(Reading time: 23 - 46 minutes)

"என்ன உளருறா?", என்று நினைத்து கொண்டே ஷியாமை பார்த்தவளுக்கு அனைத்தும் விளங்கியது. அவன் அவளை பார்த்து கண்களை சிமிட்டினான்.

அதில் அவன் மீதிருந்து பார்வையை விலக்கியவள் "லைட்டா தான் இடிச்சிகிட்டேன்", என்றாள்.

"சரி டி, நீ ரெஸ்ட் எடு", என்று சொல்லி விட்டு மதி உள்ளே சென்றதும் சூர்யாவும் சென்று விட்டான்.

"என்ன டார்லிங்? ரூம்ல இருக்குற போட்டோவை எல்லாம் கிழிச்சிட்டியா?", என்று கேட்டான்.

"ஹ்ம்ம் ஆமா", என்று சொல்லி அவனை வெறுப்பேத்தினாள் காவ்யா.

"சரி பரவால்ல. அது ஒரு போட்டோவை தான் வித்தியாசமா மாத்தி மாத்தி வச்சிருந்தேன். ஆனா இன்னைக்கு தான் உன்னை நிறைய போட்டோ எடுத்துருக்கேனே?", என்று சிரித்தான் ஷியாம்.

"ப்ச்", என்றாள் காவ்யா.

"என்ன டி ப்ச்? மூணு மாசமா உன் நினைவுல பித்து புடிச்ச மாதிரி இருந்துருக்கேன் தெரியுமா? நேத்து உன்னை பாத்ததும் எனக்கு எப்படி இருந்துச்சுன்னு எனக்கு தான் தெரியும். எப்படி காதலை சொல்லனு தவிச்சிட்டு இருந்தேன். இப்ப சொல்லிட்டேன்னு நிம்மதியா இருக்கு. என் காதலை ஏத்துக்கோ காவ்யா"

"அதெல்லாம் முடியாது. நான் லவ் பண்ண கூடாதுன்னு முடிவுல இருக்கேன்"

"அப்படியா? ஏன் டீ?", என்று நக்கலாக சிரித்தான் ஷியாம்.

"டீன்னு எல்லாம் சொல்ல கூடாது சொல்லிட்டேன்"

"சரி சரி சொல்லலை. நீ எதுக்கு என்னை லவ் பண்ண மாட்ட?"

"அதான் அன்னைக்கே காரணம் சொன்னேன்ல? எனக்கு கல்யாணத்துல நிறைய கனவு இருக்கு. எனக்கு செஞ்ச நகை எல்லாம் நான் கல்யாணத்தன்னைக்கு போட்டுக்க வேண்டாமா? அதுவும் எனக்கு புடிச்ச கம்மல் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன் தெரியுமா?"

அவள் பேச்சில் புன்னகைத்தவன் "சரி சரி நீ என் காதலை ஏத்துக்க எல்லாம் வேண்டாம். நல்ல பிரண்டா இரு சரியா? அப்புறம் என் தங்கச்சிக்கு என்னை பிடிக்காது. அவ உன்னை எதாவது கஷ்ட படுத்துனா பெருசா எடுத்துக்காத", என்று சொன்னான்.

"ஏன் உங்களை பிடிக்காது?"

"ஏன்னா? என்ன சொல்ல? எங்க சித்தி குணம் எனக்கு தான் முதல்ல புரிஞ்சது. அது எல்லா சொத்தும் அதுக்கே வரணும்னு நினைச்சது. அதை பத்தி எனக்கு தெரிஞ்சதுனால என்னை பத்தி இல்லாதது பொல்லாததை எல்லாம் அப்பா கிட்ட, தங்கச்சி கிட்ட சொல்லி வச்சிருக்கு. அதனால நான் கெட்டவன் அப்படின்னு ரெண்டு பேரும் நினைக்கிறாங்க"

"ஓ, ஆனா ஒன்னு சரி தான்" 

"என்ன?"

"நீங்க கெட்டவங்க தான்"

"அட பாவி, நான் என்ன செஞ்சேன்?"

"எனக்கு முத்தம் கொடுத்தது நல்லவன் செய்ற விஷயமா?"

"ஆஹான்.. ஆனா இந்த நல்லவன் உன்கிட்ட மட்டும் கெட்டவன் சரியா?"

"வெவ்வ வெவ்வ", என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். அவனும் சிறு சிரிப்புடன் தன் அறைக்கு சென்றான். அங்கிருந்த போட்டோக்கள் கிழிக்காமல் இருந்ததே அவள் மனதை அவனுக்கு எடுத்து காட்டியது.

"இவ கிட்ட பேசினா எல்லாம் வேலைக்கு ஆகாது. நேரா மாமனார் மாமியார் கிட்ட தான் டீலிங் வச்சுக்கணும்", என்று நினைத்தவனுக்கு இன்று எதிர்பாராமல் கிடைத்த முத்தம் போனஸ் என்று தோன்றியது.

ன்று இரவு சாப்பிடுவதுக்காக அனைவரும் அமர்ந்திருந்தார்கள். "வேலம்மா காயத்ரி உள்ள ரூம்ல இருக்கா. அவளுக்கு அங்க போய் சாப்பாடு கொடுத்துருங்க சரியா?", என்றான் ஷியாம்.

அப்போது காவ்யாவை பார்த்து கண்ணை காட்டினான் சூர்யா. அதை பார்த்த காவ்யாவுக்கு "அண்ணனையும் தங்கச்சியையும் நீ தான் சேத்து வைக்கணும்", என்று சூர்யா சொன்னது நினைவில் வந்தது.

ஒரு முடிவுடன் ஷியாம் புறம் திரும்பியவள் "ஏன்? உங்க தங்கச்சி தீண்ட தகாதவங்களா?", என்று கேட்டாள்.

"அவ தீண்ட தகாதவ இல்லை. நம்மளை தான் அப்படி நினைப்பா", என்று கசந்த சிரிப்புடன் சொன்னான் ஷியாம்.

அவன் வருத்தத்தை உணர்ந்தவள் "நான் போய் கூட்டிட்டு வரேன்", என்று சொல்லி எழுந்து சென்றாள்.

காவ்யா, காயத்ரி அறைக்கு சென்ற போது கட்டிலில் படுத்திருந்தாள் காயத்ரி.

"ஹாய் காயத்ரி, சாப்பிட வரலையா?", என்று கேட்டாள் காவ்யா.

அவளோ அமைதியாக இருந்தாள். "உன்னை தான் கேக்குறேன். காது கேக்கலையா?", என்று கேட்டாள் காவ்யா.

"ஹ்ம்ம் கேட்கலை. இப்ப அதுக்கு என்ன?"

"ஏன் இப்படி கோப படுற?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.