பட்டாம்பூச்சி பருவம் தானப்பா அது..மிஞ்சி போனா ஒரு சாக்லேட்க்கு ஆசைப்பட்டு அவனை நம்பி அண்ணா இல்ல அங்கிள் தானனு அவன் வீட்டுக்கு போய்ருப்பாளா அந்த குழந்தை..அதுக்கு அவளுக்கு கிடைச்ச தண்டனை எரிச்சு சாம்பல் ஆக்கிருக்கான்..பெத்த மனசு எப்படி துடிதுடிச்சு போய்ருக்கும்..அந்த வயசு குழந்தையை எப்படி தப்பான கண்ணோட்டத்துல பாக்க முடியும்..இதவிட கொடுமை அவன் ஒரு சாப்ட்வேர்ல வேலை பாக்குறவனாம்..இவன்லா என்ன படிச்சு என்ன ப்ரோஜனம்…நிஜமா சொல்றேன் அவனை பாத்தா அந்த இடத்துலயே கொன்னுட்டு ஜெயிலுக்கு கூட போக தயார்..
நிரு..
இல்ல செல்வா..எனக்கு நடந்த கொடுமையப்போ எனக்கு இந்த தைரியம் வரல ஆனா இப்போ நிறையவே இருக்கு கல்யாண வயசுல இருந்த எனக்கே அது நரக வேதனையா இருந்தப்போ என்ன நடக்குதுனே புரியாம அந்த குழந்தை எவ்ளோ பயந்துருப்பா..ஏன் இப்படிலா நடக்குது..அந்தகாலத்துல பெண் குழந்தை பிறந்தா அர்த்தமேயில்லாம பயந்து அதை கருவுலயே அழிச்சாங்கா ஆனா இப்போ வயித்துல இருக்குறது என்ன குழந்தைனு தெரிஞ்சா பொண்ணுங்க பிறந்து என்ன கொடுமையெல்லாம் அனுபவிப்பாங்களோங்கிற பயயத்துலயே அழிச்சுடுவாங்க..செல்வா நம்ம சரோவ நல்ல படியா பாத்துக்கனும்ப்பா..
ஹே லூசு..
இல்லப்பா கேக்குறது அசிங்கமா இருந்தாலும் அதுதான் நிதர்சனம்..அவளுக்கு நாம அப்பா அம்மாவா இருக்க தேவையில்ல அவளோட ப்ரெண்டா எப்பவுமே அவளுக்கு துணையா இருக்கனும்..முதல் விஷயமே அவ எந்த விஷயமா இருந்தாலும் மறைக்காம நம்மகிட்ட சொல்ற அளவு நம்ம நடந்துக்கணும்..
ஒருபத்து வருஷம் முன்னாடி வர பொண்ணை பத்தி பெத்தவங்களோட அதிகபட்ச கவலையே அவ யாரையாவது லவ் பண்ணிடுவாளோ எதாவது தப்பான முடிவு எடுத்துருவாளோநு தான் நினைப்பாங்க ஆனா இன்னைக்கு இருக்குற நிலைமைல டெய்லி ஸ்கூல்க்கு காலேஜ்க்கு வேலைக்கு போய்ட்டு வர்ற தன் பொண்ணோ அக்காவோ தங்கையோ நல்லபடியா வீடு வரணும்ங்கிற கவலதான் அதிகமா இருக்கு..சொல்லப் போனா டெய்லி செத்து பிழைக்குற பொழப்பு..இதுக்கெல்லாம் காரணம் சட்டம் ஒழுங்கா இல்லாதது தான செல்வா..
நிரு அப்படி பொதுவா அதை மட்டுமே சொல்லிட முடியாது..ஆனா அதுவும் ஒரு முக்கிய காரணம்தான்..ஒரு பொண்ணை சீரழிச்சு நடுரோட்ல தூக்கி போட்டு போறவனுக்கு தையல் மிஷின் குடுக்குற நிலைமைல நம்ம நாடு இருக்குங்கிறது கேவலமான விஷயம்தான் ஆனா அதையும் தாண்டி ஒவ்வொருதனி மனுஷனுக்கும் அதுல பொறுப்பு இருக்கு நிரும்மா..
