(Reading time: 16 - 32 minutes)

"எனக்கு உங்க அன்பு வேணும் அத்தான். நீங்க என் லைஃப்ல வந்த அப்புறம் தான் அப்படியே சந்தோசமா இருக்கு. உங்களை விட்டு பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. நான் போக மாட்டேன். உங்க கூட இருக்குறதுக்கு அது தான் கண்டிசன்னா நான் இனி கண்டிப்பா அடுத்தவங்க பேச்சை கண்டுக்காம இருக்க முயற்சி பண்றேன். சின்ன வயசுல இருந்து எங்க சித்தி கிட்ட திட்டு வாங்குறேனா? அவங்க சத்தத்தை கேட்டாலே ரொம்ப பயந்து போயிறேன். தன்னால  அழுகை வந்துருது. இன்னைக்கு ரொம்ப பேசிட்டாங்க. அதான் அம்மா இருந்திருந்தா இப்படி எனக்கு ஒரு நிலை வந்திருக்குமான்னு தோணுச்சு. ஆனா எங்க அம்மா தான் எனக்கு இன்னொரு அம்மாவா உங்களை அனுப்பிருக்காங்களே. உங்களை விட்டு எனக்கு எப்படி போக முடியும். உடனே என்னோட குணத்தை மாத்திக்க முடியுமான்னு தெரியலை. ஆனா கண்டிப்பா இனி அவங்க பேசுறதை கேட்டு கஷ்ட படாம இருக்க உங்களுக்காக முயற்சி செய்வேன். ப்ளீஸ் ஹாஸ்டல் போக சொல்லாதீங்க அத்தான்", என்று சொன்ன அடுத்த நொடி அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் சூர்யா.

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்காததால் காலை சரியாக ஊன்றி சமாளிக்க முடியாமல் அவன் மேலே விழுந்தாள் மதி.

பூங்கொத்து போல் மேலே விழுந்தவளை அப்படியே அணைத்து கொண்டான் சூர்யா. 

ஆச்சர்யமாக அவனை பார்த்தாள் மதி. அவளை பார்த்து கண் சிமிட்டியவன் "என் பொண்டாட்டி இந்த அளவுக்கு திருந்துனதே போதும். கொஞ்சம் கொஞ்சமா நானும் மாத்திருவேன்", என்று சிரித்தான். 

"நான் ஹாஸ்டல் போக வேண்டாம் தான அத்தான்?"

"லூசு பொண்டாட்டி நான் ஹாஸ்டலுக்கு போக மாட்டேன்னு நீ உறுதியா சொல்லணும். என்கிட்ட உரிமையா பேசணும்னு தான் டி நான் நினைச்சேன். என்னால மட்டும் உன்னை பிரிஞ்சு இருக்க முடியுமா?"

"பிராடு அத்தான். அப்ப சும்மா தான்  ஹாஸ்டல் போக சொன்னீங்களா? நான் கிளம்பி இருந்தா போக விட்டிருக்க மாட்டிங்க தானே?"

"இல்ல கலை. நீ கிளம்பி இருந்தா உன்னை தடுத்திருக்க மாட்டேன். போ ன்னு விட்டுருப்பேன். உடனே கண்ணை வச்சு முழிக்காத. உன்னை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது தான். அது தான் உண்மை. ஆனாலும் உன்னை போக விட்டுருப்பேன்னு சொன்னதுக்கு ரெண்டு காரணம் இருக்கு?"

"என்ன காரணமாம்? என் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சிருப்பீங்க?", என்று சிணுங்கினாள் கலைமதி.

"இப்படி எல்லாம் சிணுங்காத கலை. உன் அத்தான் பாவம்"

"ஆமா, ஆமா ஹாஸ்டல் போக சொல்லிருப்பேன்னு சொல்ற நீங்க பாவமா போங்க?"

"லூசு அது இல்ல டி. முழுசா கேளு. ஒரு காரணம் இன்னைக்கு நீ அழுதது. அதை கண் கொண்டு என்னால பாக்க முடியலை டி. என் முன்னாடி நீ அப்படி உயிரே உருகி போற மாதிரி அழுததை  என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியலை. மறுபடியும் உன்னை யாரவது எதாவது சொல்லி மறுபடி அழுதேன்னா நான் செத்தே போயிருவேன். நீ படிச்சு முடிச்ச அப்புறம் அம்மா அப்பாவை கூட்டிட்டு நாம நாலு பெரும் சொந்த காரங்களை பாக்காத ஊருக்கு போகலாம்னு நினைச்சேன்"

"அத்தான்", என்று சொன்னவளுக்கு மறுபடியும் கண்ணீர் வந்தது அவன் காதலை நினைத்து.

"இப்ப தான அழாதேன்னு சொன்னேன்"

"இது சந்தோஷத்துல வர அழுகை, போங்க"

"போடி அழுமூஞ்சி", என்று அவள் மூக்கை பிடித்து கொஞ்சினான் சூர்யா.

"கொஞ்சினது போதும். ரெண்டாவது என்ன காரணம்னு சொல்லுங்க"

"ரெண்டாவது காரணம் என்ன தெரியுமா? நான் ஆசையா முத்தம் கொடுக்க உன் கிட்ட வரேன்னா?"

"ஆமா அதுக்கென்ன? எனக்கு வாய் எல்லாம் வலிச்சு போயிருது தெரியுமா? இதுல கடிச்சு வேற வச்சிருதீங்க? இதுல  என்ன காரணம் இருக்கு?"

"முழுசா கேளு டார்லிங்"

"ஹ்ம்ம்"

"அப்படி கிட்ட வந்து கிஸ் பண்றேனா? அப்ப எனக்கு என்னன்னவோ தோணுது. என்னையே என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியலை. அதனால தான் நீ படிச்சு முடிகிற வரைக்கும் ஹாஸ்டல்ல இருக்கட்டும்னு நினைச்சேன். நான் சொல்ல வரது புரியுதா?", என்று கேட்டான் சூர்யா.

"புரியுது, ஆனா என்னனென்னவோன்னா என்ன? அது தான் புரியலை", என்று அவனை பார்த்து அப்பாவியாக சொன்னாள் கலைமதி.

"என்னது புரியலையா? அட பாவி பொண்டாட்டி, முத்தம் அப்பறம் என்ன னு தெரியலையா டி?"

"முத்தமே தப்பு தான். ஆனா புருஷன் பொண்டாட்டிக்குள்ள தப்பு இல்லைனு காவ்யா சொன்னா. ஆனா என்னனென்னவோன்னா என்ன? அவ அன்னைக்கு எதோ பேசுனா? நான் முழிச்சேன்னா? அண்ணா கிட்ட கேளு. அவங்க சொல்லி தருவாங்க. அண்ணா ரொம்ப பாவம்னு சொன்னா"

அவளை எழுப்பி கட்டிலில் அவன் அருகே அமர வைத்தவன் "அட பாவி, உனக்கு அதுக்கப்புறம் என்ன நடக்கும் விசயமே தெரியாதா?", என்று தலையில் கை வைத்து விட்டு அமர்ந்து விட்டான். 

தித்திப்பு தொடரும்......

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1169}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.