(Reading time: 23 - 46 minutes)

"நாங்க எல்லாம் பணக்காரங்க. அப்படி தான் இருப்போம். நீ சும்மா ஓசிக்கு ஊரை சுத்தி பாக்க வந்தவ தான? அதை மட்டும் செய். என் விசயத்துல தலையிடாத. உங்க கூட எல்லாம் நான் உக்காந்து சாப்பிடணுமா?", என்று காவ்யாவின் தன் மானத்தை சீண்டி விட்டாள் காயத்ரி.

"ஏய், யாரை பாத்து ஓசிக்கு வந்திருக்கன்னு சொல்ற?"

"உன்னை பாத்து தான் சொல்றேன்? இங்க வேறு யாரு இருக்கா? அடடா மறந்துட்டேனே? அண்ணனோட பிரண்டும் அவன் பொண்டாட்டியும் வேற வந்துருக்காங்களே? அவங்களும் உன்னை மாதிரி ஓசிக்கு தான வந்துருக்காங்க?"

"இங்க பாரு காயத்ரி, நீ அதிகமா பேசுற. சொல்லிட்டேன்"

"என்னோட ஸ்டேட்டஸ் க்கு நான் அப்படி தான் பேசுவேன். இன்னும் சொல்ல போனா உன்கிட்ட எல்லாம் பேசவே கூடாது"

"என்னது ஸ்டேட்டஸா? அப்படின்னு உனக்கு இருக்கோ? நானும் பேச கூடாது பேச கூடாதுன்னு பாக்குறேன். நீ ஓவரா பேசுற? உன் குடும்பம் கஷ்ட பட்ட குடும்பம்னு எனக்கும் தெரியும். சும்மா சீனா போடாத"

"என்னது கஷ்ட படுற குடும்பமா? ஏய் லூசு. இந்த வீட்டை பாத்துமா இப்படி சொல்ற?"

"என்ன வீடா? இந்த வீட்டை பாத்துக்குற வேலை தான உங்க அண்ணன் செய்றான்"

"நிச்சயமா நீ லூசே தான். இது அவனோட வீடு. எங்க வீடு இதை விட பெருசு. நான் போட்டுருக்க நகை எல்லாம் சும்மா வெள்ளை கல்லுன்னு நினைச்சியா? அத்தனையும் வைரம். ஓசி சொத்துக்கு தான் வந்துருக்கன்னு பாத்தா லூஸாவே வந்துருக்கியா?", என்று கேட்டு சிரித்தாள் காயத்ரி.

அதிர்ச்சியாக விழித்த காவ்யா தன் மடத்தனத்தை நொந்தவாறே வெளியே வந்து விட்டாள் காவ்யா.

வெளியே வந்தவள் அங்கிருந்த யாரையும் பாக்காமல் தனக்கு கொடுக்க பட்டுள்ள அறைக்குள் சென்று விட்டாள்.

மூவரும் குழப்பமாக ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். பின் மதி மட்டும் எழுந்து காவ்யா அறைக்குள் சென்றாள். அங்கே கோபமாக அமர்ந்திருந்தாள் காவ்யா.

"ஏய் காவ்யா, என்ன டி ஆச்சு?", என்று கேட்டாள் கலைமதி.

"இந்த வீடு ஷியாமோடாதா மதி?"

"ஆமா டி. பின்ன அடுத்தவங்க வீட்டுக்கா கூட்டிட்டு வருவாங்க. நீ நிஜமாவே அவரை ஏழைன்னு நினைச்சிட்டு இருக்கியா?"

"ஹ்ம்ம், ஆமா. அண்ணாவோட பிரண்ட்ன்னு தான் தெரியும். மித்த படி பணக்காரன்ன்னு தெரியாது"

"அவங்க பெரிய பணக்காரங்க தான் காவ்யா", என்று ஆரம்பித்து ஷியாமை பற்றி அனைத்தையும் சொன்ன மதி "ஷியாம் அண்ணா அத்தான் கூட தான் படிச்சாங்களாம். ஒண்ணா தான் ரெண்டு பேரும் வேலை பாத்துருக்காங்க. இப்பவும் பாரின்ல தான் இருக்காங்க. லீவ்க்கு தான் வந்திருக்காங்க. அதனால தான் நாம் இப்ப இங்க வந்தோம்", என்று முடித்தாள்.

"ஓ, ஆனா அந்த காயத்ரி ரொம்ப பேசிட்டா மதி. நாம எல்லாரும் ஓசி சோறுக்கு வந்துருக்கோம்னு சொன்னா தெரியுமா?"

"விடு காவ்யா. நான் தான் முன்னாடியே சொன்னேன்ல? அவ அப்படி தான். முடிஞ்சா நாம அவளை மாத்துவோம். அப்படி முடியலைன்னா எப்படியும் போகட்டும்னு விட்டுருவோம்"

"ம்ம் ", என்று வெளியில் சொன்னாலும் மனதுக்குள் "அது எப்படி அவளை விட முடியும்?", என்று தோன்றி வைத்தது காவ்யாவுக்கு.

அதன் பின்னர் காயத்ரியிடம் போய் பேசாமல் விலகியே இருந்தாள் காவ்யா.

கலைமதி மட்டும் "நாளைக்கு இங்க சுத்தி பாக்க போறோம். நீயும் வந்தா நல்லா இருக்கும் காயத்ரி", என்று மட்டும் சொல்லி விட்டு அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல் சென்று விடுவாள்.

தினமும் எங்கேயாவது சுற்றி பார்க்க போவதும், சந்தோசமாக திரும்பி வருவதுமாக இருந்தார்கள் நால்வரும். காயத்ரி மட்டும் வீட்டில் இருந்தாள்.

வீட்டுக்கு வந்த பிறகும் நால்வரும் சிரித்த படியே பேசி கொண்டிருப்பார்கள். இரண்டு நாள் இதை பார்த்து கொண்டிருந்த காயத்ரிக்கு தான் எதோ தனிமையாக இருந்தது.

காயத்ரிக்கு எப்போதுமே அமைதியாக இருக்க பிடிக்காது. எதாவது வளவளத்து கொண்டே இருக்க வேண்டும். அவளை சுற்றி எப்போதும் சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டே இருக்கும்.

தனிமையை உணர்ந்த காயத்ரிக்கு அவர்களுடைய சிரிப்பு சத்தம் ஒரு வித கோபத்தையும், ஒரு ஏக்கத்தையும் உருவாக்கியது.

அதை கோபமாகவே அவர்களிடம் வெளிப்படுத்தினாள். ஷியாம் வந்து "ஏதாவது வேணுமா டா ?", என்று கேட்க வந்தாலும் "ரொம்ப தான் அக்கறை", என்று நக்கல் அடித்து அவனை அவமதித்தாள்.

சூர்யா அவள் பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை.

காவ்யாவும், மதியும் கூட அவளிடம் பேசுவார்கள். அவள் அவமதித்து பேசினால் மதி ஒரு சிரிப்புடன் திரும்பி விடுவாள். ஆனால் காவ்யாவோ பதிலடி கொடுத்து விட்டு தான் வருவாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.