(Reading time: 22 - 43 minutes)

மாரி என்ன ஆச்சு! என்று கேட்டதும், தல செக் போட்டில எல்லாரையும் நிக்கவச்சு செக் பண்றாங்க. அப்போ டெம்போவை செக் செஞ்சா மூட்டையில் இருக்கிற அந்த பொண்ணைப் பார்த்து கண்டுபுடுச்சுட்டா என்ன செய்ய? என்றான்.

அவன் கூறியதைக கேட்ட நரேன், இப்போ எதுக்கு செக்கிங் நடக்குதுன்னு யாரிடமாவது விசாரிக்க முடியுமானு பாரு! நான் டெம்போ ட்ரைவருக்கு போன் செய்து எங்க வருகிறான் என்று கூறி செக் போஸ்டில் போலீஸ் கெடுபுடி இருப்பதை கூறி வேற ரூட் மூலமா அவனை டைவர்ட் செய்கிறேன் என்று மொபைலை ஆன் செய்தான் .

மாரி தான் மாமூல் கொடுத்து நண்பனாக்கிய போலீஸ் ஒருவனிடம் விசாரித்தான் அவன் கூறியதை கேட்ட மாரி அலார்ட் ஆகிவிட்டான் .

தல என்று கத்தியபடி....... இப்போ டெம்போ முக்கியமில்லை போலீஸ் செக் செய்வதே நம்மளைத் தேடித்தான் நான் விசாரித்தபோது அவன் கூறிய காரணம் எதுவும் எனக்கு சரியா படல நம்மள மோப்பம் புடுச்சுட்டாங்க போல. முதல காரை நான் ரிவர்ஸ் எடுத்து எக்ஸ்கேப் ஆக பார்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருகும் போத அவர்களை மடக்கியது போலீஸ் ஜீப் .

அப்பொழுது நரேன், நான் என் அப்பாவுடனும் என் வக்கீலுடனும் பேசிவிட்டு உங்க கூட வருகிறேன் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சொன்னாலும் நீங்க கேக்க மாட்டேங்கிறீங்க! அட்லீஸ்ட் நான் போனாவது பேசிக்கொள்கிறேன் என்று கடுப்புடன் பேசிக்கொண்டு மொபைலை எடுத்து கொஞ்சம் தனியாக போகும்போதே மாதேசிடம் இருந்து அவனுக்கு கால் வந்தது .

அதனை அட்டன் செய்த நரேன் , மாதேசிடம் நீ இப்போ எங்க இருக்க என்று கேட்டான் அதற்கு மாதேஷ் நீ வரச்சொன்ன உன் கெஸ்ட் ஹவுஸ் இல் இருக்கிறேன் என்னை வரச்சொல்லிட்டு நீ எங்கே இருக்குற நரேன் என்று கேட்டான். அவன் அவ்வாறு கேட்டதும் நரேன் ,டேய் மாதேஷ் இப்போ ஒரு காய்கறி டெம்போவில் அந்த ஆதித்தோட பொண்டாட்டியை மூட்டைகட்டி அங்கு தூக்கிட்டு வருவாங்க நீ ரூமில் அவளை அடைத்துவை என்று கூறினான்.

அவன் கூறியதைக் கேட்ட மாதேஷ் நரேன் வேண்டாம்டா! இப்போதான் ஒரு பிரச்னையை பேஸ் பண்ணிருக்கோம் அவளை விட்டுடச் சொல்லு என்ன இருந்தாலும் அவ எனக்கு தம்பி பொண்டாடிடா என்று கூறிய மறுநிமிடம் நரேன் கர்ஜித்தான் அவனிடம்,

