Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 17 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 17 - சசிரேகா

Aathibanin kaadhali

ன்பரசு இல்லம்

என வெளிசுவற்றில் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு இருந்தது. வீடு கூட ஏறக்குறைய பெரியதாகவே இருந்தது.

காரை விட்டு இறங்கிய ஆதிரா அந்த வீட்டையும் சுற்றி வேலை செய்கிறவர்களையும் பார்த்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

உள்ளே ஏதோ சத்தம் கேட்கவே சற்று நேரம் நின்று கவனிக்கலானாள்.

”டேய் யாருடா அங்க காபி போட்டுக்கொண்டுவா மாப்பிள்ளைக்கு” என அன்பரசு குரல் கோபமாக ஒலித்தது.

அவர் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தார் அவர் முன்பு அவர் மகளின் கணவர் அமர்ந்திருந்தார் தன் 2 மகன்களுடன்.

”மாமா இப்ப காபி குடிக்கிற நேரமா இது. குழந்தைங்க அம்மா வேணும்னு அழறாங்க.

 உங்க பொண்ணுக்கு வந்த திமிர பாருங்க சொல்லாம கொள்ளாம புள்ளைங்கள விட்டுட்டு அவ பாட்டுக்கு அம்மாவை பார்க்க போறேன்னு பாட்டி வீட்டுக்கு போயிட்டா

இதுதான் நீங்க பொண்ணை வளர்த்த லட்சணமா” என அன்புவைப் பார்த்து கோபமாக கத்தினான் சரவணன்.

“இரு சரவணா பொண்ணை செல்லம்மா வளர்த்துட்டேன் அதான் இப்படியெல்லாம் பண்றா

அவளை கெடுக்கறதே அவளோட அம்மாதான் எப்படியாவது அவளை கூட்டிட்டு வந்துடறேன்

 இதுக்காக நீங்க கோபப்படலாமா சொல்லுங்க” என சமாதானப்படுத்த முயற்சித்தார் அன்பரசு.

”இல்லை மாமா உங்க பேச்சை கேட்டுதான் வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஒத்துக்கிட்டு இத்தனை வருஷமா உங்களோட இந்த வீட்லயே நீங்க சொல்ற வேலைகளை செய்துகிட்டு வரேன்

ஆனா இன்னிக்கு என்னை மதிக்காம உங்க பொண்ணு போய்ட்டா இது சரியில்லை

அவள் மட்டும் என் வீட்ல இருந்திருந்தா இந்த அவமானம் எனக்கு வந்திருக்காது மாமா” என சரவணன் கத்தவும் அன்புவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வேலைக்காரன் வந்து ஆதிரா வந்திருப்பதை சொல்லவும் அன்பரசுவுக்கு கோபம் தலைக்கேறியது. விறுவிறுவென வெளியே வந்தார்.

அங்கே ஆதிரா கண்ணீருடன் நிற்பதைக் கண்டு அவரின் கோபம் கொஞ்சம் தணிந்தது.

மெதுவாக அவளிடம் பேச நினைக்கையில் அவளே அவரிடம் வந்து அழுதுக்கொண்டே பேசலானாள்

”அப்பா……”

என ஓவென அழுதுகொண்டே சொல்லவும் அன்பரசுவின் கோபம் ஓடியே போய்விட்டது.

என்னவோ ஆதிராவை தன் இன்னொரு மகளாக பாவித்து அவளிடம் ஓடிவந்தார் அவளது தோள்களை பிடித்துக்கொண்டு

”என்னம்மா என்னாச்சி ஏம்மா இப்படி அழற”

”அப்பா என்னை காப்பாத்துங்க”

”என்னம்மா சொல்ற என்னாச்சி” என அவளிடம் பேசும் போதே காரிலிருந்து இறங்கி வந்த பரதன் அதிர்ச்சியானான்.

திரும்பி போக நினைக்காமல் என்னடா இது இப்படி அண்ணி மாமாவை பார்த்து அப்பான்னு கூப்பிட்டு அழறாங்களே என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என்று அவர்களிடமிருந்து 10 அடி தள்ளியே நின்று கொண்டு கவனிக்கலானான்.

திலீபனோ வீட்டு சுற்று சுவர் மறைவில் நின்று கொண்டு உள்ளே நடப்பதை கவனிக்கலானான்.

“அப்பா என்னை ஏமாத்திட்டாங்கப்பா” என அவள் அழ அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை

சுற்றி முற்றும் பார்த்தார் அவரிடம் வேலை செய்யும் வேலைக்காரர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கவும் உடனே அவளை அழைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றார்.

 பின்னாடியே சென்ற பரதனும் வீட்டுக்குள் செல்லாமல் வீட்டு வாசலிலே நின்று கொண்டு எக்கி எக்கி உள்ளே என்ன நடக்கிறது என பார்க்கலானான்.

