(Reading time: 15 - 30 minutes)

சற்று மிரட்சியுடனே இருவரும் அவரது அறைக்குள் அடியெடுத்து வைத்தனர்.

“சிகிச்சை முறையை யார் செய்தது” எரிமலை போல வெடித்தார்.

ஹர்ஷா ஹரிணி இருவரும் ஏதும் பேசவில்லை.

“யாருன்னு கேட்டேன்” மீண்டும் இடி முழக்கம்.

ஹரிணி ஹர்ஷாவின் கரத்தினைப் பற்றி அவனை சற்று பின் நகர்த்தி முன்னே வந்து நின்றாள்.

“சார் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எந்த ஆக்ஷன் எடுப்பதானாலும் என் மேல் எடுங்க. நாங்க முறையா எல்லா ப்ரோசீஜரும் பின்பற்றினோம். சிகிச்சை முறையை சரியாக செய்து நோயாளியை காப்பாற்றி இருக்கிறோம். நாங்க உங்களோட ஸ்டூடண்ட்ஸ், நீங்க டிரைன் செய்திருக்கீங்க எங்களை. ஒரு டாக்டரா உயிர் காப்பாற்ற அவசர சிகிச்சையா என்ன செய்யணுமோ அதை தான் செய்தோம்” தலையை நிமிர்த்தி தீர்க்கமான குரலில் தைரியமாக சொன்னாள் ஹரிணி.

ஹர்ஷவர்தன் அவளது இந்த திடத்தையும் தைரியத்தையும் கண்டு விழி விரித்தான். இந்த  திடமும் தைரியமும் அவன் அன்னையிடம் தான் அவன் இதற்கு முன் பார்த்திருக்கிறான்.

டாக்டர் துரை இப்போது சற்று அமைதியாக இருவரையும் பார்த்தார். ஹரிணி ஹர்ஷாவை மறைத்தாற் போல் நின்று கொண்டாள்.

“சிகிச்சை முறையை செய்தது யார்” சாதாரண குரலிலேயே வினவினார்.

“சார் ஐ வில் டேக் தி ரெஸ்பான்சிபிலிட்டி” மீண்டும் வலியுறுத்தி சொன்னாள் ஹரிணி.

“யார் செய்ததுன்னு  மட்டும் தான் கேட்டேன். அதற்கு பதில்” இப்போது அவர் குரல் உயர்ந்தது.

“சார் நான் தான் செய்தேன்” ஹர்ஷாவின் குரல் வெளிவந்தது.

“சார் நான் கம்பல் செய்ததால் தான் அவன் செய்தான். எந்த பனிஷ்மன்ட் கொடுப்பதா இருந்தாலும் எனக்கு குடுங்க சார் ப்ளீஸ்”  ஹரிணி இப்போது ஹர்ஷாவை நன்றாக மறைத்துக் கொண்டு அவரிடம் மன்றாடலாய் கூறினாள்.

டாக்டர் துரை அவளது செயலைக் கண்டு புன் முறுவல் கொண்டார். முதன்முறையாக அவர் புன்னகைப்பதைக் கண்டு அதிசயித்துப் போயினர் ஹரிணியும் ஹர்ஷாவும்.

பிரண்ட்ஸ், ஹர்ஷவர்தன் ஹரிணி இந்த இருவரின் பயணத்தைப் பற்றிய இத்தொடரில் அவர்கள் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த மருத்துவம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மருத்துவம் சார்ந்த சொற்கள், தொடர்கள், சூழ்நிலைகள் புரியும் படி உள்ளனவா. ஏதேனும் குறைகள், பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். தொடரை தொடர்ந்து எழுத எனக்கு உறுதுணையாக இருக்கும். நன்றி

முடிவிலியை நோக்கி ...

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1137}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.