதை அடக்கியவன், அவளின் முகத்தை ரசிக்க... பொழுது புலர்ந்தது. இப்படியே இருந்துவிட அவனுக்கு ஆசை தான்... ஆனால் அவர்கள் வந்திருப்பது குல தெய்வ வழிப்பாட்டிற்காக, அதுவும் காலையில் பூஜையை முடித்து, வீட்டிற்கு திரும்பிவிடும் திட்டத்தோடு... வேறுவழியின்றி சரயூவை எழுப்ப வேண்டியதாயிற்று.
அவள் தலையை வருடியவன், கலைந்திருந்த அவள் கூந்தலை காதோரமாக ஒதுக்கி, “சரூ எழுந்துக்கோடா விடிஞ்சிருச்சு” மிக மென்மையாக அவளை எழுப்பினான்.
அவன் வருடலில் சுகம் கண்டவள், விழித்து கொள்ள மனமின்றி, “ம்ஹீம்...இன்னும் கொஞ்ச நேரம்...ப்ளீஸ்” என்று தூக்கக் குரலில் சிணுங்க, அதில் உருகினாலும், “நமக்காக எல்லாரும் வெய்ட் பண்றாங்கடா... இப்போ எழுந்துக்குவியாம்... நம்ம வீட்டுக்கு போயி எவ்ளவு தூங்கனுமோ தூங்கலாம்” என்று ஒப்பந்தத்தை முன் வைத்தான்.
“இல்ல! முடியாது” மறுத்துவிட்டு அவனுள் புதைய....அவனுள் ஏற்படும் மாற்றங்களை அடக்க முயன்றபடி, “ப்ளீஸ்டா...விழிச்சுக்கோ” இவன் கெஞ்ச..
மெல்ல கண்களை திறந்த சரயூவின் பார்வையில் மலர்ந்த முகத்துடன், “குட் மார்னிங்க் சரூ!” என்ற ஜெய்.
அவனை மயக்கும் அழகு முகத்தில் புன்னகை பூக்க, “குட் மார்னிங்க் சஞ்சு!” என்றாள் சரயூ, இன்னமும் தூக்கம் தெளியாத குரலில்.
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.