(Reading time: 16 - 31 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 11 - மது

AT THE END OF INFINITY

Heart

டாக்டர் துரையின் புன்னகை ஹரிணிக்கு கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது. சரியாக அந்நேரம் அறையின் கதவை மெலிதாக தட்டும் சத்தம்  கேட்க “எஸ்” என டாக்டர் துரை குரல் கொடுத்தார்.

கதவைத் திறந்து கொண்டு அங்கே வந்த டாக்டர் மீனலோசினி ஹரிணி ஹர்ஷா இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

ஹரிணி ஹர்ஷா இருவருமே அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

“மினி வா வா சரியான நேரத்தில் தான் வந்திருக்க. ஹிஸ்டரி ரிபீட்ஸ் பட் திரைக்கதையில் கொஞ்சம் மாற்றம் இருக்கு. க்ளைமாக்ஸ் எப்படி போகும்னு தெரியலை” இப்போது இன்னும் அதிகமான புன்னகையுடன் ஒரு வித உல்லாச பாவத்துடன் அந்த சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டே சொல்லவும் தாங்கள் காண்பது கனவா என்று ஹரிணி ஹர்ஷா இருவருமே இமை தட்டினர்.

“அப்படியா, எங்க கேட்போம் இந்த புதிய கதையை” அவருக்கு சற்றும் சளைக்காமல் டாக்டர் மீனலோசினி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

“நீங்க ரெண்டு பேரும் அட்டென்ஷனில் ஏன் நின்று கொண்டு இருக்கீங்க. அங்கே உட்காருங்கள்” என்று பக்கவாட்டில் இருந்த பெஞ்ச்சை காண்பித்தார்.

அவர்கள் இருவரும் டாக்டர் துரையை பார்க்க அவரும் அங்கே சென்று அமருமாறு சைகை செய்தார்.

பின்பு நடந்த சம்பவத்தை அவரே கூறினார்.

“நீ சொன்னது சரி தான் பிடி. ஹிஸ்டரி ரிபீட் ஆகிருக்கு” இப்போது டாக்டர் மீனலோசினி மலர்ந்து சிரித்தார்.

“நான் தான் சொன்னேனே சின்ன மாற்றம்ன்னு. அன்னிக்கு நீ விட்னஸாக இருந்தாய், இன்னிக்கு இந்த குட்டிப்பொண்ணு டிபன்ஸ்ல வாதாடுது” ஹரிணியை கைகாட்டி சொன்னார்.

“ரியல்லி” என்றவர் ஹரிணியை பார்த்து புன்னகைத்தார்.

டாக்டர் பாண்டிதுரையும் டாக்டர் மீனலோசினியும் மதுரை மருத்துவக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

பாண்டிதுரை அப்போதிருந்தே சற்று முரட்டுத்ததுடனே தான் இருப்பார். மதுரையின் அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கடமை கண்ணியம் கட்டுப்பாடு விரும்பி.

மீனலோசினி மதுரையில் பிரசித்திபெற்ற மருத்துவ தம்பதியின் மகள். அவர்களுக்கு சொந்தமாக பெரிய நர்சிங் ஹோம் இருந்தது.

கல்லூரியின் இறுதி ஆண்டு வரையிலும் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டது கூட இல்லை. இறுதி ஆண்டின் தேர்வில் நிறைய மாணவர்கள் தேர்ச்சி பெற தவறியிருந்தனர். அதனால் ஹவுஸ் சர்ஜன் போது இருவரும் ஒரே டீமில் இருக்கும் படி ஆனது.

மீனலோசினி தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பார். ஆனால் பாண்டிதுரை வாக்குவாதம் செய்வதும் ஏதேனும் வம்புகளை இழுத்துக் கொள்வதுமாய் அவர் இருக்கும் இடம் ஒரே அமளியாக தான் இருக்கும். ஆனால் உண்மையான நேர்மையான விஷயங்களுக்காக தான் அவரின் குரல் ஒலிக்கும்.

ஒரு முறை அவர்கள் பேராசிரியர் தான் வந்து செய்வதாக சொல்லிவிட்டுச் சென்ற ஒரு சிகிச்சை முறையை துணிந்து நோயாளிக்கு செய்து விட்டார். அந்த நோயாளி நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்ததால் அவர் வேதனையை பொறுக்க இயலாது அவர் மேல் இரக்கம் கொண்டு தான் அதனை செய்தார். அவர் செய்தது மருத்துவ ரீதியிலும் சரியே.

ஆனால் அந்த பேராசிரியருக்கு ஈகோ. தான் வந்து செய்வதாக சொல்லிவிட்டு சென்றும் தன் பேச்சை மீறி யார் சிகிச்சை அளித்தது என்று கோபமுற்றார்.

துரை தான் அந்த சிகிச்சையை செய்தார் என்று  மீனலோசினிக்கு மட்டும் தான் தெரியும் நோயாளியை தவிர.

“யார் இதை செய்தது” பேராசிரியர் கேட்ட போதும் அமைதியாகவே இருந்தார்  மீனலோசினி.

“மீனா சொல்லு யார் இதை செய்தது” அவரை சுட்டிக் காட்டி கேட்கவும் துரையை கை காட்டினார்.

மீனலோசினி நினைத்திருந்தால் அதை செய்தது தான் என்று சொல்லியிருக்கலாம். அந்த பேராசிரியர் அவரின் அப்பாவிற்கு நெருங்கிய நண்பரும் கூட. அதனால் அவரை ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார். ஆனால் உண்மை விளம்பியாக செயல்பட்டு விட்டார்.

துரைக்கு அந்த துறையில் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை வழங்க மறுத்து விட்டிருந்தார்.

அவர் இப்படி சான்றிதழை மறுக்கக் கூடும் என்று  மீனலோசினி எதிர்பார்த்திருக்கவில்லை. உண்மையில் துரை செய்தது சரியான ஒன்றே.

இதை தாமதமாக தான் உணர்ந்தார். துரையைத் தேடிச் சென்று அவர் முகத்தைக் கூட ஏறிட்டு பார்க்க முடியாமல் தலையைக் குனிந்த வண்ணம் மன்னிப்பு கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.