(Reading time: 22 - 43 minutes)

அபொழுது தயக்கத்துடம் உள்ளேவந்த மஞ்சுளாவையும் அவரின் பின்னால் நுழைந்த மாதேஷையும் பார்த்த ஆதித் வாங்க அம்மா என்றவன் மாதேஷின் அருகில் சென்று அவனின் முகத்தை பார்க்காமல், தேங்க்ஸ் நீ செய்த இந்த உதவியை நான் மறக்க மாட்டேன் என்று கூறியவன் நான் டாக்டரை பார்த்துவிட்டு வருகிறேன் என்று வெளியில் சென்றுவிட்டான்.

மாதேஷையும் மஞ்சுளாவையும் முன்புமாதிரி ஆதித் வெறுக்கவில்லை என்றாலும், ஏனோ அவனால் அவர்கள் இருவருடனும் சகஜமாக பேசமுடியவும் இல்லை. காலபோக்கில் இதுவும் மாறலாம்.

அழகுநிலா உடல்நிலை சரியானதும் மறுநாள் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்த ஆதித் வாசலில் ராசாத்தி மற்றும் அழகியின் அண்ணன், அண்ணி குழந்தையுடன் அவளுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிப் போனார்கள்.

அப்பொழுது தயக்கத்துடன் அங்குவந்த மஞ்சுளா மற்றும் மாதேசுடன் நடந்த விஷயம் கேள்விப்பட்டதால் ராசாத்தி மற்றும் அழகுநிலா ஆகியோர் சகஜமாக பேசினாலும் ஆதித்தால் அங்கே ஒன்றி இருக்க முடியவில்லை என்பதனை அவனின் அப்பாவும் அழ்குநிலாவும் உணர்ந்துகொண்டனர். எனவே அழகி வேலாயுதத்திடம், மாமா நானும் அவரும் நாளை அம்மாவுடன் குட்லாம் பட்டிக்கு போகிறோம் எனக்கும் அவருக்கும் கொஞ்சம் நடந்ததையெல்லாம் மறந்து ரிலாக்ஸ் ஆக கொஞ்சம் மாற்றம் தேவை என்று கூறினாள்.

வேலாயுதமும் அதற்கு ஒப்புக்கொண்டதால் அன்று இரவே பயணத்துக்கு தயாரானர்கள். ஆதித் தன கைவளைவில் அழகுநிலா இருக்கும் நிம்மதியிலேயே அன்று ஒருநாள் டென்சனில் ஓய்ந்துபோய் தூங்கிவிட்டான் .

றுநாள் எழுந்து குட்லாம்பட்டிகு போன அழ்குநிலாவையும் ஆதித்தையும் ஊரே ஒன்றுகூடி வரவேற்றது .தங்கள் ஊரின் பிள்ளை ஆபத்தில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்ததை கேள்விப்பட்ட கிராமத்து மக்கள் அவளின் மேல் முன்னால் இருந்த கால்புனர்வை மறந்து இப்பொழுது அவள் மீண்டுவந்ததை கொண்டாடினர் .

ஊருக்கு வந்த அழகுநிலா மொட்டைமாடியில் நிலா வெளிச்சத்தில் பாயில் அமர்ந்தபடி ஆதித்தின் தலையை மடிசாய்த்து அவனை கொஞ்சிகொண்டிருந்தாள் .

எப்பொழுதும ஆதித்தே அவளை முதலில் நெருங்குவான். ஆனால் ஊருக்கு வந்ததில் இருந்து அவள் காமிக்கும் நெருக்கத்தில் ஆதித் பித்தாகிப்போனான் என்னடி, உங்க ஊருக்கு வந்ததும்தான் இப்படி கொஞ்ச தோணுதா! என் பொண்டாட்டிக்கு. இதுவும் நல்லத்தான் இருக்கு மொட்டைமாடி சிலுசிலு இயற்க்கை காற்று என் வாழ்வில் “ஒளிதருமோ நிலவு” என்ற ஏக்கத்தில் இருந்த என்னை, நிலவொளியில் எனக்கு ஒளிசேர்க்கும் என் நிலவாக நீ என்றபடி அவளுடன் அவன் பேசிய கதைகளையும் கணைகளையும் ஆசையுடன் அவனுக்கும் வழங்கினாள் நம் அழகுநிலா .அவர்களின் வாழ்வில் இனி இன்பம் மட்டுமே நிறைந்திருக்கும் .

முற்றும்

Episode 26

{kunena_discuss:1144}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.