(Reading time: 21 - 42 minutes)

“அம்மா..”

அன்னைக்கு அவளுக்கு புடவை கட்டி விட்டப்போவே பாத்து பதறிபோய் கேட்டேன் தமிழு அழ ஆரம்பிச்சுட்டா இன்னும் ரெண்டு மூணு தழும்பு கூட இருந்தது..என்ன பிறவிடா அவனெல்லாம்..அந்த சின்ன குழந்தையை இப்படி பண்ணி வச்சுருக்கான் என அவர் குரல் நடுங்க,

“அம்மா..அழறியா??”

இருடா நா வெளில வரேன் என்றவாறு வாசலுக்கு வந்தவர்,மனசு ஆறவேயில்லடா..அதைபத்தி உன்கிட்டேயும் என்னால பேச முடில சரி அவளே அதுகுள்ள மனசு மாறிக்குவானு விட்டுட்டேன்..கல்யாணத்துக்கு மறுநாள் அவ புடவைல வந்தத பாத்து ஒரு வேளை சகஜ மாய்ட்டாளோநு நினைச்சு சந்தோஷப்பட்டேன் என அவரும் மென்று முழுங்கினார்..

அவர் கூற வருவதன் அர்த்தம் புரிந்தவன் இல்லம்மா நா இன்னைக்கு தான் கவனிச்சேன்..ரொம்ப அழுது தீர்த்துட்டா அதுமட்டுமில்லாம என்னென்னவோ பேச எனக்கு கோபம் வந்து கொஞ்சம் ரூடா பேசிட்டேன்ம்மா..ஆனா இதை தவர அவளை என் வழிக்கு கொண்டு வர வேற வழியே இல்லம்மா..இருந்தாலும் மனசு உறுத்திட்டேயிருக்கு அதான் உன்கிட்ட பேசலாம்னு கூப்டேன்..

புரியுதுப்பா..கவலபடாத எல்லாம் சீக்கிரம் சரி ஆய்டும் நா முதல்தடவை பாத்த நிர்பயாக்கும் இப்போவுமே எவ்ளவோ மாறிருக்கா..அப்படி நினைச்சவுடனே சட்டுனு தூக்கி போடுற விஷயமா சொல்லு கொஞ்சம் கொஞ்சமா தான் சரி ஆவா..இருந்தாலும் இனி அவகிட்ட எதுவாயிருந்தாலும் பொறுமையா சொல்லு சின்ன பொண்ணு தான புரிஞ்சுப்பா..கண்டதை போட்டு குழப்பிக்காம போய் தூங்குடா..வச்சுட்றேன்..

போனை வைத்தவனுக்கு அவளை நினைத்து இன்னமும் வருத்தம் மேலோங்கியது..தானும் அவளை நோகடித்துவிட்டோமோ என தோன்ற மெதுவாய் அறைக்கதவை திறந்தவனுக்கு முதுகுகாட்டி சுவரோடு ஒட்டி உறங்கிக் கொண்டிருந்தாள்..தலையை வருட தானாய் சென்ற கைகளை கஷ்டப்பட்டு தடுத்து நிறுத்திவன் மறு ஓரமாய் படுத்து உறங்க ஆரம்பித்தான்..அடுத்து வந்த இரண்டு நாட்களுமே இதே போல் நகர பெண்ணவளுக்கோ நெருப்பின் மீது நிற்பதாய் இருந்தது..அதற்குமேல் பொறுக்கமாட்டாமல் அன்றிரவு தூங்காமல் அவனுக்காக காத்திருந்தாள்..அவள் தூங்கியிருப்பாள் என எண்ணி வந்தவன்அவளை பார்த்து என்ன செய்வதென தெரியாமல் கட்டிலில் அமர்ந்தான்..

“என்ன நிரு தூக்கம் வரலையா??என்னாச்சு??”

 என அவள் கண்ணை பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தவனை ஒன்றும் பேசாமல் இழுத்தணைத்துக் கொண்டாள்..சற்றும் தாமதிக்காமல் அவள் தலையை வருடியவன் அவளை விலக்கி அமர்த்த அவளே பேசட்டும் என காத்திருந்தான்..

“செல்வா ப்ளீஸ் நா தப்பு பண்ணிருந்தா என்ன திட்டுங்க சண்டை போடுங்க இல்ல நாலு அடி கூட அடிச்சுருங்க ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம்ப்பா ப்ளீஸ் “,எனும் போதே குரல் உடைய,

“எதுவாயிருந்தாலும் அழாம பேசு நிரு..”அதட்டினான்..

“நா இனி அப்படி பேசமாட்டேன்ப்பா..சத்தியமா இன்னும் கொஞ்சம் டைம் குடுங்க கண்டிப்பா முழுசா மாறிடுவேன் ஆனா அதுவரை நீங்க என்னவிட்டு தள்ளி போகாதீங்க..உங்க கையின் கதகதப்பு இல்லாம ஒருமாதிரி பயமா இருக்கு..நா உங்க மடிலயே படுத்துக்கிறேனே “,என குழந்தையாய் கேட்பவளை மறுப்பின்றி தன் மடியில் சாய்த்துக் கொண்டான்..

“லூஸு இதை செய்றதுக்கு உனக்கு ரெண்டு நாள் தேவைப்பட்டுச்சா??”,என தலையில் தட்டியவனை ஆச்சரியமாய் அவள் பார்க்க,

“என்ன முழிக்குற??நா அப்படி பேசிட்டு போனப்போவே வந்து நாலு அடி கொடுத்து ஏன்டா செல்வா இப்படி பண்றநு கேட்ருக்கலாம் தான??”

அவன் மார்பில் செல்லமாய் குத்தியவள் அவனை இடையோடு சேர்த்து கட்டிவாறு மடியில் படுத்துக் கொண்டாள்…..அடுத்து வந்த நாட்களெல்லாம் தேனிலவாய் மாறிப் போனது  இருவருக்கும்..நிர்பயா நிறையவே மாறியிருந்தாள்..எந்தவித மன உளைச்சலும் இன்றி சாதாரண வாழ்க்கை வாழ ஆரம்பித்திருந்தாள்..இருப்பினும் காதலர்களாய் மட்டுமே..

தமிழ் தினமும் எங்காவது அழைத்துச் சென்று வந்தான்..இருவரின் விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து ஒருவருக்கொருவர் உதவியாய் அழகாய் நாட்கள் நகர்ந்தது..தன்னையும் விட தன்னவனை உயிராய் நேசிக்க ஆரம்பித்திருந்தாள்..அப்படியிருக்க அன்று சரோஜா அவளை அழைத்து பேசிக் கொண்டிருந்தார்..

“நிர்பயா நாளைக்கு என்ன ஸ்பெஷல்??கிப்ட் எதாவது வாங்கினியா???”

“கிப்டா???எதுக்கும்மா??”

“அடப் பொண்ணே நாளைக்கு உன் வீட்டுகாரனுக்கு பொறந்தநாள் தெரியாதா உனக்கு???”

ஐயோ அம்மா எனக்கு தெரியாது..சாரி சாரி சொல்லிட்டீங்கல கண்டிப்பா சர்ப்ரைஸ் பண்ணி அசத்திடுறேன் என மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை..என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என ஏதேதோ எண்ணியவளுக்கு ஒன்றும் புரியவில்லை..அவனும் வீட்டிலேயே இருப்பதால் அவனை மீறி எங்கும் செல்லவும் முடியாது என்ன செய்வதென மூளையை குடைந்து ஒன்றும் தோன்றாமல் அப்படியே அமர்ந்துவிட்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.