நீயே சொல்லு இருபது முப்பது பேர் கண்ணு முன்னாடி ஒருத்தன் ஒரு பொண்ணை வெட்டி வீசிட்டு போறான்..சரி யாரும் அதை அந்த செகண்ட் எதிர்பாக்கலனு வச்சுப்போம் வெட்டும் போது தடுக்கலனாலும் அதுக்கப்பறம் அவனை பிடிக்கனும்னு ஒருத்தருக்கு கூடவா தோணாது..சாட்சி சொல்லகூட யாரும் தைரியமா வரமாட்டாங்களே..
அதுவும் இந்த சட்டத்து மேல இருக்குற பயத்துனால தான செல்வா..வந்து சாட்சி சொன்னா நமக்கு என்ன ப்ரச்சனை வருமோ கோர்ட் கேஸ்னு இழுத்தடிப்பாங்களோ இல்ல நம்ம மேலயே கேஸை திருப்பிருவாங்களோனு பயம் இருக்கும்தான அப்படிதான நடக்குது..
ம்ம் நீ சொல்றது கரெக்ட் தான் ஆனா ஒருத்தரா சாட்சியா இருக்கும்போது தான அவங்களுக்கு இவ்ளோ யோசிக்க தோணுது..அங்கிருந்த எல்லாருமே அதுக்காக குரல் கொடுத்தா சட்டத்தால ஒண்ணும் பண்ண முடியாது இல்ல…எப்பவுமே நமக்கு இருக்குற மைண்ட் செட் யாராவது பாத்துப்பாங்க நமக்கெதுக்கு வம்புநு நினைக்குறது தான்..
தனியா நடக்குற விஷயங்களுக்கு நாம எதுவும் சொல்ல முடியாதுதான் ஆனா நம்ம கண்முன்னே நடக்குற அநியாயத்தை தட்டி கேக்கலாமே..ஒவ்வொருத்தரும் ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்கனும் நிரு..இதெல்லாம் பொதுபடையான விஷயங்களுக்கு சொல்றேன்..
ஒரு பொண்ணு மேல கை வைக்குறதுக்கு முன்னாடி ஒவ்வொரு ஆம்பளைக்கும் தன் குடும்ப பெண்கள் நினைவுக்கு வரணும்..எப்பவோ ஒரு ஷார்ட் லைன் படிச்சேன் இது சம்மந்தமா..
ஒரு பொண்ணு வேலை முடிஞ்சு அந்த ஆள்நடமாட்டமில்லாத தெருல நடந்து போறா தூரத்துல இருந்து அவளை பார்த்தவனுக்கு அவளை சீண்டிப்பார்க்க ஆசை வருது..அவ பின்னாடியே போறான்..அவனுகுள்ள இருக்குற மிருகம் அந்த பொண்ணு மேல கை வைக்க சொல்லுது கையை நீட்ட போற நேரம் ஆள் அரவம் உணர்ந்து அந்த பெண் திரும்ப அவனைப் பாத்து சிரிக்குறா..
”அண்ணா நீயா நா யாரோ என்னவோனு பயந்தே போய்ட்டேன்” இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆய்டுச்சு அம்மா போன் பண்ணி உன்ன பாக்க சொன்னாங்களானு அவபாட்டுக்கு பேசிட்டு வர ஒருநொடி தனக்குள்ள எழுந்த ஆம்பளைங்கிற மிருகத்துக்கு செருப்படி கிடைச்சுது..
இதுதான லைவ் நிரு அக்காவோ தங்கையோ இல்லனா கூட உன்ன பெத்தவ ஒரு பொண்ணுதான அவ உன்மேல எவ்ளோ பாசம் கனவு வச்சுருப்பா..அதுமாதிரிதான ஒவ்வொரு பொண்ணும் அவங்க குடும்பத்துக்கு அம்மாவா அக்காவா தங்கையா மகளா எத்தனையோஆசைகளோடும் கனவோடும் இருப்பாங்க..
கட்டின பொண்டாட்டியாவே இருந்தாலும் அவ விருப்பம் இல்லாம தொடுறதே கேவலம் இதுல எந்த உரிமையும் இல்லாம சொல்லப் போனா யாருனேதெரியாத பொண்ணை அழிக்குறதுக்கு பேரு என்ன சொல்ல..இப்படி தனிமனித ஒழுக்கம் கட்டுப்பாடு என்னைக்கு நமக்கே புரியோதோ அன்னைக்கு தான் இதெல்லாம் குறையும்..