(Reading time: 16 - 32 minutes)

ஆனாலும் போர்வையை எடுத்து கொண்டாள். அப்போது "கலை", என்று அழைத்தன சூர்யா.

மேலே படுக்க சொல்வான் என்று நினைத்து ஆனந்தமாக அவனை பார்த்தாள் கலைமதி.

"நீ தான் என்னை விரும்பலையே? அப்புறம் எதுக்கு நான் மூடி படுத்த போர்வையை எடுக்குற? அங்க அம்மா புது போர்வை வச்சாங்களே? அதை எடுத்துக்கோ", என்று சொன்னான்.

உற்சாகம் வடிந்தது போல அவனை முறைத்து பார்த்தாள். அவள் முறைப்படி பார்த்து ஆச்சர்யத்துடன் அவளை பார்த்தான் சூர்யா. "இந்த பிள்ளை பூச்சிக்கு கோபம் வருதா? அதிசயம் தான்", என்று நினைத்து கொண்டான்.

அந்த போர்வையை கட்டிலிலே போட்டு விட்டு வெறும் தரையில் தலையணையை போட்டாள் மதி.

மறுபடியும் "கலை", என்று அழைத்தான் சூர்யா. இப்போதும் மேலே கட்டிலுக்கு அழைப்பான், என்று நினைத்து அவனை ஏறெடுத்து பார்த்தாள்.

"இல்லை ஹாஸ்டல் போக மறுபடியும் உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சிரேன்", என்று சொன்னான்.

கண்ணில் ஒரு வலியோடு அவனை பார்த்தாள்.  "ஹாஸ்டல் போக மாட்டேன்னு ஒரு வார்த்தை தைரியமா சொல்லு டி", என்று நினைத்து கொண்டு அவளையே பார்த்தான்.

அவளோ கண்ணில் வழிந்த நீரோடு  எழுந்து அவளுடைய பேகை எடுத்து வைத்தாள். அதை பார்த்து எரிச்சல் தான் வந்தது சூர்யாவுக்கு.

பையை எடுத்து வைத்தவளுக்கோ அவனை விட்டு பிரிய வேண்டும் என்று நினைத்து பார்த்தாலே இதயத்தை வாள் கொண்டு அறுபது போல இருந்தது.

தினமும் காதலாக பார்க்கும் அவன் கண்கள் அவளுக்கு  வேண்டும். அவன் ஆசையாக தரும் இதழ் முத்தம் வேண்டும். அந்த முத்தத்தை கொடுத்து விட்டு அவளை விட்டு விலக முடியாமல் தவிக்கும் அவன் தவிப்பை அவள் காண வேண்டும். அவனுடைய நெஞ்சத்தில் முகம் புதைத்து தூங்கும் அழகான தருணங்கள் வேண்டும். மொட்டை மாடியில் அவன் கை  வளைவில் அமர்ந்து கதை பேசும் ஆனந்த நொடிகள் அவளுக்கு வேண்டும்.

"இது எல்லாம் ஹாஸ்டல் போனா எப்படி கிடைக்கும்? இந்த ரூம்ல கிடைக்கும் அவனுடைய வாசனை ஹாஸ்டல் ரூம்ல கிடைக்குமா? வாழ்க்கைல காவ்யா அப்பறம் என்னையும் மனுசியா நினைச்சு என்னோட உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்த என்னோட அத்தானை விட்டுட்டு என்னால எப்படி போக முடியும்? எனக்கே எனக்குன்னு கிடைச்சிருக்க என்னோட அத்தான் கூட தான் நான் இருக்கணும். என்னால அவர் இல்லாம இருக்க முடியாது. யாரோ ஏதோ சொன்னாங்கனு எனக்கு கடவுள் கொடுத்துருக்குற வாழ்க்கையை இழக்கணுமா? கண்டிப்பா முடியாது", என்று நினைத்து கொண்டே கையில் இருந்த பையை கீழே வைத்து விட்டு அவனை நோக்கி நடந்தாள்.

அருகில் வந்து அவனையே பார்த்து கொண்டிருந்தவள் பார்த்து என்ன என்னும் விதமாய் கண்களை தூக்கி சைகை செய்தான். அதை கூட ரசிக்க தோன்றியது அவனுடைய கலைக்கு.

"காவ்யா சொன்ன மாதிரி  அத்தான் ரொம்ப அழகு தான்", என்று அவள் மனது அவனை பார்த்து ஜொள்ளு விட்டது.

அவள் பார்வையை அவனுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. சாதாரண பெண்ணாக இருந்தாலாவது இப்படி பார்த்தால் என்னோட பொண்டாட்டி என்னை சைட் அடிக்கிறே என்று நினைத்திருப்பான். ஆனால் அவனுடைய கலை தான் விசித்திரமானவளாச்சே? மனதில் இருப்பதையே வெளியே சொல்லாதவள் அவனை என்ன காதல் பார்வையா பாப்பா?"

"என்ன கலை? எதாவது தொலைச்சிட்டியா? எங்க இருக்குனு தேடி தரணுமா?", என்று கேட்டான்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை"

"அப்புறம் என்ன எடுத்து வைக்க எதாவது உதவி செய்யணுமா?"

"அதுவும் இல்லை"

"பின்ன என்ன தான் வேணும்?"

"எனக்கு ஒரு கேள்விக்கு விடை தெரியணும்"

"கேளு கலை"

"நான் ஹாஸ்டல் போய்ட்டா நீங்க சந்தோசமா இருப்பீங்களா?"

"வாறே வா. மேடம் செம கேள்வி கேக்குறா?", என்று குதித்தது அவன் மனது. "ரொம்ப குதிக்காத. இவளை புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம்", என்று அவனை அடக்கியது மனசாட்சி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.