(Reading time: 16 - 32 minutes)

"இந்த வீட்டை விட்டு, என்னை விட்டு போக போறேன்னு சொன்னது நீ தான் கலை. நான் உன்னை போக சொல்லலை. நீ போறது கஷ்டம் தான். ஆனா உனக்கு பிடிக்காதவங்க வீட்ல நீ ஏன் இருக்கணும்? நமக்கு கல்யாணம் நடந்ததே தப்பு. நீ நல்ல படிச்சு வேலைக்கு போயிருப்ப. வேற நல்ல மாப்பிள்ளையா, அதுவும் உனக்கு மனசுக்கு புடிச்சவனா கிடைச்சிருப்பான். அம்மா அவசர பட்டுட்டாங்க. வேணும்னா என்னை விட்டு போன பிறகு வேற மாப்பிள்ளை...", என்று சொல்ல வந்தவனின் வாயை தன் விரலால் மூடினாள் மதி.

அவளையே இமைக்காமல் பார்த்தான்.

கையை விலக்கி கொண்டவள் "அப்படி மட்டும் சொல்லாதீங்க அத்தான். உங்களை விட நல்ல மாப்பிள்ளை, எந்த பொண்ணுக்கும் கிடைக்க மாட்டான்", என்று அழுகையினூடே சொன்னாள்.

அமைதியாக இருந்தான் சூர்யா. அவன் பதில் பேசாததால் "உங்களை தவிர  வேற  மாப்பிள்ளை எல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு நீங்க தான் வேணும்", என்றாள்.

"சரி சந்தோசம்", என்று சந்தோசமே இல்லாமல் சொன்னவன் மனது குத்தாட்டம் போட தயாராய் இருந்தது.

அவளும் இப்போது அமைதியாக இருந்தாள்.

"இன்னும் என்ன கலை? சரி கடைசி வரைக்கும் நாம தான் புருஷன் பொண்டாட்டி போதுமா? இப்ப ஹாஸ்டல் போறதுக்கு எடுத்து வை", என்றான்.

அடுத்த நொடி அவனை முறைத்தவள் "என்ன சும்மா சும்மா என்னை ஹாஸ்டல் போக சொல்லிட்டு இருக்கீங்க? அதெல்லாம் போக முடியாது", என்று மிரட்டலான குரலில் சொன்னாள் கலைமதி.

ஆச்சர்யத்தில் அவன் கண்கள் அகல விரிந்தது. "என்ன முழிக்கிறீங்க? உங்களை விட்டு, இந்த வீட்டை விட்டு நான் எங்கயும் போக மாட்டேன்", என்று சிரிப்புடன் சொன்ன மதிக்கு உள்ளே "அதெல்லாம் வேண்டாம் நீ ஹாஸ்டல்கே போயிருன்னு  சொல்வானோ?", என்று நினைத்து உதறல் எடுத்தது.

அவளை அப்படியே தூக்கி சுத்த வேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்கி விட்டு "அதெல்லாம் சரி பட்டு வராது கலை. நீ ஹாஸ்டல் போயிரு", என்று சொன்னான்.

கவலையாக அவனை பார்த்தவள் "பெத்த அப்பாவுக்கு தான் என்னை பிடிக்கலை. உங்களுக்கும் என்னை பிடிக்கலையா அத்தான்?", என்று கண்ணீருடன் கேட்டான்.

"இது தான் நீ கலை. உன்னால மாறவே முடியாது. எப்படி அந்நியன் மாதிரி நடந்துக்குற பாரு? இப்ப தான் உங்களை விட்டு போக மாட்டேன்னு தைரியமா சொன்ன. அடுத்த நிமிஷம் அழுதுட்டு இருக்க. உன்னால யார் என்ன சொன்னாலும் எனக்கென்னன்னு போக முடியாது. நம்மளை சுத்தி இருக்குறவங்க நல்லவங்களா இருக்கலாம், கெட்டவங்களா இருக்கலாம். அவங்களை யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கனு யோசிச்சிட்டு இருந்தாலோ, அவங்க பேசுற ஓவ்வொரு வார்த்தைக்கும் கலங்கிட்டு இருந்தாலோ, நம்ம வாழ்க்கையை தொலைச்சிட்டு தான் இருக்கணும். காலம் முழுக்க உன் கூட வர போறது நான் மட்டும் தான். நான் எப்படினு தான் நீ யோசிக்கணும். நான் எதாவது உன்னை காய படுத்தினா தான் நீ கலங்கனும். கலங்க கூட வேண்டாம். நான் என்ன செஞ்சாலும் என் சட்டையை பிடிச்சு கேள்வி கேளு. தப்பு பண்ணிருந்தா செருப்பால கூட அடி. இது நம்ம வாழ்க்கை. எப்ப நம்ம ரெண்டு பேருக்கும் கடவுள் முடிச்சி போட்டாரோ, அப்பவே நாம மட்டும் தான் நம்ம வாழ்க்கையை வாழனும்"

...

"நமக்கு நடுவுல வர எங்க அம்மா, அப்பா, உங்க அப்பா யாருக்குமே உரிமை இல்லை. நம்ம பிள்ளைங்களுக்கு கூட உரிமை கிடையாது. அப்படி இருக்கும் போது கண்டவங்க பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு என் பொண்டாட்டி கலங்கி நின்னா எனக்கு பிடிக்காது. உன் சித்தி நேத்து பேசுனது பெரிய வார்த்தைகள் தான். நான் இல்லைனு சொல்லலை. அதை நினைச்சு, நமக்குள்ள வர வேண்டிய சந்தோசத்தை இழந்துட்டு இப்படி அழுதுட்டு இருக்குற பொண்டாட்டி எனக்கு  வேண்டாம்"

...

"யார் என்ன சொன்னா எனக்கென்ன? எனக்கு என் புருஷன் தான் முக்கியம். மித்தவங்க பேசுறதை  காது கொடுத்து கேட்டா கூட கண்டுக்க மாட்டேன்னு நீ எனக்கு உறுதி கொடுத்தா  நீ ஹாஸ்டல் போக வேண்டாம். அப்படி இல்லையா எனக்கு இந்த அழுமூஞ்சி பொண்டாட்டி வேண்டாம். நீ கிளம்பி போயிட்டே இரு", என்று சொல்லி முடித்து விட்டு அவளையே பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.