(Reading time: 22 - 43 minutes)

அதற்கு சார் மேடம் கல்யாணப பெண்ணோட ரூமிற்குள் இருகிறாங்க நான் ரூமின் வெளியே நின்று கொண்டிருக்கிறேன் என்று கூறிக்கொண்டிருகும் போதே மணமகளை மலையும் கழுத்துமாக மனவறைக்கு அழைத்து வந்துகொண்டிருந்த கூட்டத்தை பார்த்து அந்த பாடிகார்ட் சார் பொண்ணுகூட எல்லோரும் வருகிறார்கள் அதில் மேடம் இருகிறார்களா? என்று பார்க்கிறேன் என்றபடி அங்கு இருந்த பெண்களிடையே அழகியை தேடினான் அதில் அவள் இல்லாததை பார்த்து டென்சன் ஆனவன் சார் நான் பார்த்துட்டு உங்களை கூப்பிடுகிறேன் என்றவன் தொடர்பை துண்டித்தான்

அதனை தொடர்ந்து ஆதித்தும் தனது கிளையன்டிடம் எக்ஸ்கியூஸ்மீ ஜென்டில் மேன் ஐ ஹவ் சம் அர்ஜென்ட் வொர்க், சோ ப்ளீஸ் ஐ லீவ் பர்ஸ்ட். என்றவன் தனது பி ஏவிடம் டேக் கேர் என்று கூறியவன் அவர்களின் பதிலை கூட தெரிந்துகொள்ளாமல் விரைந்து சென்று தனது காரை திருப்பி மண்டபத்தை நோக்கி செலுத்தினான் மண்டபத்தில் அழகியை அவன் ட்ராப் செய்துவிட்டு வந்து ஒருமணி நேரத்துக்கும் மேல் ஆகியிருந்தது..வேகமாக அவன் விரைந்து மண்டபத்தை அடைந்து உள்ளே நுழைந்தவன் அவனை எதிர்கொண்டு டென்சனுடன் வந்துகொண்டிருந்த பாதுகாவலர்களை பார்த்ததும் என்ன ஆச்சு? என்று கர்ஜனையுடன் கேட்டான் .

சார் மேடம் பெண்ணோட ரூம்குள் போகையில் அங்கெ ஜென்ஸ் நாட் அலவுடு என்று கூறியதால் நாங்கள் வெளியிலேயே நின்றுவிட்டோம் .

அதன் பின்பு அவர்கள் மனமகளுடன் வெளியே வராததால் வேகமாக நாங்கள் அவர்களின் ப்ரெண்ட்ஸ் கிட்ட விசாரித்தபோது அந்த அறையின் மறுபுரம் உள்ள வாயிலின் மூலம் அவங்களும் மற்றும் சில அவங்களின் தோழிகளும் டைனிங் ரூமிற்கு பிரேக் பாஸ்ட் சாப்பிட போனதாக சொன்னார்கள் நாங்க அங்கேபோய் கேட்டபோது சாப்பிட உட்கார்ந்திருந்தபோது அழகுநிலாவை மணப்பெண் கூப்பிடுவதாக ஒரு சிறுமி கூறவும் நீங்க சாப்பிட்டுகொண்டிருங்கள் நான் என்ன என்று கேட்டுவிட்டு வந்து ஜாய்ன் செய்துகொள்கிறேன் என்று போனதாக அவர்கள் சொல்கிறார்கள்!

மணப்பெண்ணிடம் கேட்கலாம் என்று பார்த்தால் திருமணச்சடங்கு நடந்துகொண்டிருந்ததால் அவர்களிடம் விசாரிக்கமுடியவில்லை அதனால் மண்டபம் முழுவதுவும் அவர்களை தேடினோம் எங்கும் காணவில்லை என்று கூறினர்

அவர்கள் அவ்வாறு கூறியதும் ஆதித் தனது மொபைலை எடுத்து அதில் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் அழகுநிலா காணமல் போன விபரத்தை கூறி அவனுக்கு நரேனின் மீது இருந்த சந்தேகத்தையும் கூறிவிட்டு உடனே அவளை தேடும்படியும் கூறினான்.

