Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

தற்கு பின் அவன் முதுகலை பட்ட படிப்பிற்காக  அதே கல்லூரியில் சேர்ந்து விட, கதிரும் ஜனனியும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தனர். இந்த கால கட்டத்தில் ஜனனியிடம் நிறைய மாற்றங்கள் நிறைந்திருந்தன. திருமணம் குறித்தே அனைவரிடமும் அதிகமாக பேசினாள். இதற்கு மேலும் தாமதிப்பது சரியல்ல என்று உணர்ந்த சண்முகம் விடுமுறையில்   வந்திருந்த கதிரிடம் தனிமையில் சென்று பேசி விட்டு வருவதாக வள்ளியிடம்  சொல்லிவிட்டு அவன் அறைக்கு செல்ல, வள்ளியிடம் இருந்து இதை அறிந்து கொண்ட ஜனனியும் அவர் அறியாமல் அவரை பின் தொடர்ந்தாள்.

கதிர் என்ன சொல்ல போகிறான் என்று அவளுக்கு தெரிய வேண்டும்.

கதிர் வேலையா இருக்கியா?

இல்ல பா சும்மா புக் படிச்சிட்டு தான் இருக்கேன் சொல்லுங்க பா

உன்கிட்ட கொஞ்சம் பேசணும் கதிர், உன் பியூச்சர் பத்தி  பேசணும்

என் பியூச்சர் பத்தியா? என்று நெற்றி சுருக்கியவன் சொல்லுங்க பா என்ன பேசணும் ?

உன் கல்யாணம் பத்தி பேசலாம்னு,  என்று தொடங்கியவர்,  ஜனனியை, ஜனனிக்கு, ஜனனியும் நீயும் எப்படி ஆரம்பிக்க என்று தடுமாறினார் சண்முகம், இளங்கலை படிப்பை இப்போது தான் முடித்திருக்கும் மகன், இளங்கலை படிப்பில் இப்போது தான்  சேர்ந்திருக்கும்  தங்கை மகள், திருமணம் குறித்து பேசும் வயதா இது? என்ற எண்ணம் அவர் மனதில்.

 உண்மையில் கதிர் மேல் அவ்வளவு கோபம் எழுந்தது என்றே சொல்லலாம். அவளிடம் இவன் எப்படி பழகி இருந்தால், அவள் இவரிடம் அப்படி பேசியிருக்க கூடும் என்று சற்றே எரிச்சல் தான் அவருக்கு, இருந்தும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவர்.

சற்று நேரம் தடுமாறியவர், சுற்றி வளைக்காமல் ஜனனிய நீ கல்யாணம் பண்ணிக்கிறியா கதிர் என்று பட்டென கேட்டுவிட

ஒரு நொடி மௌனம் காத்தவன், நிதானமாக பேசினான். அப்பா இப்போ   கல்யாணம் பத்தி யோசிக்கிற வயசு கூட இல்லைன்னு தோணுது. நான் சொந்தமா தொழில் தொடங்கணும் பா, என்னோட ஆசை, கனவு, லட்சியம் இன்னும் எப்படி  வேணும்னாலும்  சொல்லலாம், ப்ளீஸ் பா எனக்கு கம்பெனி ஸ்டார்ட் பண்ணி அதை வெற்றிகரமா அட்லீஸ்ட் ஒரு அஞ்சு வருஷமாவது நடத்தினத்துக்கு அப்புறம் தான் கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியும். தயவு செஞ்சு அதுவரைக்கும் என்னை கட்டாயப்படுத்தாதீங்க என்று கதிர் சொல்லவும் ஏனோ மனமெல்லாம்  குளுந்து போனது அவன் தந்தைக்கு.

அந்த நொடி மகனை உச்சி முகர தோன்றியது அந்த தந்தைக்கு, நல்ல முறையில் வளர்ந்திருக்கிறான் மகன் என்ற நிம்மதி அந்த தந்தைக்கு. ஆனால் அப்போது அவர் அறியவில்லை இதே தனது சீமந்த புத்திரனை தறுதலை, குடிகாரன் என்று  கண் மண் தெரியாமல் தானே திட்டுவோம் என.

மகனை நினைத்து பெருமை கொண்ட போதும்  விடாமல் அவர் சந்தேகத்தை போக்கி கொள்ள

எல்லாம் சரி பா ஜனனி பத்தி ..?