“காட்டிட்டேல.... உன் புத்திய காட்டிட்டேல...., என்ன? புதுசா பாசம் பொங்கி வழியுதோ! இங்க பாரு மதேஷ், நீ வேணா கையாலாகாதவனா இருக்கலாம் ஆனால் என்னை சீண்டினவனை சும்மா விட நான் என்ன பொட்டையா? அந்த கெஸ்ட் ஹவுஸ்க்குள் யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் போகணும் என்று நினைத்தால் நான் மனதுவைத்தால் மட்டுமே உள்ளிருப்பவர்கள் வெளியேற முடியும் இந்த நிமிசத்தில் இருந்து அந்த மேட்டரை முடிகிறவரை நீ அங்க விட்டு வெளியேற முடியாது என்று கூறிகொண்டிருகும் போதே அவன் நீண்ட நேரம் மொபலில் பேசுவதை கண்ட போலீஸ் சார் லேட் ஆகிடுச்சு என்று கூறியபடி அருகில் வருவதை பார்த்த நரேன் தொடர்பை துண்டித்து அவருடன் இணைந்து நடந்து காரில் ஏறினான்.

அந்த காரின் முன்னேயும் பின்னேயும் போலீஸ் பாதுகாப்புடன் அவனது கார் சென்றது .

மாதேசுகு ஏற்கனவே அவன் அம்மாவிடம் பேசியதில் இருந்து தன் தாயினால் ஜானகி வாழ்வில் நடந்த அசம்பாவிதம் தெரியாமல் தான் வேறு அவசரத்தில் அவரின் சாவிற்கு காரணமாகிவிட்டோமே! என்று கில்டியாக பீல் செய்துகொண்டிருந்தவன் இப்போ நரேன் சொன்னதைக் கேட்டதும் ஆடிப் போய் விட்டான. அவனுக்கு ஏற்கனவே தெரியும் இபொழுது அவர்கள் இருக்கும் கெஸ்ட் ஹவுஸ். சுற்றி வனங்கள் உள்ள தனித்திருக்கும் ஒரு இடம். அந்த இடமே ஒரு பத்து ஏக்கர் அளவில் இருக்கும். அவ்விடம் முழுவதும் மினிஸ்டரின் அடியாட்களின் பாதுகாப்போடு எப்பொழுதும் இருக்கும். ஒரு ஈ காக்கா கூட அங்கே அவர்களின் கண்ணை மறைத்து உள்ளே வரவோ வெளியே போகமுடியாது என்பதனை தெரிந்து உணர்ந்தே இருந்தான். .

அழகுநிலா இங்கே உள்ளே வரும் முன்னே தடுத்தால்தான் உண்டு. வந்த பிறகு நம்மால் அவளை சேதாரம் இல்லாமல் வெளியே அனுப்ப முடியாது என்பதனை புரிந்துகொண்ட அவன் என்ன செய்ய என்று யோசித்தவன் டிரைவர் முருகனுக்கு மொபைலில் தொடர்புகொண்டான்

முருகன் அட்டன் செய்த மறுநிமிடம் மாதேஷ் முருகனிடம் முருகா ஆதித்தின் மனைவியை காய்கறி டெம்போவில் கடத்தி கொண்டு வந்துகொண்டிருகிரர்கள் நான் இப்போ இருக்கிற நரேனின் கெஸ்ட் ஹவுஸ்சில் என்று அதன் அட்ரசை கூறி அங்கு அவளை கொண்டுவருவதற்குள் காப்பாத்திவிடுங்கள். இங்கே உள்ளே வந்துவிட்டால் வெளியில் சேதாரம் இல்லாமல் போகமுடியாது என்று கூறிக்கொண்டிருகும் போதே ஆ... என்ற மாதேசின் சத்தமும் அத்துடன் மொபைலில் தொடர்பும் துண்டித்து போனது. எனவே முருகன் கலவரம் அடைந்தான்.

ஜேம்ஸின் இடத்தில் புயல்போல் உள்ளே வந்த ஆதித்தை பார்த்ததும் வாங்க சார் என்று ஜோம்ஸ் கூறியதை கண்டுகொள்ளாமல் அந்த ரூமில் நின்றுகொண்டிருந்த ஜேம்ஸின் உதவியாளரை பார்த்து அவுட் என்று கர்ஜித்தான் ஆதித்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.