Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (7 Votes)
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி - 5.0 out of 5 based on 7 votes
Pin It

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி

Vaanum mannum katti kondathe

ஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

புதுச்சேரியில் பிரசித்திப் பெற்று விளங்கும் மணக்குள விநாயகர் கோவிலின் அர்ச்சகர் மந்திரம் சொல்வதை கேட்டபடி விநாயகரை வணங்கினாள் சுபாஷினி.

அவளின் ஒரு பக்கம் கணவர் பிரகாஷும் மற்றொரு பக்கத்தில் ஒரே மகன் ஆகாஷும் நின்றிருந்தார்கள்.

இப்படி குடும்பத்தினருடன் விநாயகரை வழிபட கிடைத்த வாய்ப்பில் அவளின் மனம் நிறைந்து போயிருந்தது.

சுபாஷினி குடுமபத்திற்கு அருகேயே அவளின் தோழி ஜோதி, அவளின் கணவர் வசீகரன் மற்றும் மகள் அக்ஷராவும் கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார்கள்.

வசீகரனும், பிரகாஷும் தொழில் முறை நண்பர்கள்.

இந்த நட்பு, அவர்களின் திருமணதிற்கு பின், ஜோதி, சுபாஷினியிடமும் எதிரொலிக்க, இரண்டு குடும்பமும் இருபத்தி ஏழு ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் பழகி வந்தார்கள்.

இன்று, சுபாஷினி – பிரகாஷின் முப்பதாவது திருமண நாளிற்கென சென்னையில் இருந்து ஒன்றாக புதுச்சேரி வந்திருந்தார்கள்.

கோவில் பிரசாதத்தை பெற்றுக் கொண்டு வெளியே வந்த உடன்,

“தேங்க் யூடா! ரொம்ப நாளா இந்த கோவிலுக்கு வரனும்னு ஆசை... கடைசில உன் மூலமா நடந்திருக்கு...” என்ற படி அவளின் அருகே இருந்த அக்ஷராவை அன்புடன் அணைத்துக் கொண்டாள் சுபாஷினி.

“என்ன ஸ்வீட் ஹார்ட் சின்ன விஷயத்துக்கு எல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டு... நாம அப்படியா பழகுறோம்?” என அலுத்துக் கொண்டாள் அக்ஷரா!

“நீங்க இரண்டு பேரும் பேசுறதை பார்த்தா யாரு யாருக்கு ஃபிரெண்டுன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது...” என்றாள் ஜோதி.

“ம்மா... ஒரே டையலாக்கை திரும்ப திரும்ப சொல்லாம, வேற ஏதாவது மாத்தி பேசுங்க... எனக்கு போர் அடிக்குது...! நீங்களும் என் ஸ்வீட் ஹார்ட்டும் ஓல்ட் பிரெண்ட்சா இருக்கலாம். ஆனா இப்போ நானும் என் ஸ்வீட் ஹார்ட்டும் உங்களை விட க்ளோஸ்...”

“நினைப்பு தான் உனக்கு... சரி, வாங்க போய் கடைல இளநீ வாங்கி குடிக்கலாம்...”

“எனக்கு வேண்டாம்மா...”

“எனக்கும் வேண்டாம்...” என்றான் அதுவரை அமைதியாக இருந்த ஆகாஷ்.

“சரி, நாங்க நாலு பேரும் இளநீ குடிச்சுட்டு வரோம்... நீங்க இரண்டு பேரும் கார் கிட்ட வெயிட் செய்ங்க...”

“சரிம்மா...”

ஆகாஷும், அக்ஷராவும் கார் நின்றிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

காஷ் இருபத்தி ஏழு வயதான இளைஞன்.

அப்பாவின் அறிவும், அம்மாவின் மென்மையும் ஒன்றாக இணைந்த சாஃப்ட் பர்சனாலிட்டி.

கடிக்கும் கொசுவை கூட அடித்துக் கொல்லாமல், மென்மையாக தள்ளிவிடும் குணம் கொண்டவன்.

எம்.பி.ஏ படித்து முடித்து விட்டு, retail துறையை தேர்வு செய்து தனக்கென ஒரு முத்திரையை பதித்து வரும் வளரும் தொழிலதிபர்.