அவன் கூறியதை கேட்டதும் அங்கு விரைந்து வந்த அந்த இன்ஸ்பெக்டர் அந்த மண்டபத்தின் வாசலில் இருந்த சிசிடி கேமரா பதிவை பார்வையிட்டனர் அது நரேனின் கார்தான் என்று தெரிந்ததும் சார் இது மினிஸ்டரின் மகன் சம்பந்தப்பட்டது அதனால் நேரிடையாக நாம அவங்களை என்கொயரி செய்யவோ, விசாரிக்கவோ முடியாது. நரேனின் காரை நிறுத்தினோம் என்று தெரிந்தாலே மறுநிமிடம் மேலிடத்தில் இருந்து பிரசர் பறந்துவந்துடும் அதனால என்று ஒருநிமிடம்..... தயங்கியவன் கொஞ்சம் டிரிக்கியாக தான் இதை ஹேன்டில் செய்யணும் ஆதித் சார்.

நான் அந்த மினிஸ்டரின் கையால் ஒருத்தன் என்னிடம் மினிஸ்டருக்காக ஒரு கொலைப் பலியை ஏற்று லாகப்பில் ஒருத்தன் இருக்கிறான் அவன் தப்பித்துவிட்டதாக கூறப்போகிறேன். ஏனெனில் போலீஸ் கஸ்டடியில் அந்த மினிஸ்டருக்கு வேண்டிய ஆள் இருப்பதால் அவனை என்கொயரி செய்து உண்மையை வரவைக்க முடியவில்லை. சோ அவனை என் கஸ்டடிக்கு கொண்டுவருவதற்காக அவன் தப்பிவிட்டான் என்று நம்பவைத்து என்னிடம் கொண்டுவரப்போகிறேன் .

அவ்வாறு தப்பித்தவன் கையில் மொபைல் ஒன்று இருப்பதாக கூறி அந்த மொபைலை ட்ரேஸ் பணியபோது அவன் மினிஸ்டரின் மகன் இப்பொழுது வெளியில் ஜாகுவார் காரில் போவதை பற்றிய இன்பர்மேசனை பெற்றதையும் அதன் அடிப்டையில் நரேனின் அந்த காரை அவன் எய்ம் செய்து ஆக்சிடன்ட் செய்யப்போவதாக கூறியதைக் கேட்டோம். அதனால் நரேனின் காரை செக் போஸ்டில் மடக்கி பிடித்து அவருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக போலீஸ் கஸ்டடிக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து வைக்க சொல்லி நிப்பாட்டப் போகிறேன். அதன் பின் அந்த நரேனின் மொபைல் நம்பரை அந்த அக்யூஸ்டின் மொபைல் மூலம் ரீச் செய்யும் பொது பிடிப்பதற்காக என்று கூறி நரேனின் மொபைல் நம்பரை ட்ரேஸ் பன்னுவதற்கு அவனின் நம்பரை வாங்கி அதில் வரும் போனின் மூலம் நாம் அழ்குநிலாவின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயலலாம் சார் என்று கூறினான்.

அவர் கூறியதைக் கேட்ட ஆதித், யா! குட் சார்... நீங்கள் உடனுக்குடன் நிலவரத்தை எனக்கு தெரிவித்துவிடுங்கள் நான் உங்க கூட வந்தால் அந்த நரேன் அலார்ட் ஆகிவிடுவான். சோ! நீங்க கிளம்புங்க என்று கூறியவன் அவர் போனதும் தனது காரை எடுத்துகொண்டு நேராக தனது ஆபீஸ் கம்ப்யூடர் சர்வீஸ் செய்துதரும் ஜேம்ஸினை பார்க்க விரைந்தான்.

ழகுநிலா காய்கறி மற்றும் பலசரகுகள் ஏற்றிவரும் டெம்போ வேனில் மயக்கநிலையில் மூட்டையாக கட்டப்பட்டு காய்கறி பலசரக்கு சாமானுக்கு இடையில் ஓர் மூட்டையாக பிரயாணம் செய்துகொண்டிருந்தாள்.

நரேன் தனது காரில் போகும் வழியில் இருந்த செக் போஸ்ட்டில் எல்லா கார்களையும் சோதனை போடுவதை தூரத்தில் இருந்து பார்த்த மாரி காரை ஓரம்கட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.