(Reading time: 23 - 46 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 13 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

பின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று வெகு தூரம் போக வேண்டாம் என்று நினைத்து அருகில் உள்ள இடத்துக்கு சுற்றி பார்க்க சென்றார்கள்.

மதியையும், சூர்யாவையும் தொல்லை செய்ய கூடாது என்று எண்ணி ஷியாமுடன் சேர்ந்து கொண்டாள் காவ்யா. அவனுக்கு அதுவே ஆனந்தமாக இருந்தது.

"பரவால்லயே உனக்கு மேனர்ஸ் எல்லாம் இருக்கு", என்று சொல்லி காவ்யாவை சீண்டினான் ஷியாம்.

"என்ன நக்கலா? இப்ப எதுக்கு மேனர்ஸ் பத்தி பேசுறீங்க சார்?", என்று கேட்டாள் காவ்யா.

"இல்லை புருசன் பொண்டாட்டியை தொல்லை செய்ய கூடாதுன்னு தெரிஞ்சிருக்கே. அதான்"

"ரொம்ப பேசாதீங்க. இது இப்ப உள்ள சின்ன பிள்ளைங்களுக்கு கூட தெரியும். எனக்கு தெரியாதா? எனக்கு எல்லாமே தெரியும்"

"எல்லாம்னா?", என்று சிரித்து கொண்டே கேட்டான் ஷியாம்.

"எல்லாம்னா எல்லாம் தான் போதுமா?", என்று சொல்லி அவனை முறைத்தாள் காவ்யா.

இப்படி அவளை சீண்டி கொண்டே அந்த டிரிப்பை சந்தோசமாக்கினான் ஷியாம். அதன் பின் மதிய வேளை வரும் போது நால்வரும் ஒரு மிருககாட்சிசாலையை பார்த்து கொண்டிருந்தார்கள்.

மதியம் இரண்டு மணியாகி விட்டதால் "பசிக்க ஆரம்பிச்சிருச்சு. திரும்பி போகலாமா?", என்று கேட்டாள் காவ்யா.

"உன் பிரண்டுக்கு எப்போதும் சாப்பாட்டு மேல தான் கண்ணு இருக்கும் போல மதி ?", என்று சிரித்தான் ஷியாம்.

"அவளை எதுக்கு ஷியாம் கிண்டல் பண்ற? எனக்கே பசிச்சிருச்சு. ஹோட்டல் போகலாம். வெளிய தான இருக்கு. வாங்க திரும்பிரலாம்", என்றான் சூர்யா .

"அப்படி சொல்லுங்க அண்ணா. உங்க பிரண்டுக்கு மட்டும் வயிறு பசியே வராத மாதிரி பேசுறார். இப்ப சாப்பாட்டை கொடுத்தா முதல் ஆளா அவர் தான் விழுங்குவார்", என்று சிரித்தாள் காவ்யா.

"சரி சரி சும்மா பேசிட்டு இருக்காம சாப்பிட போகலாம்", என்று சூர்யா நடக்கும் போது அவனை கை பிடித்து நிறுத்திய மதி "நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேனே", என்று சொல்லி ஒரு மரத்தடியில் அமர்ந்தாள்.

சூர்யாவும், காவ்யாவும் வியப்புடன் அவள் பின்னே சென்றார்கள். அவர்களை பார்த்து சிரித்து கொண்டே ஷியாமும் சென்றான்.

வட்டமாக நால்வரும் அமர்ந்ததும் "மதி நிஜமாவே சாப்பாடு கொண்டு வந்தியா? என்கிட்ட சொல்லவே இல்லை", என்றாள் காவ்யா.

"ஆமா கலை, எனக்கும் ஆச்சரியமா இருக்கு ", என்று சொன்னான் சூர்யா.

"இதை பாத்தா நம்புவீங்க தான?", என்று கேட்டு கொண்டே தன் தோளில் மாட்டி இருந்த பையில் இருந்து நான்கு பார்சலை எடுத்தாள். கூடவே இரண்டு தண்ணீர் பாட்டில்களையும்.

அதை பார்த்து மற்ற மூவருக்கும் நிறைவாக இருந்தது. மதியை பெருமையாக பார்த்தார்கள்.

"எதுக்கு மதி நாலு பார்சலா போட்டுட்டு வந்த? ஒண்ணா போட்டிருந்தா தனி தனியா சாப்பிடாம ஒண்ணா ஷேர் பண்ணி சாப்பிட்டுருக்கலாம்?", என்று கேட்டாள் காவ்யா.

"லூசு, இப்பவும் ஷேர் பண்ணி தான் சாப்பிட போறோம்", என்றாள் கலைமதி.

"எப்படி டி?"

"நாலு பார்சல்லயும் ஒரே சாப்பாடு இல்லை. வேற வேற இருக்கு"

"என்ன?"

"ஆமா", என்ற படி நாலு பார்சலையும் பிரித்தாள். அதில் லெமன் சாதம், புளியோதரை, தக்காளி சாதம், மற்றும் தோசை இருந்தது. தொட்டு கொள்ள தக்காளி தொக்கு வேற இருந்தது. கூடவே கொறிப்பதுக்கு வாங்கி வந்த நொறுக்கு தீனிகளும் இருந்தது.

அதை பார்த்ததும் அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது. ஒரு மினி ஹோட்டலையே உன் பையில் வச்சிருந்தியா மதி?", என்று கேட்டாள் காவ்யா.

பல ஆயிரம் செலவு செய்து பெரிய ஹோட்டலுக்கு சென்று வித விதமான உணவு வகைகளை சாப்பிட்டால் கூட இப்போது கிடைத்திருக்கும் நிறைவு யாருக்கும் கிடைக்காது. அதையே வார்த்தையாலும் சொன்னான் சூர்யா.

அவன் சொன்னதை மற்றவர்களும் ஒப்பு கொண்டார்கள். "இனி சுத்தி பாக்குர வரைக்கும் இப்படி தான் சாப்பாடு எடுத்துட்டு போகணும்", என்றான் ஷியாம்.

"சாப்பாடு செய்றது எல்லாம் ஈஸி தான். ஆனா சுமக்க மட்டும் வச்சிராதீங்க பா. நான் தாங்க மாட்டேன்", என்று சிரித்தாள் கலைமதி. மனதில் இருந்து அழகுடன் சிரிக்கும் தன் மனைவியை இழுத்து அணைக்க மனம் நினைத்தது சூர்யாவுக்கு. இங்கே முடியாததால் தன் காதலை கண்கள் வழியே அவளுக்கு சொன்னான் சூர்யா.

அவன் பார்வையில் முகம் சிவந்தவள் "சாப்பாட்டை பாத்து சாப்பிடலைன்னா, பெரிய அடி கிடைக்கும்", என்னும் விதமாய் கண்களால் பதில் கூறினாள்.

அரட்டை அடித்த படியே சாப்பிட்டார்கள். கடைசியாக இருந்த தோசையை எடுத்தான் ஷியாம். அவனை ஒரு பார்வை பார்த்த காவ்யா "எனக்கு அந்த தோசை தந்துருங்களேன். எனக்கு தோசை ரொம்ப பிடிக்கும்", என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.