(Reading time: 21 - 42 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 25 - தீபாஸ்

oten

டந்த விஷயம் அனைத்தையும் கேட்ட குமரேசனுக்கு தன தங்கைக்கு உதவிசெய்த ஆதித்தை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடியிருக்க வேண்டும் அதைவிட்டு அவனையும் தனது தங்கையையும் ஒன்றாக பார்த்த அன்று என்ன ஏது என்றுகூட விசாரிக்காமல் தான் மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்த அந்த முரளிதரனின் முன் அவமானம் அடைந்துவிட்டோம் என்ற எண்ணத்தில் கண்மூடித்தனமாக அன்று நடந்துகொண்ட விதத்தை எண்ணி வருத்தம் கொண்டான் குமரேசன்.

ஆதித்திடம் தனது செய்கைக்கு வருத்ததுடன் மன்னிப்பை தெரிவித்தவன் மேலும் அழகுநிலாவை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய ஆதித்துக்கு உணர்ச்சிவசத்துடன் நன்றி தெரிவித்தான்.

மேலும் என் வீட்டு பெண்ணின் மானம் காத்த உங்களுக்கு எங்கள் குடும்பமே கடமைபட்டிருக்கு இந்த விஷயத்தை நாங்கள் அறிந்திருந்தால் உங்களுக்காக நாங்கள் உயிரையே தர ஆயத்தமாகியிருப்போம் இப்பொழுது என் தங்கையை உங்களுக்கு நாங்கள் கல்யாணம் செய்துகொடுத்ததை நினைத்து சந்தோஷம் அடைகிறேன் என்று கூறினான்.

காலையில் கண்விழித்து பார்த்த அழகி வெளிச்சம் ரூமில் லேசாக ஊடுருவியிருப்பதை உணர்ந்து லேட்டாயுருச்சே என்றபடி எழுந்தவள் பக்கத்தில் ஆதித் இல்லாததை பார்த்து பாத்ரூமில் இருக்கிறாரோ! என்று நினைத்தவள் இரவின் கூடலை நினைத்து முகம் சிவந்தாள். அப்பொழுது கடிகாரத்தை பார்த்தவள் காலை 7:30 என காண்பிக்கவும் அச்சோ அத்தைக்கு காலை எட்டுமணிக்குள் சாப்பாடு கொடுத்து மாத்திரை கொடுக்கவேண்டுமே நான் பாட்டுக்கு இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் வேலம்மாள் வந்து சமையலை ஆரம்பித்திருந்தால் நல்லது என்று நினைத்தபடி வேகமாக எழுந்து குளிப்பதற்கு மாற்றுடை எடுத்துகொண்டவள், “பாத்ரூமிற்குள் சென்ற ஆதித் இன்னுமா உள்ளே இருக்கிறார்!” என்று யோசித்தபடி பாத்ரூமின் கதவின் மேல் கை வைத்ததும் திறந்துகொண்டது

அங்கே ஆதித் இல்லாததை கண்ட அழ்குநிலாவின் மனது சோர்வடைந்தது ஒருவேளை முன் கூட்டியே எழுந்த ஆதித் தன்னை தூங்கட்டும் என எழுப்பாமல் கீழே சென்றிருப்பாரோ என்று எண்ணியவள் வேகமாக போய் குளித்து ரெடியானவள் தன்னை கண்ணாடியில் சரிபார்தாள் ஆதித்திற்காக அக்கறையாகவும் , ஜானகிக்காக வேகமாக செய்த தனது ஒப்பனையில் திருப்தியுற்றவள் கீழே இறங்கிச்சென்றாள்.

ஹாலில் ஆதித் இருக்கிறானா? என்று கண்ணால் அலசியபடி அடுப்படிக்குள் நுழைந்த அழகுநிலா அங்கு வேலம்மாள் இருப்பதை பார்த்து வந்துட்டீங்களா நல்லவேளை நேரமாகிடுச்சே என்று வேகமா வந்தேன் பாதி சமையலை முடிச்சுட்டீங்க போல என்றாள், பின் எண்ணெய் மற்றும் காரம் குறைவாதானே அத்தைக்கு சாப்பாடு ரெடி செய்திருகிறீங்க என்று கேட்டாள்.

