(Reading time: 14 - 28 minutes)

து வந்தும்மா.. சுடர் என்னோட பேசறதில்ல.. நேத்து ஷாப்பிங் செஞ்சப்போ அவளை பார்த்தேன்.. என்மேல இருக்க கோபத்துல உங்களைப்பத்தி சொல்லவே விடலம்மா..”

“பின்ன நீ செஞ்சு வச்ச காரியத்துக்கு அவ கோபப்படாம என்ன செய்வா.. அவளுக்காக இத்தனை செஞ்ச நீ.. அவளை மட்டும் பிரச்சனையில மாட்டிவிட்டுட்டு வந்துட்டல்ல.. எனக்கே உன்மேல ரொம்ப கோபம் வருது அமுதா” என்று கடிந்தவர்,

“நீ கூட சுடர்க்கிட்ட நான் வந்த விஷயத்தை சொல்லலையா ..” என்று எழிலிடம் கேட்டார்.

“அது இப்போ சுடர் எங்க வீட்ல இல்ல..” என்ற எழில் தயங்கி தயங்கி, மகிழ்வேந்தனுக்கும் அருள்மொழிக்கும் நிச்சயம் நடக்கவிருந்தது, சுடர் கோபித்துக் கொண்டு லண்டனுக்கு செல்ல நினைத்தது, மகி அவள் கழுத்தில் தாலிக்கட்டி அழைத்து வந்தது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வந்தது. புகழேந்தியின் முடிவு அனைத்தையும் கூறினாள்.

“என்னது மகிக்கும் அருளுக்கு எங்கேஜ்மென்ட் நடக்க இருந்துச்சா..” என்று அமுதவாணன் ஒருப்பக்கம் அதிர்ந்தான். தான் செய்த முட்டாள்தனத்தின் வீரியத்தை இப்போது முழுதாகவே உணர்ந்தான். ஒருவேளை இருவருக்கும் நிச்சயம் நடந்திருந்தால்? அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்த திருமண ஏற்பாட்டால் அருள்மொழியை முழுவதுமாக இழந்திருப்பான். ஒருப்பக்கம் சுடரொளிக்கும் அவன் அநியாயம் செய்தாக ஆகியிருக்கும் என்ற வேதனையில் துடித்தான். மெல்ல அங்கிருந்து எழுந்தவன், தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான்.

“இன்னிக்கு ரெண்டுப்பேரும் வீடு பார்த்து பால் காச்சினாங்க.. காலையில நான் அங்க தான் போயிட்டு வரேன்.. அப்பவே தெரிஞ்சிருந்தா கூட நான் சுடர்க்கிட்ட உங்க விஷயமா பேசியிருப்பேன்..ஆனா வீட்டுக்கு வந்ததும் தான் இவர் நீங்க போன் செஞ்ச விஷயத்தை சொன்னார்.”

“அது இருக்கட்டும் பரவாயில்லை.. ஆனா சுடருக்கு நடந்த கல்யாணத்திற்கு நான் வருத்தப்படணுமா? சந்தோஷப்படணுமான்னு எனக்கே தெரியல.. ஆனா கதிர் சுடரோட இப்போதைய நிலைமைக்கு காரணம் நீ மட்டும் தான்..” என்று கதிரவனை குற்றம் சாட்டினார்.

“நான் என்ன பண்ணேன்..”

“அதை உன்னோட மனசாட்சிக்கிட்ட கேட்டுப்பாரு கதிர்.. சுடர் இங்க வந்தது உன்னைப் பார்க்க தான், நீ மட்டும் அப்பாவா அவ மேல பாசம் காமிச்சிருந்தா சுடரோட எண்ணம் இப்படியெல்லாம் திசை திரும்பியிருக்குமா? அப்படியே இப்படில்லாம் நடந்திருந்தாலும் உன்னோட பொண்ணுக்கு அப்பாவா உன்னோட துணை இருந்திருந்தா, அவளை இந்நேரம் அந்த வீட்ல கொண்டாடியிருப்பாங்க.. அவ நீ பெத்த பொண்ணு கதிர்.. என்னத்தான் எழில் அவளை பார்த்துக்கிட்டாலும், மத்தவங்க பார்வைக்கு அவ சுடரோட அம்மா கிடையாது.. ஆனா நீ அப்பா..அந்த ஒண்ணே அவளுக்கு அந்த வீட்ல தானா மரியாதையை தேடி தந்திருக்கும்.