அவனின் கம்பெனிக்கு சொந்தமான இரண்டு மால்களும், மல்டிப்லேக்சுகளும் ஏற்கனவே சென்னையின் முக்கிய பொழுது போக்கு அங்கமாக மாறி போயிருந்தது.

அக்ஷரா கல்லூரி படிப்பை முடித்து விட்டு தன்னுடைய விருப்பத் துறையான புகைப்படத் துறையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள்.

குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் போக, கேமராவும் கையுமாக அலைவதே அவளுக்கு வேலை.

காரில் சாய்ந்து நின்ற படி அகஷரா தன் மொபைல் போனை எடுத்து அதிலிருந்த நோடிபிக்கேஷன்களை பார்த்துக் கொண்டிருக்க, ஆகாஷ், தூரத்தில் தெரிந்த அம்மா அப்பாவை பார்த்தான்.

அங்கே பிரகாஷ் மனைவிக்கென இளநீயை தேடி தேடி தேர்வு செய்துக் கொண்டிருந்தார்.

அகாஷின் முகத்தில் இளநகை தோன்றியது.

அவனின் அம்மா அப்பா இடையே இருக்கும் அன்பு அவனுக்கு தெரியாதது இல்லை.

அவர்கள் இருவர் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரியா, ‘குட் லுக்கிங்’கா, எது என்று டிஃபைன் செய்து சொல்ல முடியாது பார்த்த உடனே பர்ஃபக்ட் கபில் என்று சொல்ல வைக்கும் சூப்பர் ஜோடி!

அவன் அவர்களையே பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, மொபைலை மூடி வைத்திருந்த அக்ஷரா, அவனின் பார்வையை கவனித்து விட்டு,

“டேய் அஷ் இப்படியே பார்த்துட்டு இருந்த கண்ணை நோண்டிடுவேன்... சும்மா சும்மா என் ஸ்வீட் ஹார்ட்டையும், ஹான்ட்சம் அங்கிளையும் பார்த்து திருஷ்டி போடாதே..” என்றாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

Add comment

Comments  
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிDevi 2018-08-19 18:04
Interesting start Bindu ji (y) :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிsaaru 2018-07-20 14:22
Nice start bindu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிBindu Vinod 2018-08-08 21:07
Thanks pa Saaru :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிNanthini 2018-06-19 14:50
suvarasiyamana thodakkam Bindu. Vazhthukkal

Athenna Chennaila irukka kovil ellam vittutu Pondicheryla irukka koviluku porathu :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிBindu Vinod 2018-07-18 10:33
:D :D Nands, nalla kelvi :grin:

Pillaiyar kovilnu yosichen Nands. First nyabagam vanthathu Pondy Manakula Vinayagar kovil thaan. Athaan antha kovil :-)

Thank you Nands :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிmahinagaraj 2018-06-18 11:00
super........ :clap: :clap:
nalla intro..... :GL: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிBindu Vinod 2018-07-18 10:32
Thank you very much Mahinagaraj :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிTamilthendral 2018-06-18 10:02
Very good start (y) intro romba nalla irukku (y)
Prologue padichittu enna eppo nadukmnu therinjukka aavala irukku :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிBindu Vinod 2018-07-18 10:32
Thank you very much Tamilthendral :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிV lakshmi 2018-06-17 19:28
Very nice update. Title is simply supe. Very loveable character name. :clap: :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிBindu Vinod 2018-07-18 10:31
Thanks pa Lakshmi :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிAdharvJo 2018-06-17 15:05
Duplication of message ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிBindu Vinod 2018-07-18 10:31
Duplicate reply :P

:grin: :grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிAdharvJo 2018-06-17 15:05
Curiosity build seyum prologue! Lovely n mild first epi bindu ma'am :clap: :clap: ippove ithani suspense ah :eek: idhu on time series kedyadha :eek: :eek: don't put us on hold for long time madam ji :D Sky oda wedding yarodan +indha happy journey oda interesting twists n turns-i therindhu kola waiting for next update . thank you and keep rocking. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதிBindu Vinod 2018-07-18 10:31
Thank you very much Adharv :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top