(Reading time: 22 - 43 minutes)

எனக்கு உயிர் கொடுத்ததுனாலயும், என்னை பெத்த அம்மாவுக்கு புருஷன் அப்படிங்குறதுனாலயும் தான் உங்களுக்கு மரியாதையே கொடுக்குறேன். கண்ட கண்ட கழிசடைகளை பத்தி எல்லாம் என்கிட்ட பேசி உங்க மூஞ்சுல முழிக்காத படி என்னை பேச வச்சிராதீங்க"

"ஏன் பா இப்படி எல்லாம் பேசுற? எனக்கு கஷ்டமா இருக்கு"

"அப்ப நீங்க பண்றது மட்டும் ரொம்ப சந்தோசமா இருக்கா? எங்க அம்மா செத்து போனதுல இருந்து என்னை நம்பிருக்கீங்களா நீங்க? அந்த பொம்பளை சொன்னது தான உங்களுக்கு வேதமாகிட்டு. நான் ஸ்போர்ட்ஸ் ல காலை ஓடிச்சிட்டு வந்தா, அந்த பொம்பளை எவன் கூடவோ சண்டை போட்டு காலை ஓடிச்சிட்டு வந்துருக்கானு சொல்லும். என்ன ஏதுன்னு கேக்காம என்னை போட்டு அடிக்க ஆரம்பிச்சீங்க. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிங்களா? மார்க் கம்மியா வாங்கிட்டான்னு அந்த பொம்பளை அப்படியே சொன்னா அதையும் நம்பி எனக்கு தண்டனை கொடுத்தீங்க. என்னைக்காவது என்னோட ஸ்கூல், காலேஜ்ல இருந்து உங்க பையனோட நடவடிக்கை சரி இல்லை. அவன் சரியா படிக்கலைன்னு உங்க கிட்ட கம்பளைண்ட் பண்ணிருக்காங்களா?"

....

"கேவலம் ஒரு பொம்பளை சொல்றதை நம்புற நீங்க இவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேனா ஆனது தான் அதிசயம். ஒழுங்கா படிக்காதவனுக்கு  தான் கோல்ட் மெடல் கொடுப்பாங்களா? பாரின்ல வேலை கொடுப்பாங்களா? என்னை பத்தி யோசிக்கிறதுல மட்டும் உங்களுக்கு மூளையா அந்த பொம்பளை செயல் படுவாங்க போல? இப்படி பட்ட அப்பாவை இப்படி பேசாம உங்க காலை கும்பிட்டு என்னை எவ்வளவு வேணாலும் அடிங்கன்னு சொல்லுவாங்களா? ஒரு பிஸ்னஸ் மேனா நீங்க ஜெயிச்சிருக்கலாம். ஆனா ஒரு அப்பாவா நீங்க தோத்து போய்ட்டிங்க? இனி உங்க பாசம் எனக்கு தேவை இல்லை. ஆனா எனக்கு என் தங்கச்சி வாழ்க்கை முக்கியம். அவளுக்கு கல்யாணம்னு பேச்சு வரப்ப கண்டிப்பா அந்த பொம்பளை அவளை ஒரு ஒன்னும் இல்லாதவனுக்கு தான் கட்டி கொடுக்க சொல்லுவா"

....

"ஒரு அப்பாவா இதை மட்டும் கேட்டுக்குறேன். என்னோட கல்யாண வாழ்க்கையை நான் அமைச்சிக்கிறேன். ஆனா எனக்கு என் தங்கச்சி சந்தோசமா இருக்கணும். அவ விஷயத்துலயும் இப்படி அந்த பொம்பளை பேச்சை கேட்டு முடிவு எடுத்தா அதுக்கப்புறம் என்னை நீங்க கொலைகாரனா தான் பாக்கணும். அப்படி அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க முடியலைன்னா அவளை என்கிட்டே அனுப்பிருங்க. நான் நல்ல படியா பாத்துக்குவேன். அவளையும் உங்களை மாதிரியே அந்த பொம்பளை மூளை சலவை பண்ணி வச்சிருக்கா. இத்தனை வயசுல நீங்களே திருந்தாதப்ப அவ சின்ன பொண்ணு. அவ மட்டும் திருந்திருவாளா? அந்த பொம்பளை பேச்சுக்கு தான் ஜால்றா போடுவா. ஆனா அவளை மாத்த எனக்கு தெரியும். எனக்கு இதையாவது செய்ங்க"

"நீ சொல்றதை எல்லாம் என்னால நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை. உன் சித்தி இப்படி செய்வாளான்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கு. ஆனா உன் விசயத்துல அவ செஞ்ச தப்பை கண்டு பிடிக்கிறேன் ஷியாம்"

"கண்டு புடிச்சு? கண்டு புடிச்சு என்ன பதவி உயர்வா வாங்க போறீங்க? அடுத்து அந்த பொம்பளை என்ன டிராமா போட்டாலும் அப்படியே நம்பி தொலைய போறீங்க. என்னமும் செய்ங்க. ஆனா என் தங்கச்சி விஷயம்?"

"அவளை நான் பாத்துக்குறேன் பா. இப்பவே யாருக்கும் தெரியாம மூணு பேருக்கும் சொத்தை பிரிச்சு எழுதிறேன். உன் சித்தியை கண்காணிச்சு தண்டிக்கிறேன் ஷியாம்"

"நல்லது. இப்பவும் சொத்து பிரிக்க நான் சம்மதம் எதுக்கு சொல்றேன்னா, அப்படி மூணு பங்கா பிரிச்சா தான் என்னோடதையும் சேத்து என் தங்கச்சிக்கு கொடுக்க முடியும். இல்லைன்னா அவளை நடு ரோட்ல நிக்க வச்சிருவா அந்த பொம்பளை. என்னோட பிரண்ட் அவனோட மனைவியையும் தங்கச்சியையும் கூட்டிட்டு இங்க ஊட்டிக்கு டூர் வந்திருக்கான். முடிஞ்சா என் தங்கச்சியை என் வீட்டுக்கு அனுப்பி வைங்க. இனி நான் அங்க வர மாட்டேன்"

"அவ வர மாட்டேன்னு சொல்லுவாளே பா"

"அது உங்க சாமர்த்தியம். இனிமேலாவது பிள்ளைங்க ஆசையை நிறைவேத்துறீங்களான்னு பாப்போம். எனக்கு என் தங்கச்சி என்கூட இருக்கணும்னு ஆசையா இருக்கு. என் ஆசையை சொல்லிட்டேன்.  அப்பறம் உங்க விருப்பம். நான் வைக்கிறேன்", என்று சொல்லி விட்டு வைத்து விட்டான் ஷியாம்.

வாழ்கையை முதன் முதலில் சரியான கோபத்தில் யோசிக்க துடங்கினார் மோகன். "விசாலம் என்கிட்டே நடிச்சிருக்காளோ? வாழ்க்கையிலே தொழிலை பாத்துக்கணும்னு ஆசை பட்டு என் பிள்ளைங்களை இழந்துட்டேனோ?", என்று எண்ணி கவலையாக இருந்தது மோகனுக்கு. ஷியாம் சொன்னது போல் அவனை பற்றி விசாலத்தை தவிர வேறு யாரும் குறை சொல்லியது இல்லை. அதை அப்படியே நம்பிய தன் மடத்தனத்தை இப்போது நொந்து கொண்டார்.

அந்த எண்ணத்துடனே கீழே வந்தார். அப்போது விசாலாட்சி மோகனின் முதல் மனைவியின் போட்டோவை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.