கோபத்தோடு மகி கடைக்கு வெளியே நின்றிருக்க, வெளியே வந்த சுடரோ அவனை கண்டுக் கொள்ளாமல் சென்றாள்.
“ஹே இங்க உனக்காக நின்னுக்கிட்டு இருந்தா.. என்னை பார்க்காம கூட போற” அவளின் பின்னால் சென்று கைப்பிடித்து நிறுத்தினான்.
“இங்கப்பாரு.. எனக்காக ஒன்னும் நீ இருக்க வேண்டாம்.. உன்னோட குடும்பத்தை விட்டும் வர வேண்டாம்.. நாம தனியா குடித்தனம் நடத்தவும் வேண்டாம்.. அதுக்கு எந்த பொருளும் வாங்கவும் வேண்டாம்.. நீ உன்னோட வழியை பார்த்துக்கிட்டு போ.. நான் என்னோட வழியை பார்த்துக்கிட்டு போறேன்.. எனக்கு யாரும் வேணாம்..” என்று சொல்லியவள், பிடித்திருந்த அவனது கையை உதறினாள்.
உள்ளே கோபமாக பேசிவிட்டு வந்ததற்கான பிரதிபலிப்பு தான் இது என்பதை உணர்ந்தவன், “சைல்டிஷா பிகேவ் பண்ணாத சுடர்.. ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்.. அதுக்காக கோச்சுப்பியா.. ஐ யம் ரியலி வெரி சாரி..” என்று அவளிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தினான்.
அதை கொஞ்சம் தள்ளி இருந்து சார்லஸ் கவனித்துக் கொண்டிருந்தான். அந்த காட்சியை பார்த்த போது மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. முகத்தில் புன் சிரிப்போடு அவர்களை பார்த்தப்படி இருந்தவனின் அலைபேசி அழைக்க, அதை காதில் வைத்து பேசியவன், எதிரில் என்ன சொல்லப்பட்டதோ, அதைக்கேட்டு அதிர்ச்சியானவன், உடனே வருவதாக கூறிவிட்டு அலைபேசியை அணைத்தான்.
ஐ.சி.யூ விற்கு கொஞ்சம் தள்ளி தான் ரிஷப்ஷன் இருந்ததால், அறிவழகனுக்காக அருள் அங்கேயே அமர்ந்தப்படி அவனுக்காக காத்திருந்தாள். அதற்குள் அந்த பெண்மணி கண் விழித்தாலும் மருத்துவர் வந்து சொல்வதற்கு ஏற்றப்படி அவர்கள் பார்வையில் படும்படி அமர்ந்திருந்தாள்.
ரிஷப்ஷனில் அந்த பெண்மணியின் அலைபேசியை கொடுத்திருந்த சிறிது நேரத்திலேயே அமுதா என்ற பெயரில் இருந்த எண்ணிற்கு அழைத்து பேசியவர்கள், “அமுதாங்கிறது அவங்க பையனாம்.. பேஷண்ட் நேம் ஆனந்தியாம், கொஞ்ச நேரத்துல அவர் வந்துடுவார்” என்று விஷயத்தை அருள்மொழியிடம் கூறினார்கள்.
“என்னது.. அமுதாங்கிறது ஒரு மேல் நேமா, அவங்க பேர் ஆனந்தியா?” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவளுக்கு, ஏதேதோ சந்தேககங்கள் தோன்ற, பேசாமல் இங்கிருந்து கிளம்பி விடலாமா? என்று நினைத்தாள். இருந்தும் தான் நினைத்தது போல் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.. அதேநேரம் அந்த பெண்மணிக்கு தெரிந்தவர்கள் வரும்வரை தான் இங்கிருப்பது அவசியம் என்பதை உணர்ந்தவள், ஒரு தயக்கத்துடன் அந்த அமுதாவிற்கும், அறிவழகனுக்காகவும் காத்திருக்க, முதலில் வந்த அமுதாவை, அதாவது தான் நினைத்தது போலவே அமுதவாணனை பார்த்து அவள் அதிர்ச்சியானாள் என்றால், மருத்துவமனையில் நுழைந்ததுமே அங்கே தன்னை பார்த்தப்படி நின்றிருந்த அருள்மொழியை பார்த்து அமுதவாணன் இன்ப அதிர்ச்சி அடைந்தான்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.