(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 08 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

தியின் உதடுகளில் தொலைந்திருந்த சூர்யா அவளை விட்டு விலகி அவள் முகம் பார்த்தான். கண்களை மூடி அமர்ந்திருந்தாள் மதி. அப்படியே அவளை எடுத்துக்க சொல்லி அவன் மனதும், உடலும் ஏங்கியது.

அவள் படிப்பை கருத்தில் எடுத்து கொண்டு, தன்னை சமாளித்து கொண்டான். அதன் பின் அவள் மனதும் வளர வேண்டும். "இனி சிறு பிள்ளை தனமாக இப்படி   சாக  போறேன் அப்படிங்குற முடிவை அவள் எடுக்க கூடாது. அதுக்கு கொஞ்சம் அதிர்ச்சி அவளுக்கு கொடுக்கணும்",  என்று நினைத்தவன் "என்னை விட்டுட்டு போகணும், சாகணும்னு முடிவு பண்ணிட்டல்ல? இனி நீ ஹாஸ்டல் போ, எங்க வேணா போ. ஆனா என்கிட்ட மட்டும் பேசாதே", என்றான் கோபமாக.

ஆசையாக அவன் கொடுத்த முத்தத்தை  அனுபவித்து கொண்டிருந்தவளின் தலையில் இடியை  இறக்கி வைத்தான். "இப்படி திட்றவன், எதுக்கு இப்படி முத்தம் கொடுத்தான்?", என்று நினைத்து  குழப்பத்துடன்  அவனை பார்த்தாள் மதி.

ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவளை முறைத்து விட்டு, வெளியே சென்று விட்டான் அவன். அவனுடைய கோபத்தில் திகைத்து போய் அமர்ந்திருந்தாள்.

அவன் கோப பட்டது கூட அவளுக்கு பெரியாததாக தெரியவில்லை. அவனே சொன்னது போல் அவளை அவன் விரும்பும் போது, அவனிடமே சாக போகிறேன், ஹாஸ்டலுக்கு போகிறேன் என்று சொன்னால் யாருக்கு தான் கோபம் வராது?

அதை உணர்ந்து கொண்ட மதியும், அவன் கோபம் நியாயமே என்று நினைத்தாள். ஆனால் முத்தம்? அது எதற்காக தந்தான்? எவ்வளவு யோசித்தும் விடை தான் கிடைக்க வில்லை.

அறையை விட்டு வெளியே வந்த சூர்யாவோ அங்கு அமர்ந்திருந்த மதி வீட்டினர் யாரையும் கண்டு கொள்ளாமல் நேராக  மங்களம்  அருகில் சென்று "கடைக்கு போய்ட்டு வரேன்  மா", என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

"அத்தை அத்தை", என்று தன் பின்னாடியே சுற்றி திரிந்தவன் இன்று காட்டிய வெறுப்பு வள்ளிக்கு எரிச்சலை தந்தது. "எல்லாமே மதியால் தான்", என்று நினைத்த வள்ளிக்கு மதி மேல் மேலும் வன்மம் வளர்ந்தது. "சூர்யா என்னை வெறுக்க  அவ தான் காரணம்", என்று நினைத்து மனதுக்குள்ளே அவளை  திட்டினாள்.

நேராக நகை கடைக்கு சென்ற சூர்யா, மங்களம்  வாங்க சொன்ன அனைத்தையும் வாங்கினான். கடைசியாக கல்யாண மோதிரமும் ஒரு ஜோடி வாங்கினான்.

அனைத்தையும் வாங்கி கொண்டு திரும்பி வந்தவனுக்கும் "எதுக்கு அவ அழுதுட்டு இருக்கும் போது முத்தம் கொடுத்தேன்?", என்ற கேள்வியே ஓடி  கொண்டிருந்தது. "அவ அழ கூடாதுன்னு கொடுத்தேனா? ஆனா அவ அப்படி அழுதுட்டு இருக்கும் போது ஏன் கொடுத்தேன்?"

அவனுக்குமே விடையை கண்டு பிடிக்க முடிய  வில்லை. "என் பொண்டாட்டி, நான் எப்ப வேணும்னாலும் முத்தம் கொடுப்பேன்", என்று நினைத்து சிரித்து  கொண்டான்.

"ஆனாலும் வீராப்பா ஹாஸ்டல் போ சொல்லிட்டேன். அப்படி செஞ்சிருவாளோ? அப்படியே ஹாஸ்டல் போனாலும் போகட்டும். எப்படியும் ஒரு வருசம் அவளை பிரிஞ்சு இருக்க தான் செய்யணும். இப்பவே தினமும் பல முத்தம் கொடுக்க தோணுது. அது எல்லை மீறுச்சுன்னா, பின்ன கலை  காலேஜ்க்கு  வயித்தை தள்ளிட்டு தான் போவா", என்று நினைத்து சிரித்தான்.

அவன் வீட்டுக்கு வரும் போது, அனைவரும் ஹாலில் தான் அமர்ந்திருந்தார்கள். தன் அம்மாவை தேடியவன்  மங்களம்  அவளுடைய அறையில் துணி மடித்து  கொண்டிருப்பதை பார்த்து விட்டு அங்கே சென்றான்.

"இந்தாங்க மா, நீங்க சொன்னது எல்லாம் வாங்கிட்டேன். சரியா இருக்கா, அழகா இருக்கானு பாத்துக்கோங்க. நல்லா இல்லைனா நாளைக்கு மாத்திக்கலாம்", என்று கையில் கொடுத்தான்.

"நல்லா இருக்கு டா உன் நியாயம். வாங்குனது மதிக்கு. என்கிட்ட வந்து காட்டுற? அவளுக்கு புடிச்சிருக்கானு கேளு டா", என்று சிரித்தாள் மங்களம்.

"நாம அன்பா எதை கொடுத்தாலும் கலைக்கு புடிக்கும் மா. நீங்க பாருங்க. அப்புறம் நானே அவ கிட்ட காலைல கொடுத்துக்குறேன். அது வரைக்கும் உங்க கிட்டயே இருக்கட்டும்", என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

அந்த பையை ஹாலுக்கு எடுத்து வந்த மங்களம் "மதிக்காக அவ புருசன் வாங்கிட்டு வந்திருக்குற நகை பாருங்க", என்று அனைவரிடமும் காண்பித்தாள்.

அதை பார்த்து வள்ளிக்கு  வயிறு மேலும் எறிந்தது. "இந்த அனாதைக்கு  இவ்வளவு நகையா?", என்று பொறுமினாள்.

அறைக்கு சென்ற சூர்யா  கண்ணில் பட்டது, கட்டிலில் அமர்ந்திருந்த கலைமதி தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.