“என்ன டீ பொண்டாட்டி என்ன யோசனை??” என பின்னிருந்து அவள் கழுத்தை கட்டியவனை பார்த்தவளுக்கு சட்டென ஓர் யோசனை உதிக்க அவனுக்கு சிரிப்பை பதிலளித்தவாறு அவனோடு பேச ஆம்பித்திருந்தாள்..
அன்றிரவு மணி 12 ஆக பத்துநிமிடமாய் இருக்க தன்னவனின் பிடியில் இருந்தவளுக்கு பயம் அப்பி கொண்டது..அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான்..அவனை எழுப்பி தான் கூற விரும்புவதை கூறி வாழ்த்து சொல்ல எண்ணம் இருந்தும் ஏனோ தைரியம் மட்டும் வரமாட்டேன் என அடம்பிடித்தது…இப்படியே சிந்தனையில் இருந்தவள் எப்போது உறங்கினாளோ அவளுக்கே தெரியவில்லை..விழிக்கும் போது மணி அதிகாலை 5 என்று காட்டியது..
ஐயோ என்ன பண்ணித் தொலச்சுருக்கேன்..சரியான தூங்கு மூஞ்சி என்னோட இருக்குற பர்ஸ்ட் பர்த்டே அவரு என்ன நினைச்சுருப்பாரு..கடவுளே என்னையெல்லாம் என்ன பண்றது என தாராளமாய் தன்னை திட்டியவாறே குளித்து தயாராகி வேக வேகமாய் ஏதோ உணவு தயாரித்து விளக்கேற்றி தன்னவனை எழுப்பச் சென்றாள்..
அங்கு மீண்டும் அவனை கண்டு நாக்கு தானாய் ஒட்டிக் கொள்ள,அடடா தூங்குறவர பாத்தே இப்படி நடுங்கினா பர்த்டே விஷ் பண்ணா மாதிரி தான் என தலையில் அடித்துக் கொண்டாள்…வரவழைக்கப்பட்ட தைரியத்தோடு அவனை எழுப்ப,லேசாய் திரும்பியவன் புல் மேக்கப்பில் நின்றவளை கண்டு வேகமாய் எழுந்தமர்ந்தான்..
“ஏ ரசகுல்லா என்னதிது காலைலேயே புல் மேக்கப்ல ஓ நோ..நீயே புடவை கட்ட படிச்சுட்டியா??வெரி சேட் நீ ரொம்ப மோசம் டீ எனக்கிருந்த ஒரே வேலையையும் இப்படி பறிச்சுட்டியே..”
“அட கொஞ்சம் மூச்சு வாங்கிக் கோங்களேன் ஏற்கனவே நா பேசுறது கஷ்டம் இதுல நீங்களும் இப்படி பண்ணா நா என்ன தான் பண்ணுவேன்??”
பேசி முடித்தவளை அப்பட்ட அதிர்ச்சியை முகத்தில் காட்டியவாறு பார்த்தான்..
“வாவ் காலங்காலேலேயே இத்தனை அதிர்ச்சியா என் பொண்டாட்டி என்கூட இவ்ளோ பேசிட்டாளே..இன்னைக்கு சென்னைல மழையோ புயலோ கன்பார்ம்”, என தலையனையை எடுத்து மடியில் வைத்து கன்னத்தில் கை வைத்தான்..
“ப்பா போதும் போய் குளிங்க போங்க “,எனக் கூற எனக்கு எதுவும் சரியாப் படல என்றவாறே ஷெல்பை திறக்க போனவனை,
“அங்க எங்க போறீங்க??”
“அடியே துண்டு எடுக்க போறேன் அதுக்கு கூட உரிமையில்லையா??”என முறைத்தான்..
“எல்லாம் எடுத்து பாத்ரூம்ல வச்சாச்சு போங்க”
“நீ சரியில்ல ரசகுல்லா இரு வந்து கவனிச்சுக்குறேன்”, என்றவாறு அவன் உள்ளே செல்ல அப்போது தான் அவளுக்கு சுவாசமே சீரானதாய் தோன்றியது..
அவன் வந்த பின் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என மனதிற்குள் ஒத்திகை நடத்தியபடியே டேபிளின் மேல் எதையோ தேடுவது போல்திரும்பி நின்றிருந்தவளின் பின் மெதுவாய் வந்து தலையை உலுக்கியவன் அவள் பதறி திரும்பும்போது பிடிப்பதற்கு தயாராய் நின்றான்..
“என்ன கொஞ்ச நாளா நா குளிச்சுட்டு வர்றதுக்குள்ள ரூமை விட்டு ஓடி ஒளிஞ்சுக்குவ இன்னைக்கு அப்படி என்ன யோசனை???”
“அது வந்து.நா..”
எனும்போதே தமிழின் போனில் அழைப்பு வர எடுத்துப் பார்த்தால் சரோஜா தான் அழைத்திருந்தார்..அட்டெண்ட் செய்ய போனவனை தடுத்து மொபைலை தன் கையில் வாங்கியவள் அதை கட் செய்து தன் பின்னிருந்த டேபிளில் வைத்தாள்..
“என்னடீ ஆச்சு உனக்கு??அம்மா கால ஏன் கட் பண்ண குடு பேசலாம் என அவளை தாண்டி கையை கொண்டுபோக குனிந்தவனின் இதழோடு தன் இதழைப் பதித்திருந்தாள் அவனவள்..அவளின் நெருக்கம் அதிகரித்தை உணர்ந்தவன் இடையோடு பிடித்து தன்னோடு சேர்த்துக் கொண்டான்..அவன் பிடியின் இறுக்கத்தால் சற்று நிதானித்தவள் அவனைவிட்டு விலக எத்தனிக்க தமிழின் பிடி சற்றே தளர்ந்தது…பின் மெதுவாய் நகர்ந்தவன்,
“ஏ பொண்டாட்டி என் மேல தப்பு இல்ல இதுக்கு நா பொறுப்பே கிடையாது “என இன்னும் அவளை தன் பிடியிலேயே வைத்திருந்தான்..
ஹேப்பி பர்த் டே செல்வா” என. அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து அவனைப் பார்க்க,
“தேங்க் யூ சோ மச் மை டியர் பொண்டாட்டி..பெஸ்ட் பர்த் டே எவர்..லவ் யூ சோ மச்..”,என அவள் காதோர முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட,பெண்ணவளின் கைகளோ நடுக்கம் கண்டிருந்தது..அதை உணர்ந்தவன் விளையாட்டாய்,
“அடிப்பாவி கல்யாணமாகி ஒரு மாசத்துக்கப்பறம் தான் கிஸ் லெவல்க்கே வந்துருக்க இதுல எதுக்கு உனக்கு கை வேற நடுங்குது??”,என முன் நெற்றியில் தட்டினான்..
“எனிவே தேங்க் யூ அகெயின் பார் திஸ் வொண்டர்புல் கிப்ட்” என அவள் இதழ்தட்டி அவன் நகர எத்தனிக்க அவன் கரம்பற்றி நிறுத்திவள்,
“உங்க பர்த் டே க்கு எனக்கு ஒரு கிப்ட் வேணும் செல்வா”என மென்குரலில் பாதி தவிப்பும் பாதி பயமுமாய் கேட்டாள்..