“நிரு பர்ஸ்ட் டைம் நீயே வாய தொறந்து என்கிட்ட கேட்டுருக்க எப்படி முடியாதுநு சொல்லுவேன் என்ன வேணும்னு சொல்லு..”
“அப்பறம் பேச்சு மாறமாட்டீங்களே???”
“என் மேல நம்பிக்கையில்லையா??”,என அவள் கண்ணை பார்த்து கேட்டான்..
“எனக்கு..வந்து நமக்குனு …ஒரு குழந்தை வேணும்”, என நிதானமாய் அவனை நிமிர்ந்து பார்க்க,
என்ன விளையாடுறியா??போ போய் டிபன் எடுத்து வை என அவன் மீண்டும் நகர கூடிய மட்டும் தன் பலத்தை காட்டி அவனை பிடித்து நிறுத்தினாள்..பேச்சு மாறமாட்டேன்னு சொன்னீங்களே..
ஏன்டீ இப்படி பண்ற??ஒண்ணு பக்கத்துலயே வராம டார்ச்சர் பண்ற இன்னைக்கு என்னனா என்கூடவே இருந்து என்ன ஒரு வழி ஆக்குற..என் ன பாத்தா பாவமா தெரிலயா உனக்கு என அப்பாவியாய் முகத்தை வைத்திருப்பவனின் முகத்தை கையில் ஏந்தியவள்,
“செல்வா இப்போ இந்த செகண்ட் நா பேசுறதுதான் நிஜம்..உங்க நிர்பயாவா முழுசா என்ன ஏத்துப்பீங்களா??இத்தனை நாள்ல ஒருதடவை கூட புருஷனா நீங்க வரம்பு மீறினதே கிடையாது..அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க டிஸைட் பண்ணிணதா இருந்தாலும் இவ்ளோ அக்கறையா என்னை மட்டுமே நினைச்சு எனக்கு நல்லதா மட்டுமேநடந்துக்குறதெல்லாம் சாதாரண விஷயம் இல்லப்பா..
அப்படிபட்ட உங்களுக்கு இதைவிட பெருசா ஒரு கிப்டும் என்னால தர முடியாதுப்பா..நா உங்களுக்காக சகிச்சுகிட்டுலா இந்த முடிவை எடுக்கல.மனபூர்வமா முழு சந்தோஷத்தோட உங்களோட ஒரு அழகான வாழ்க்கைய ஆரம்பிக்க ஆசப் பட்றேன்..வில் யூ அக்செப்ட் மீ அஸ் யுவர் பெட்டர் ஹாவ்..என அவன் கையைப் பற்றிக் கொண்டாள்..
என்ன கூறுவான் தன்னவளுக்கு சமாதானமாய்..எத்தனை நம்பிக்கை எத்தனை எத்தனை காதல் அவள் பேச்சில்..பத்து நாட்கள் முன்பு வரை கூட சமனபடாத அவள் மனம் இந்தளவு மாறியிருப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருந்தான் அவன்..உண்மையான அக்கறையும் அன்பும் காதலும் எத்தனை பெரிய காயத்திற்கும் அருமருந்தாய்இருக்கும் என்பதை கண்கூட கண்டான்..தன்னவளை இடைபிடித்து தூக்கி டேபிளில் அமர வைத்தவன்,அவள் நெற்றியோடு நெற்றி உரச மூச்சுக் காற்று அவள் கன்னம் உரச கன்னத்தை அழுத்தமாய் வருடினான்..
“போலீஸ்காரன் பிடி கிடுக்குப் பிடியா இருக்கும் தப்பிக்கவே முடியாது பரவால்லையா???” என காதில் ரகசிமாய் கேட்க அவனோடு ஒன்றிக் கொண்டாள்..
சில வருடங்களுக்குப் பிறகு,
இரவு வேலை முடித்து தாமதமாய் வந்தவன் தன்னிடம் உள்ள சாவி கொண்டு திறந்துவர ஹாலில் இரவு விளக்கின் வெளிச்சத்தில் அமர்ந்திருந்தாள் நிர்பயா..
“ஹே நிரு என்ன அதிசயம் இன்னும் முழிச்சுட்டு இருக்க??மினி ரசகுல்லா தூங்கியாச்சா??”
“ம்ம் தூங்கிட்டாப்பா..எவ்ளோ பேச்சு பேசுறா எத்தனை கேள்வி கேக்குறா முடீல “,எஎன்றவள் குறையாய் கூறினாலும் குரலில் நிச்சயமாய் பெருமை இருந்தது..
“ம்ம்ம் அவ யாரு பொண்ணு???அப்படிதான் இருப்பா..சரி சொல்லு மேடம் எதை தீவீரமா யோசிச்சுட்டு இருக்கீங்க??”
“அதெல்லாம் ஒண்ணுமில்லயே சும்மா தூக்கம் வரல சரிநீங்க வரட்டுமேனு உக்காந்துருந்தேன்..”
“வாய் ஒண்ணுமில்லனு சொன்னாலும் கண் ஏதோ இருக்குனு கன்பார்மா சொல்லுதே???”
“உங்க போலீஸ் புத்தியே என்கிட்டயே யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா??”
“அட இது புருஷன் புத்திம்மா..உன் கண்ணை பாத்து என்னால கண்டுபிடிக்க முடியாதுங்கிறியா??”,என அவள் மடியில் தலைசாய்த்துக் கொண்டான்..
என்னதிது யூனிபார்ம் கூட கழட்டாம என வாய் கூறினாலும் கை தானாய் அவன் தலை கோதியது..
“இப்போ சொல்லு என்னாச்சு??”
புதுசா ஒண்ணுமில்லப்பா..வழக்கமா வர்ற நியூஸ்தான் ஆனா ஏனோ மனசைவிட்டு போகவே மாட்டேங்குது..
ஏசிபிக்கு தெரியாதா என்ன இந்நாளின் மனதை பதைக்கும் செய்தி எதுவென்று..
“அந்த பொண்ணை பத்தி சொல்றியா??”
ம்ம்ம் சின்ன பொண்ணுப்பா அவ..ஏழு வயசு என்ன தெரியும்..கொஞ்சமும் இரக்கமே இல்லாம..குற்றவாளிநு அவனை பிடிச்சப்போ அந்த அப்பார்ட்மெண்ட் காரங்களே எப்படி அடிச்சாங்க சாதாரண மக்களுக்கு வர்ற கோபம்கூட அந்த கோர்ட்டுக்கும் ஜட்ஜ்க்கும் வராதா என்ன????
என்ன பண்றது நிரு..போலீஸையும் மீறி கோர்ட்க்கு விஷயம் போறப்போ நாங்க எதுவும் பண்ண முடியுறதில்ல..
இல்ல எனக்கு புரியவேயில்ல..அவனோட அப்பன்லா மனுஷன்தானா நிஜமாவே..அந்த குழந்தையோட அப்பாகிட்டயே சொல்ருக்கான் நா என் பையனை வெளில எடுத்து காட்றேன் உன்னால ஆனத பாத்துக்கோனு..