(Reading time: 21 - 42 minutes)

தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ

inbame vazhvagida vanthavane

ஒரு நாள் சிரித்தேன்

மறு நாள் வெறுத்தேன்

உனை நான் கொல்லாமல்

கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா

மன்னிப்பாயா

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்

உள்ளே உள்ள ஈரம் நீதான்

வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்

மன்னிப்பாயா அன்பே

 

காற்றிலே ஆடும் காகிதம் நான்

நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்

அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன்

என் கலங்கரை விளக்கமேஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ

போவாயோ காணல் நீர் போலே தோன்றி

அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்

எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் நேரமாவதை உணர்ந்து முகத்தை துடைத்து தயாராகச் சென்றாள்..ஹாலிற்கு வர தமிழ் கண்மூடி சோபாவில் அமர்ந்திருந்தான்..அவள் சத்தம் கேட்டு திரும்பியவன்,

“வாவ் லுக்கிங் க்ரேட் நிரு..ஹரிஷ் கிளம்பிட்டேன்னு சொன்னான் அதுகுள்ள நா ரெடி ஆய்ட்டு வந்துரேன்..”

ஒன்றும் பேசாமல் பேசவும் தோன்றாமல் அவள் அனைத்து ஏற்பாடுகளையும் ஒருமுறை சரிப்பார்த்தாள்..ஹரிஷ் வந்ததை தெரிவிக்க அவனை தேடிச் செல்ல அதற்குள் அவனே வந்திருந்தான் அழகிய. நீல நிற சட்டையும் சாம்பல் நிற ப்ளேசருமாய் அம்சமாய் இருந்தான்..விழிவிரிய தன்னை பார்த்து நிற்பவளை கண்டவன் எப்படியிருக்கு உன் செலெக்ஷன் என மெதுவாய் கேட்க,

“ஹாங்ங்ங் நல்லாயீருக்குங்க..கலர் உங்களுக்கு ரொம்பவே சூட் ஆகுது..”

“ம்ம் நா கேட்டது என்னைப்பத்தி “,என கண்சிமிட்டி வந்தவர்களை கவனிக்கச் சென்றான்..

“வாவ்வ் அண்ணா கலக்குறீங்க..”என ஷாலினி அவனுக்கு கை கொடுக்க,

“டேய் தமிழ் என் தங்கச்சி பத்து நாள்ல உன்னையும் பானிபூரியா மாத்திட்டாளேடா”, என ஹரிஷ் பாவமாய் கூற

அனைவருமாய் சிரித்தனர்..அதற்குள் விருந்தினர்கள் வர ஆரம்பித்திருக்க ஒவ்வொருவரிடமும் அவளை உரிமையாய் அறிமுகம் செய்து அவள் விழியறிந்து தேவையுணர்ந்து தனிமை கொடுத்து என அக்கறையாய் பார்த்துக் கொண்ட போதிலும் தவறி கூட அவள்மேல் அவன் விரல்கூட படவில்லை..நாசூக்காய் யார் பார்வைக்கும் உறுத்தாத வாறு அவளிடமிருந்து நகர்ந்தான்…

அனைவரோடும் சேர்ந்து அன்றைய மாலை அழகாய் கழிந்தது..மிஸஸ் தமிழ் என ஒவ்வொருமுறை அழைக்கப்படும்போதும் மனதில் மலையோர குளிர் காற்று வீசி இதமளளிப்பதாய் தோன்றியது நிர்பயாவாற்கு..அனைவரும் கிளம்பிய பின் வீட்டை ஓரளவு க்ளீன் செய்து அவள் படுக்கச் செல்ல..

“நீ போய் தூங்கு நிரு ரொம்ப டாயர்டா தெரியுற எனக்கு ஒரு கால் பேச வேண்டியது இருக்கு ஒரு ஹாவ் அன் அவர்ல வரேன் ஓ.கே யா..குட் நைட்..”

அவளுக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது..இந்த பத்து நாட்களும் அவன் அருகாமையிலேயே தூங்கிப் பழகியவளுக்கு ஏனோ சட்டென தனிக்காட்டில் விடப்பட்டதாய் தோன்றியது..இருந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் தலையசைப்போடு தங்களறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்..அவள் உள்ளே சென்றதை உறுதிபடுத்தியவன் சரோஜாவிற்கு அழைத்தான்..

“சொல்லு தமிழு என்ன இந்த நேரத்துல..கெஸ்ட்லா வந்துட்டு போயாச்சா??”

“ம்ம் போயாச்சும்மா..”

“என்னடா குரலே சரியில்ல..”

“வந்து ஒரு சின்ன ப்ரச்சனைம்மா..”

“என்னடா???நிர்பயாவ எதாவது சொன்னியா??”

“நீயல்லவோ பெத்த தாய் ஏன்மா ப்ரச்சனைனாலே நாதான் எதாவது பண்ணிருப்பேனா என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு??”

“டேய் விஷயத்தை சொல்லு முதல்ல..”

எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் தடுமாறியவன்,”ம்மா அவ கழுத்து கீழே ஒரு காயம்…”,என என்ன சொல்வதென தயங்க,

“ம்ம் புரியுது சொல்லுடா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.