பேப்பரை வாங்கிப் பார்த்து அது அவளது படிப்புக்கு தகுந்த வேலையாக இருந்ததால் பூமிஜாவும் கிளம்பினாள். எப்பொழுதும் போல் எளிமையாக, காட்டன் சேலையை எடுத்து கட்டும் பொழுது, சம்பந்தமே இல்லாமல், அவனது நியாபகம் வந்தது பூமிக்கு. அந்த நியாபகத்தை உதறியபடி விரைவாக கிளம்பினாள்.
மிகப் பெரியதாக இருந்தது அந்த கட்டிடம். உள்ளே சென்று வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் தனது விபரத்தை பதிவு செய்து காத்திருந்தாள். கூட்டம் அதிகமாகவே இருந்தது. நேர்முகத் தேர்வு விரைவாகவே நடந்தது.
நான்கு நிலைகளாக இருந்தது. ஒவ்வொரு நிலையையும் இலகுவாகவே கடந்து வந்தாள் பூமிஜா. நான்காவது நிலையில், இவளுடன் சேர்த்து ஐந்து பேரை தேர்வு செய்திருந்தனர்.
“சிறிது நேரம் காத்திருங்கள், கடைசியாக CEO உங்களது கோப்புகளை பார்த்ததும், நியமன பத்திரம் கொடுத்து விடுவோம்.” என்று கூறிச் சென்றாள் அவரது காரியதரிசி.
கால்மணிநேர காத்திருப்பிற்குப் பின் அங்கு வந்த அந்தப் பெண் மற்ற நால்வருக்கு மட்டும் நியமனப் பத்திரம் கொடுத்து அவர்களை அனுப்பி விட்டு, தனியாக பூமியிடம் வந்து “சாரி மிஸ் பூமிஜா, உங்களை மட்டும் எங்கள் CEO நிராகரித்து விட்டார். ஏன் என்றும் சொல்லவில்லை. இத்தனைக்கும் உங்களைத் தான் எங்கள் குழு முதன்மையாக தேர்ந்து எடுத்து இருந்தது.” என்றாள் வருத்தத்துடன்.
அதனைக் கேட்டு ஒன்றும் புரியவில்லை பூமிக்கு. ஏன் என்று தெரியாமல் அங்கிருந்து நகர மனம் வரவில்லை. “நான் ஒரு முறை உங்கள் CEO வை பார்க்க முடியுமா?” எனக் கேட்டாள் அந்தப் பெண்ணிடம்.
“சாரி மிஸ்டர் ஆதித்யா, முன் அனுமதி இல்லாமல் யாரையும் பார்க்க மாட்டார்.” என்றாள்.
அவளிடம் விடை பெற்று யோசனையுடன் லிஃப்டில் ஏறி, பொத்தானை அமுக்கினாள். அது நின்ற பொழுது கீழ் தளமா என்று பார்க்காமல், இறங்கி விட்டாள். அதன் பின்பே பார்த்தால் அது நடுவில் இருந்த ஒரு தளம். அதற்குள் லிஃப்ட் கதவை மூடி கிளம்பி விட்டது. சுற்றும் முற்றும் பார்த்த பொழுது அங்கிருந்த ஒரு அறை வாசலில் மிஸ்டர் ஆதித்யா விக்னேஷ் என்ற பெயர் பலகை தெரிந்தது. சரி வந்தது தான் வந்தோம், இவரையும் பார்த்து ஏன் என்று கேட்டுவிட்டே போகலாம் என்று, லேசாக கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்து விட்டாள் பூமி.
அங்கு அன்று, ஸ்டார் ஓட்டலில் பார்த்தவனைப் பார்த்ததும் ஸ்தம்பித்து தான் போனாள் பூமி.
தொடரும்...
{kunena_discuss:1170}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.