சுடரை பார்த்துக்க பொருளாதார வசதி இல்லாம தான் அவளை உங்கிட்ட அனுப்பி வச்சதா நினைச்சிக்கிட்டு இருக்கியா? அவளை இங்க அனுப்பணும்னு சொன்னப்பவே அமுதா வேண்டாம்னு சொன்னான். நம்ம சுடரை நாமளே பார்த்துக்கலாம்மா.. அது நம்மால முடியாதான்னு கேட்டான். அவ எங்களுக்கு இரத்த சமந்தம் இல்லன்னாலும் அவளை நாங்க நல்லாவே பார்த்துக்கிட்டிருந்திருப்போம்.. அந்த ஊர்ல அது தப்பாவும் தெரிஞ்சிருக்காது.. ஆனாலும் உன்னோட பொண்ணை பிரிஞ்சு நீ பட்ட கஷ்டத்தை நான் நேர்ல பார்த்ததில்லன்னாலும், எனக்கு ரொம்பவே புரிஞ்சதால தான் அவ உன் கூட இருக்க சந்தர்ப்பம் கிடைச்சதும் அவளை இங்க அனுப்பி வச்சேன்..

ஆனா எப்போதிலிருந்து உன்னோட மனசு கல் மனசா மாறுச்சுன்னு தெரியல கதிர். அப்பவே அது புரிஞ்சும், நீ வேண்டாம்னு சொல்லியும் அவளை இங்க அனுப்பினேன் பாரு.. இப்போ சுடரை  நினைக்கும் போது குற்ற உணர்வா இருக்கு..” என்று ஆனந்தி உருக்கமாக பேசியும் கதிரவன் அமைதியாகவே அமர்ந்திருந்தார். அந்த நேரம் பார்த்து யாரிடமிருந்தோ அலைபேசியில் அழைப்பு வரவே அங்கிருந்து சென்றார்.

“இப்படித்தான் சுடரை பத்தி பேசினா  காதுல வாங்கறதே இல்ல ஆனந்தி..  அவர் மனசுல என்ன நினைக்கிறார்னு புரிஞ்சக்கவே முடியல.. ஒருவேளை என்கிட்ட சுடர் பத்தி பேச தயக்கமா இருக்கா.. இல்ல சுடரோட அவர் இணக்கமா இருந்தா நானோ பிள்ளைங்களோ ஏதாச்சும் நினைப்போம்ணு நினைக்கிறாரா? என்னன்னே தெரியல ஆனந்தி.. உங்கக்கிடயாவது மனம் திறந்து சொல்றாரான்னு பார்த்தா அதுவும் இல்ல..

அண்ணா அருள் கல்யாணத்துக்குப் பிறகு தான் மகிக்கும் சுடருக்கும் கல்யாணம்னு சொல்லிட்டாரு, அதுவரை சுடரை வீட்ல வச்சிக்கலாம்னா அவ வர மாட்டேங்குறா.. அவரும் வான்னு கூப்பிடவே இல்ல.. அருள் விஷயத்துல நானும் கொஞ்சம் சுடரை திட்டிட்டேன்.. அதை நினைக்கும் போது மனசுக்கு கஷ்டமா இருக்கு..”

“நீ இவ்வளவு தூரம் சுடருக்காக யோசிக்கிறதே பெரிய விஷயம் எழில்.. கதிர் பத்தி தெரிஞ்சது தானே.. எதுக்கும் கவலைப்படாத, சீக்கிரமா பிரச்சனைகளை சரிப்பண்ணிடலாம்..” என்ற ஆனந்தியின் வார்த்தைகள் எழிலரசிக்கு ஆறுதலாக இருந்தது. பின் கதிரும் எழிலும் ஆனந்தியின் உடல்நலம் குறித்து சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.