சூரியன் முகத்தில் அடிப்பது கூட தெரியாமல் இழுத்து மூடி தூங்கி கொண்டிருந்தாள் காவ்யா.
குளித்து முடித்து அவள் எப்போது வெளியே வந்து தரிசனம் கொடுப்பாள்", என்று காத்து கொண்டிருந்தான் ஷியாம் பிரகாஷ். சூர்யா மதியின் அறையும் பூட்டி இருந்தது.
குளித்து முடித்து ஒரு சுடிதார் அணிந்து கண்ணாடி முன்னே அமர்ந்து தலையை உலர்த்தி கொண்டிருந்தாள் கலைமதி.
படுக்கையில் படுத்து கொண்டே அவள் அழகை ரசித்து கொண்டிருந்தான் சூர்யா.
அவள் அவனை திரும்பி பார்த்ததும் தூங்குவது போல பாசாங்கு செய்தான். அவன் செய்கையில் சிரிப்புடன் அவன் அருகே நின்று கொண்டு "அத்தான், நீங்க நடிக்கிறதை நான் கண்டு புடிச்சிட்டேனே?", என்றாள்.
அடுத்த நொடி அவளை இழுத்து படுக்கையில் தள்ளியவன், அவள் மீது கவிழ்ந்து படுத்து கொண்டு அவள் முகம் பார்த்தான்.
"என்ன இது? இப்படி பண்றீங்க? விடுங்க அத்தான்", என்று சிணுங்கினாள் மதி.
"அதெல்லாம் முடியாது. கொஞ்ச நேரம் கை குள்ள இரு டி", என்று சொல்லி கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தான்.
"ஐயோ ச்சி, பல்லு விளக்கலை, போங்க"
"ஹா ஹா, பல்லு விளக்காம நான் உன்னை கிஸ் பண்ணதே இல்லையா? காதலுக்கும் காமத்துக்கும் சுத்தம்ன்னா என்னன்னே தெரியாது", என்று சொல்லி கொண்டே அவள் உதடுகளை சிறை செய்தான்.
அவனுடைய இதழ் முத்தத்தில் மூழ்கியவள், அவன் அசந்த நேரம் அவனிடம் இருந்து விடுதலை பெற்று "சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க. அண்ணா எங்கயாவது போகலாம்னு சொன்னாங்க", என்று புன்னகைத்தவாறே வெளியே சென்று விட்டாள். அவனும் புன்னகையோடு குளிக்க சென்றான்.
வெளியே வந்த மதியின் கண்களில் காவ்யா அறையையே நோட்டம் விட்டு கொண்டு அமர்ந்திருந்த ஷியாம் தான் பட்டான். அவன் கண்களை பார்த்தே அவன் மனது அவளுக்கு பிடி பட்டு போனது. அந்த சந்தோஷத்தில் அவன் முன்னே போய் மதி நின்ன பிறகும் அவன் கவனம் இவள் பக்கம் திரும்பவே இல்லை.
"அண்ணா, இது சரியே இல்லை", என்று மதி சொன்ன பிறகு தான் சுயநினைவுக்கே வந்தான் ஷியாம். அதுவும் அவள் என்ன கூறினாள் என்று கூட அவனுக்கு தெரியாது.
"நல்லா தூங்குனியா மா?", என்று நலம் விசாரித்தான்.
"அதெல்லாம் தூங்கினேன். ஆனா நீங்க தான் நைட் புல்லா தூங்காம இப்ப முழிச்சிகிட்டே தூங்கிட்டு இருக்கீங்க போல?"
"ஐயையோ அப்படி எல்லாம் இல்லையே"
"அதை தான் பாத்தேனே. நான் இவ்வளவு நேரம் இங்க தான் நிக்குறேன். நீங்க கண்டுக்கவே இல்லை. நான் பேசுனதை கூட நீங்க கவனிக்கலை"
"சாரி மா, ஏதோ ஒரு நினைப்புல இருந்துட்டேன். சரி டீ குடிக்கிறியா?"
"நீங்களா போட்டீங்க?"
"இல்லை, வேலைக்கார அம்மா வந்துட்டாங்க"
"அப்படியா சரி? நானே போய் கிச்சன்ல வாங்கிக்கிறேன்"
"ஹ்ம்ம் சரி மதி. அப்புறம் அந்த அம்மா கிட்ட மதியம் சமைக்க வேண்டாம்னு சொல்லிரு. மதியம் எங்கயாவது வெளிய சாப்பிட்டுக்கலாம் சரியா?"
"அண்ணா"
"என்ன மதி?"
"எங்கயாவது சேந்து வெளியே போனா வீட்ல இருந்தே சாப்பாடு கொண்டு போய் எதாவது மரத்தடில உக்காந்து எல்லாரும் சாப்பிடுறது நல்லா இருக்கும். நம்ம நினைச்ச நேரமும் சாப்பிட்டுக்கலாம். அப்படியே செய்வோமா?"
"நல்ல யோசனை தான் மதி. நான் இப்படி குடும்பமா எங்கயும் போனதே இல்லை. அதான் எனக்கு தெரியலை"
"நானும் என் குடும்பத்தோட எங்கயும் போனது இல்ல அண்ணா. இது தான் முதல் முறை, என் அண்ணன் குடும்பத்தோட டூர் போறேன்"
"ஹா ஹா, நான் உன் அண்ணன் தான். ஆனா நான் தான் உன் குடும்பத்துல சேந்துருக்கேன். எனக்கு இன்னும் குடும்பம் இல்லையே"
"யார் சொன்னா? அதான் பொண்ணு எல்லாம் பாத்தாச்சே. இன்னும் ஊருக்கு போய் பொண்ணு வீட்ல பேசி கல்யாணத்தை செய்றது தான் பாக்கி", என்று சிரித்தாள் மதி.
"மதி", என்று அதிர்ச்சியாக அழைத்தான் ஷியாம்.
"ரொம்ப சாக் வேண்டாம் அண்ணா. நான் மதியம் சமைக்க வேலைக்கார அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்", என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
"ஐயையோ இப்படி எல்லாரும் கண்டு பிடிக்கிற மாதிரியா நடந்துக்குறோம்", என்று நினைத்து அசடு வழிந்தவன் மறுபடியும் காவ்யாவின் அறையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
காவ்யா சமையலில் உதவி செய்து விட்டு வெளியே வரும் போது ஷியாமும், சூர்யாவும் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்கள். காவ்யா மட்டும் வந்த பாடில்லை.
"இவ எப்ப கிளம்பி நாம போக? இருங்க நான் எழுப்பிட்டு வரேன் ", என்று சொல்லி அவள் அறைக்கு சென்ற மதி காவ்யாவின் போர்வையை பிடித்து இழுத்தாள்.
"அம்மா இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்பு ப்ளீஸ்", என்று சிணுங்கலுடன் போர்வையை மூடி கொண்டாள் காவ்யா.
"ஏண்டி, திருநெல்வேலில இருந்து ஊட்டிக்கு தூங்குறதுக்கா வந்த?", என்று கேட்டாள் கலைமதி.
"என்ன? மதி கனவுல எல்லாம் வாரா?", என்று நினைத்து கண்களை திறந்த காவ்யாவுக்கு அப்போது தான் எங்கே இருக்கிறோம் என்ற உணர்வே வந்தது.
"ஐயோ சாரி டி, எல்லாரும் கிளம்பிடீங்களா? நான் பத்து நிமிசத்துல வந்துறேன் என்ன?", என்று சொல்லி விட்டு குளிக்க சென்று விட்டாள்.
தித்திப்பு தொடரும்......
{kunena_discuss:1169}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.