அப்பா நான் தான் சொல்றேனே, அதுக்கப்புறம் என்றவன் சற்றே இடைவெளி விட்டு அப்பா  ஜனனி தான் எனக்குன்னு  இருந்தா, பண்ணிக்கிறேன் பா ஆனா எக்காரணத்தை கொண்டும்  என்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தாதீங்க என்று சொல்ல

டேய் கதிர் மாமா சோ ஸ்வீட் உனக்காக எவ்வ்ளோ வருஷம் வேணும்னாலும் நான் வெயிட் பண்ணுவேன் என்று ஓடி வந்து அவனை கட்டி கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டு, மாமா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் எவ்வளவு தடவை இவன்கிட்ட கேட்டிருப்பேன் தெரியுமா? என்னை லவ் பண்றேன்னு சொல்லுடா கதிர் மாமான்னு தேங்க் யு சோ மச் மாமா என்று கூப்பாடு போட

தன் தந்தையை  சங்கடமாய் பார்த்தான் கதிர். கிட்ட தட்ட அவரும் அதே பார்வை பார்க்க, பா அவ, அவ செய்றதை எல்லாம் நீங்க பெருசா எடுத்துக்காதீங்க என்று மெல்லிய குரலில் சொல்ல

அவன் தோள் தட்டி நானும் அதைத்தான் சொல்றேன் கதிர், உங்க கல்யாணம் நல்ல படியா முடியற வரைக்கும் அவ செய்ற எதையும் நீ பெருசா எடுத்துக்காத என்றார். 

ஆமோதிப்பாய் புன்னகைத்தவன் அவள் புறம் திரும்பி முறைக்க, கதிரின் தந்தையோ அவளிடம்

ஒட்டு கேட்டியாம்மா? இது தப்பு இல்லையா ? என்றார்

கேட்டதால் தானே என் ஸ்வீட் கதிர் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதை நான் நேரடியா பார்க்க முடிஞ்சது என்று ஆட்டம் போட்டு கொண்டே அத்தம்மா என்று ஓடிவிட கதிரின் தந்தையும் சிரித்து கொண்டே வெளியேறிவிட்டார்.

அங்கே கதிர் அவன் தந்தையிடம் சொல்லியதை தன் அத்தம்மாவிடம் சொல்லி சொல்லி அவள் சிலாகிக்க வள்ளியம்மையோ கேள்வியாக தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த கணவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் அருகே வந்த சண்முகமோ

வள்ளி,  நம்ம ஜனனி குட்டி தான் இந்த வீட்டு மருமகள் என்று சொல்லிவிட்டு அவரும் கதிரும் பேசியவற்றை ஒன்றுவிடாமல் சொல்ல, ஜனனி முன்பு எதையும் காட்டிக்கொள்ள விரும்பாத வள்ளியம்மை அவள் முன் சிரித்து வைத்தாள். ஜனனி அவ்விடம் விட்டு சென்றதும் நம்பமுடியாமல் தன் கணவனை பார்க்க

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையாsaaru 2018-07-10 17:08
:grin: :hatsoff: :clap: :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையாSAJU 2018-07-07 18:37
superrrr ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையாAdharvJo 2018-07-04 21:52
Interesting update ma'am :clap: :clap: will moon accept to come n stay with kadhir :Q: will dey forego the bangalore proposal?? kadhir-k jenny midhu interest irundhadha?? Sad to see him :sad: innum curiosity build seithutte poringa ...what happens next..therindhu kola waiting. Thank you and keep.rocking (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையாrspreethi 2018-07-04 20:28
Nice update.... Kathir yeppadi marinar nu therinjuka arvama irukku
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையாmadhumathi9 2018-07-04 16:34
:grin: nice epi jananiyin maranam :sad: aaga irukku.ilampirai enna solli iruppaal. :Q: waiting to read more. :thnkx: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையாmahinagaraj 2018-07-04 12:01
nice jodi..... :clap: nalla irundathu... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையாThenmozhi 2018-07-04 01:12
another intriguing episode Prama (y)

Janani-ku enna achunu sollama suspense oda antha part-i divert seithutiinga :o

FBla appuram ena achunu terinjuka arvamaga iruku.

Kathir nalla form-ku vanthuttar pola :-) Ilampirai ena pathil sonanganu terinjuka waiting :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top