இந்தியா போல அந்த நாடோ அந்த நாட்டின் கலாச்சாரமோ ஆனந்திக்கு பிடித்தமானதாக இல்லை. ஆனாலும் ரிச்சர்டின் காதல் அவளை அந்த நாட்டில் இருக்க வைத்தது. கணவனோடு வாழும் வாழ்க்கையில் அந்த கலாச்சாரம் அவரை எந்த விதத்திலும் பாதித்ததில்லை. ஆனால் அமுதனின் அன்னையாக தன் மகன் அந்த நாட்டு கலாச்சாரத்தில் வளர்வதை அவர் விரும்பவில்லை. அதனால் அவனிடம் கொஞ்சம் கண்டிப்பு காட்டி வளர்க்க நினைத்தார்.
ரிச்சர்டுக்கோ இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை. இந்தியாவில் குழந்தை வளர்ப்பில் அவருக்கு அதிருப்தி தான். மனைவிக்கு எல்லா விஷயத்திலும் ஆதரவாக இருப்பவர், இந்த விஷயத்தில் மட்டும் எதிராக இருப்பார். ஆனந்தி தன் கவலையை குறித்து கூறினாள். என்னோட அம்மா, அப்பாவும் எனக்கு சுதந்திரம் கொடுத்து தானே வளர்த்தாங்க.. நான் கெட்டா போயிட்டேன்.. உனக்கு ஒரு நல்ல கணவனா.. அமுதாக்கு ஒரு நல்ல தந்தையா இல்லையா? நான் உங்க இதிகாச கதையில் வரும் ராமனா தான் இருக்க ஆசைப்படுகிறேன் என்று அடிக்கடி கூறுவார்.
அமுதன் விஷயத்தில் கணவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாமல், ஆனந்தி தன்னை மாற்றிக் கொள்ள நினைத்தார். ரிச்சர்ட் அமுதனுக்கு முழு சுதந்திரம் தந்தே வளர்த்தார். அதில் தலையிடக் கூடாதென்று நினைத்தாலும் அவ்வப்போது ஆனந்தியிடம் இருந்து அந்த கண்டிப்பு குணம் வெளிப்படும்.
இதில் அமுதன் கல்லூரியில் சேர்ந்த போது ரிச்சர்ட்டை மரணம் ஆட்கொண்டது. அதிலிருந்து ஆனந்தி அமுதனிடம் மிகவுமே கண்டிப்பு காட்டுவார். அது அவனுக்கு கசந்தது. தந்தையின் சுதந்திரம் அவனை எந்த தவறான பாதையிலும் அழைத்து சென்றதில்லை. ஆனால் அன்னையின் கண்டிப்பு அதை செய்து பார்த்தால் தான் என்ன? என்று நினைக்க வைக்கும். ஆனாலும் அவர் மேல் இருந்த பாசத்தால் அவன் தவறான பாதைக்கு சென்றதில்லை. அவன் படித்து நல்ல வேலையில் சேர்ந்ததும் ஆனந்தியிடம் இருந்து அந்த கட்டுப்பாடு கண்டிப்பு அனைத்துமே குறைந்திருந்தது.
கணவன் இறந்ததுமே ஆனந்திக்கு இந்தியா சென்று விட தான் ஆசை. ஆனால் மகன் எதிர்காலம் குறித்து அவர் அதை மறைத்துக் கொண்டார். ஆனாலும் அமுதனுக்கு நல்ல தமிழ் பெண்ணை பார்த்து மணம் முடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கேற்றார் போல் அவரது உடல்நலம் சரியில்லாமல் போனதும், அதை சாக்காக வைத்து இந்தியா வந்துவிட்டார். இங்கேயே நல்ல பெண்ணாக பார்த்து அமுதனுக்கு திருமணத்தை முடித்திட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்.
அவருக்கு அருள்மொழியை முதல் பார்வையிலேயே பிடித்து விட்டது. இரண்டாவது பார்க்கும் போது மகனுக்கு இந்த பெண்ணையே திருமணம் முடித்து விட்டால் என்ன? என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் எழில் சொன்ன விஷயங்களை கேட்டதும் தன் ஆசை நிறைவேறுமா? என்ற கேள்வியும் எழுந்தது. மகன் செய்த தவறை மன்னிப்பார்களா? திரும்ப அமுதனை அருள்மொழிக்கு மணம் முடிக்க எழில் வீட்டினர் சம்மதிப்பார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் அது நடந்தால் தன் ஆசைப்படி அருள் தனக்கு மருமகளாக வருவது மட்டுமில்லாமல், சுடரின் வாழ்வும் சரியாகிவிடும். அதனால் கண்டிப்பாக இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டார்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.