 திலீபனால் பார்க்க முடியவில்லை அதனால் அவன் ஆதிபனுக்கு போன் செய்தான்.

”ஹலோ”

திலீபன் மறுமுனையில்

”அண்ணா”

”என்ன திலீபா என்னாச்சி”

”அண்ணா இங்க பிரச்சனை வேற மாதிரி போகுது”

”அதுக்குள்ள அங்க போய் சேர்ந்துட்டாளா”

”பரதன் வேகமா காரை ஓட்டிக்கிட்டு வந்துட்டாண்ணா”

”இவன் ஒருத்தன் அவளை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வான்னு அனுப்பினா கொண்டு போய் விட்டுட்டு வேடிக்கை பார்க்கறானா”

”அவனை ஏண்ணா அனுப்புனீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ன செய்யப் போறாங்களோ தெரியலையே”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8  9 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 17 - சசிரேகாSaaru 2018-03-05 07:19
Super epi
Reply | Reply with quote | Quote
# saarusasi 2018-03-05 17:10
thank you
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 17 - சசிரேகாChillzee Team 2018-03-02 08:20
Aathira puthithaga enna yosikuranga? :-)

Avangaloda ella thittathirkum Athiban counter plan kaivasam vaithirupar poliruke :-)
Reply | Reply with quote | Quote
# சில்சி டீம்sasi 2018-03-02 11:11
நன்றி
ஆதிபன் எந்த ஒரு திட்டத்தோடும் எந்த ஒரு நோக்கத்தோடும் எதையும் செய்பவன் அல்ல. ஆதிரா போடும் திட்டங்களை தவடு பொடியாக்கும் திறமை ஆதிபனிடம் உண்டு. ஆதிரா புத்திசாலி என்றால் ஆதிபன் அதி புத்திசாலி. மேலும் வரும் எபிசோட்களை படித்து ஆதரவு தாருங்கள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 17 - சசிரேகாmadhumathi9 2018-03-02 05:34
:clap: haha aadhraa ninaippathu ondru,but nadappathu veru nadakkirathu.enna seiya pogiraal endru paarppom. wow Aadhiban summa veluthu vaangaraar. All the best aadhiban. Aadhiban thaan ellor meleyum evvalavu paasama irukkaar. Avanga maamaavaiyum pesi(unmai) kavuthuttaar.
Adutha epi innum interesting ah pogum ena ninaikkiren. :thnkx: 4 this epi.waiting to read more. (y)
Reply | Reply with quote | Quote
# மதுமதிsasi 2018-03-02 11:09
நன்றி கதையின் முதல் பாதி ஆதிராவின் வளர்ச்சியிருக்கும் கதையின் பின் பாதி ஆதிபனின் புத்திசாலித்தனமும் அன்பு பாசம் மட்டுமே இருக்கும். ஆதிராவும் சரி ஆதிபனும் சரி ஜாடிக்கு ஏத்த மூடி போலவே இருப்பார்கள். இனி வரும் எபியும் சுவார்யமானதாகவே இருக்கும் படித்துவிட்டு கமெண்ட் தாருங்கள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 17 - சசிரேகாAdharvJo 2018-03-01 20:58
hahahaha :dance: sema fun ma'am and well narrated epi :clap: :clap: Conversations ellame nala irundhadhu :hatsoff: But ena double game idhu :P ippadi thappu thappa goal podurangala adhira facepalm Adhiban kedicha chance la ellam sariyana goal pottu dhool kalakuraru looks like avaru vera etho master plan podura mathiri irukku :yes: :yes: idhu theriyama Anbu uncle flat agurare :P Over ah melting for adhira's drama. n avare oru bad SIL :D idhula avarukkum vandhu amanji irukuravru innum hopeless ore miratulala thirindhitare idha munnaye seithu irukalam pa ;-) Adhira ippa kuda than seyalukk regret seyaramathiri theriyala mmmmm avangala poo chetti thooka vituruvaro :Q: The arguments went out well so ini ena nadakumn therindhu kola waiting. Thanks for this entertaining update ma'am.
Reply | Reply with quote | Quote
# ஆதர்வ்sasi 2018-03-01 23:11
இத்தனை வாரமா நான் எழுதின கதையை படித்து பார்த்து அதற்கு தரமான கமெண்ட் எழுதியதற்கு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து என்னுடைய கதையை படித்து ஆதரவும் கமெண்ட்டும் தாருங்கள் நன்றி
Reply | Reply with quote | Quote
# ஆதிபனின் காதலி - 17 - சசிரேகா-sasi 2018-03-01 19:10
இன்றைய எபிசோட் ரொம்ப நல்லாயிருக்கும் பஞ்சாயதெல்லாம் உயிரோட்டமா இருக்கு. ஆதிபனின் பதில்கள் ஒவ்வொன்றும் பாராட்டுக்குரியது. அருமையான எபிசோட். உயிரோட்டமான காட்சி. படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள் நண்பர்களே
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top