ஜானகிபோலவே தன்னிடம் வேலைகாரி என்ற அலட்ச்சியம் காட்டாமல் இயல்பாக தன்னுடன் பேசி வேலையிலும் பங்கெடுக்கும் அழ்குநிலாவை பார்த்த வேலம்மாள். கண்ணு நீ சொன்னதுபோலத்தான் நான் அம்மாவுக்கு சமையல் செய்திருக்கிறேன் கொஞ்சம் முன்னாடிதான் ஹாலில் பேப்பர் படித்துகொண்டிருந்த அய்யாவுக்கு காபிபோட்டு கொடுத்தேன். இந்தா நீ மொதல்ல இந்த காப்பிய குடி அதுக்குள்ள அம்மாவுக்கு சாப்பாட்டை இதில் எடுத்துவச்சுடுறேன் நீ போய் உன் அத்தைக்கு கொடு என்றாள்.

அவள் கூறியதை கேட்டதும் அவருக்கு காபி கொடுத்துட்டீங்களா வேலம்மாள் என்று கேட்டாள்.

அவள் கேட்டதும் சின்னய்யாவையா கேட்குறீங்க? அவர் காலையில் நான் வாசல் தொளித்துகொண்டிருகும்போதே கிளம்பி காரெடுத்து வெளியில் போய்டாரே கண்ணு , நான் எதுவும் சின்னய்யாவிற்கு குடிக்க கொடுக்கலேயே என்று கூறினாள்.

அவள் கூறியதும் வெளியில் கிளம்பும்போது என்னை எழுப்பிச்சொல்லிவிட்டு போனால் என்ன என்று மனதினுள் சலித்தபடி வேலம்மாள் கொடுத்த காபியை அருந்தி முடித்துவிட்டு ஜானகிக்கு சாப்பாடு எடுத்துவைத்த டிரேயை எடுத்தபடி ஹாலுக்கு வந்தவள் ஆதித் உள்ளே நுழைந்ததை பார்த்ததும் வந்துட்டார் என ஆவலுடன் ஏரிட்டுப்பர்த்தவள் அவனை தொடர்ந்துவந்த தன அண்ணனை பார்த்ததும் சந்தோசத்தில் கண்கள் கண்ணீரால் தளும்ப அண்ணே இப்பவாவது என்னை பார்க்க வரணும்னு உனக்கு தோணுச்சே! நான் எப்படியிருக்கிறேன் என்னனு போன் போட்டுகூட உனக்கு விசாரிக்கதோனலையில்ல என்று இத்தனைநாள் தனக்கிருந்த ஆதங்கத்தில் கேட்டாள் அழகுநிலா

வேகமாக அவளின் அருகில் வந்த ஆதித், பேபி இப்போ எதுக்கு அழுகிற அதுதான் உன்னை பார்க்க வந்துட்டாரே ட்ரேயை என்னிடம் கொடு நீ வா வந்து உட்கார்ந்து உன் அண்ணனுடன் பேசு என்றபடி அவளின் கையில் இருந்ததை வாங்கினான். .

அப்பொழுது சமையல் அறையில் இருந்து வெளியே வந்த வேலம்மாளிடம் இந்த ட்ரேயை அம்மா ரூமில் போய் குடுத்துடுங்க என்றான் .

என் தங்கச்சியை யாரென்று தெரியாதபோதே ஆபத்தில் காப்பாத்திய மனுசருக்குத்தான் உன்னை கொடுத்திருகிறோம் என்கிறபொழுது எதுக்கு என் தங்கை பற்றிகவலை பட வேண்டும். உன் நலனில் இனி எந்த குறையுமே இருக்காது அழகி என்றான் குமரேசன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.