(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - பார்த்த முதல் நாளே – 01 - அஸ்ரிதா ஸ்ரீ

Partha muthal naale

நம்ம பாக்குற எல்லாமே நமக்கு உடனே பிடிச்சுறது இல்லை . அப்படி பாத்ததும் பிடிக்குற எதுமே நம்ம மனச விட்டு எப்போவும் போறதில்லை .

டேய் சரவணா என்ன டா பன்ற .நேரம் 8 ஆச்சு கால காலத்துல போய் பொண்ண பக்க வேண்டாமா ?

ஏன் பா வேண்டாம்னு சொன்னா விட்டுட்டு போக போறிங்களா இல்லைல . மெதுவா தான் கிளம்புவேன் .

என்னங்க அவன் இவ்ளோ தூரம் இறங்கி வந்ததே பெருசு பேசாம இருங்க .சரவணா நீ இந்த புது சட்டையை போட்டுக்கோ .நான் போயி உன் தம்பி சக்தி ரெடி ஆகிட்டானான்னு பாக்குறேன் என்றவாறே அழகிய நீல நிற காட்டன் சட்டையை டேபிள் மீது வைத்தார் அவனின் தாய் லட்சுமி .

என்னது இவன் இறங்கி வந்துருக்கனா . நான் என்ன இவனை கிணத்துல விழுகவா கூப்பிடறேன் .வயசு 24 ஆச்சு நல்ல கம்பெனில (ஐ டி ) கை நிறைய சம்பளம் .இப்போ கல்யாணம் பண்ணி லைப் ல அடுத்த கட்டத்துக்கு போக தான சொல்றேன் என்று பொரிந்து கொண்டிருந்தார் அவனின் தந்தை நாராயணன் .

ஆமா இப்போ தான் லைப் அ என்ஜோய் பண்ண ஆரம்பிச்சுருக்கேன் . அதுக்குள்ள பொறுக்காது உங்களுக்கு . என்னால ஷர்ட் லாம் போட முடியாது .வேணும்னா டீ ஷர்ட் போட்டுக்குறேன் .ரெம்ப ரூல்ஸ் போட்டிங்கனா இப்டியே சென்னைக்கு பேக்கப் ஆகிருவேன் எப்படி வசதி னு யோசிச்சுக்கோங்க

வாய வச்சுக்கிட்டு சும்மா இருங்க . எனக்கென்னமோ அந்த பொண்ண பார்த்தா இவனுக்கு பிடிச்சுரும் னு தோணுது. நீங்க பொய் சக்தி கிட்ட கார் எடுக்க சொல்லுங்க.

டேய் சரோ கண்ணா டென்ஷன் ஆகாத . ஒரு function போயிருந்தபோ இந்த பாமிலிய பாத்தோம் .அவங்க உங்க அப்பாவோட தூரத்து சொந்தம் . எங்களுக்கு அவங்க குடும்பத்தையும் பொன்னையும் ரெம்ப பிடிச்சிருந்தது .அதான் உனக்கு பாப்போம்னு நினைச்சோம்.

போய் பாப்போம் உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம் சரியா . வா போலாம்

ம்மா எனக்கு லைட்டா மயக்கம் வர மாதிரி இருக்கு .அச்சோ வயிறு வலிக்குதே . என்று கத்திக் கொண்டிருந்தாள் நம் நாயகி சகிஷா

இன்னும் எண்ணலாம் செய்யுதுனு லிஸ்ட் போட்டு வை . பொண்ணு பாத்துட்டு போனப்புறம் மொத்தமா வந்து உனக்கு வைத்தியம் பாக்குறேன் என்றவாறு அவளுக்கு புடவை தேடி கொண்டிருந்தார் சகியின் தாய் வசந்தி .

என்ன என் அருமை அக்காவே ஒன்னும் ஒர்கவுட் ஆகலையா. இதுக்கு தான் அப்போவே சொன்னேன் .உன்ன விட சின்ன பொண்ணா இருந்தாலும் இந்த மஹி கிட்ட ஐடியா கேளுன்னு.

போ டி உன் கிட்ட ஐடியா கேட்டு தான் இப்போ பொண்ணு பாக்குறது வர வந்துருக்கு .அதுவும் என்னோட சம்மதம் இல்லாம என்று புகைந்து கொண்டிருந்தாள் சகி

இப்போ என்ன ஜஸ்ட் ஒரு போர்மாலிட்டி தான . பாத்துட்டு பிடிக்கலைன்னா பிடிக்கலை நு சொல்லிடு .அவ்ளோ தான் சிம்பிள் .

மண்ணாங்கட்டி எனக்கு மாப்பிள்ளை பிடிக்குறது இப்போ பிரச்னை இல்லை.இந்த கல்யாணம் இப்போ பண்ணிக்க பிடிக்கலை .நான் பிஜி படிக்கனும் எனக்கு பிடிச்ச மாதிரி ப்ரோபஸ்ஸோர் ஆகனும்.இப்போ இதெல்லாம் தேவை இல்லை .போய் சொல்லு அப்பா கிட்ட .

சின்ன வயசுல இருந்து உன் மனசுல இருக்குற விஷயத்துக்கெல்லாம் வாய்ஸ் குடுக்குறதே எனக்கு வேலைய போச்சு. சக்கு சரி இப்போ ஒன்னும் பேச வேண்டாம் .அவங்க பாத்துட்டு போட்டும் நம்ம பேசுவோம் இப்போ நீ இந்த சாரீ கட்டிரு . நான் போய் பூஜை ரூம் கிளீன் பன்றேன்.

புடவயை பார்த்தாள் ..அவளுக்கு எப்போதும் தன்னை அழகு படுத்தி கொள்ள பிடிக்கும் . பெண் பார்க்கும் வைபவத்தை பின்னுக்கு தள்ளி தனக்கு பிடித்தமான அலங்காரம் செய்யும் வேலை என்று மனதில் வைத்து தயாராகினால் சகி . புடவைக்கு மேட்ச்சாக பிங்க் நிற கண்ணாடி வளையலை மஹி க்கு தெரியாமல் அவளது அலமாரியில் இருந்து ஓசை படாமல் எடுத்து கொண்டிருந்த நேரம் , அம்மாஆஆஅஆ என்ற மஹியின் அலறல் காதை பிளந்தது.

பதட்டத்துடன் சகி மஹியின் தாய் தந்தை வசந்தியும் மித்ரனும் ஓடி வந்து பார்த்தனர் . மித்ரனுக்கு வந்த கோவத்திற்கு இருவரையும் ரெண்டு போட்டால் என்ன என்று தோன்றியது .

ஆம் சஹி மஹியின் ஜடையையும் மஹி சஹியின் கையை ஒரு கையால் முறுக்கி கொண்டும் .மற்றொரு கையில் பூஜை தட்டில் குங்குமம் சந்தனத்தை பிடிக்க முடியாமல் பிடித்து கொண்டும் இருந்தாள்

அடியே என்னடி இது . மஹி அவ கைய விடு . முடியதுமா

சஹி நீ அவ முடில இருந்து கைய எடு .மாட்டேன் போ .ஐயோ விடுங்க என்று இருவரையும் பிரித்தார்

ஏன் டி இப்படி 23 வயசான பொண்ணு மாதிரியா நடந்துக்குற .ஏன் அவ மட்டும் 20 வயசான பொண்ணு மாதிரி நடக்குறளா

இருவரையும் முறைத்தவர் மஹி உன்ன பூஜை ரூம் கிளீன் பண்ண தான சொன்னேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.