(Reading time: 16 - 32 minutes)

இருக்கு மஹி இப்போ வர மாப்பிள்ளையை பாத்ததும் ஈ நு சிரிச்சு காபி குடுக்குறதுல என் கல்யாணம் முடிவாக கூடாது .அது மாதிரி அப்பா அம்மா கு பிடிச்சது அதுனாலயும் முடிவாக கூடாது .அதையும் தாண்டி என்னவரை பாக்குற அந்த நிமிஷம் என் மனசுல ஒரு சலனம் ஏற்படனும் .இப்போ என் கூட எத்தனையோ பேர் ஒர்க் பன்றாங்க அவங்க கூட பேசும் போதும் பழகும் போதும் தடுமாறாத மனசு என்னவரை பார்த்ததும் தடுமாறனும் .இன்னும் எத்தனயோ இருக்கு .அப்படி ஒருத்தரை பார்த்து அவரு உங்க எல்லாருக்கும் பிடிச்சு நான் பிஜி படிச்சு முடிச்சு அடலீஸ்ட் ஒரு வருஷமாவது லவ் பிவேர்ல என்ஜோய் பன்னிட்டு மேரேஜ் பண்ணனும் . ஹ்ம்ம் இப்படி எனக்கும் ஆசை இருக்கு . அதான் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன் புரிஞ்சுதா மக்கு

என்ன டி இங்கே கதை அளந்துட்டு இருக்கிங்க .செய்றதெல்லாம் செய்து விட்டு என்று வசந்தி ஸ்வீட் தட்டுடன் மாடி ரூமிற்கு வந்தார் . அழகான கண்ணாடி கிண்ணங்களில் சுவையான ஜீராவில் குட்டி குட்டியாக குலாப் ஜாமூன்கள் இருந்தன .

சஹியும் மஹியும் ஆளுக்கொன்று எடுத்து சாப்பிட ஆரம்பித்து விட்டனர்

ஏன் டி ஏன் டி இப்படி இருக்கீங்க .மாப்பிள்ளை தம்பி மேல குங்குமத்தை கொட்டிட்டு பதட்டம் இல்லாம குலாப் ஜாமூன் சாப்பிடறீங்க . அவங்க போனப்புறம் இருக்கு உங்க ரெண்டு பேருக்கும் அப்பா கிட்ட என்றவாறு சஹி யின் அலங்காரத்தை சரி செய்து ஸ்வீட் தட்டை கையில் கொடுத்தார் .

வாவ் அப்போ நாங்க அபிஷேகம் பண்ணுனது மாப்பிள்ளைக்கா .இன்டெரெஸ்ட்டிங் மம்மி .சஹி நான் சொன்னேன்ல

நீ ஒன்னும் சொல்லவே இல்லையே மக்கு .

போ டி லூசு அம்மா சொல்லு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ரியாக்ஷன் என்ன. அவங்க ரியாக்ஷன் வச்சு அவங்க பேமிலி கேரக்டர் அ டிஸைட் பன்னுவோம்.

மஹி என்னகென்னமோ அவங்க சாப்ட் கேரக்டர் நு தான் தோனுது என்றவாறு கீழே நடந்தவைகளை கூறினார்.

ம் நீ சொன்னதை கேட்ட பிறகு எனக்கும் அப்படி தான் தோனுது மம்மி . சஹி உனக்கு ஏதும் பல்ப் எரியுதா .

ஒன்னும் எரியலை பேசாம போ .

இப்போ ஏன் என் மேல எரிஞ்சு விழுகுற சக்கு .

மஹி பேசாம பின்னாடி வா. சஹி நீ பாத்து நடந்து வா .ஸரீ ரெம்ப கீழ வர கட்டிருக்க .ஸ்லிப் ஆகாம நட .

ன்னமா இது . சரியான ஜூ குள்ள வந்துட்டோம் போல .இப்படி என் டிரஸ் அ ஸ்பாயில் பன்னிட்டாங்க என்று அன்னையிடம் பொருமிக்கொண்டிருந்தான் சரவணன் .

சரி விடு கண்ணா ஏதோ தெரியாமல் என்று சொல்லறாங்க .பெருசா எடுத்துக்காத செல்லம் .ஆமா உன் புள்ளை 3 மாச குழந்தை செல்லம் வெல்லம் நு கொஞ்சு என்றான் ஷக்தி .

ஆமா டா என் சரோ குட்டி 3 மாச பிள்ளை தான் .

மா இது உங்களுக்கே ஓவெர் அ தெரில .ரெம்ப ஐஸ் அ இருக்குமா என்றான் சரவணன் .

அங்க என்ன டா சத்தம் ஷக்தி .

சும்மா பேசிட்டு இருக்கோம் பா வீடு சூப்பரா இருக்குனு .

சுத்தி பாருங்க தம்பி என்று மித்ரன் இன் முகத்தோட கூற இருவராலும் மறுக்க இயல வில்லை .

அம்மா நீங்க பேசிட்டு இருங்க நானும் சக்தியும் ஜஸ்ட் சுத்தி பாத்துட்டு வரோம்னு தோட்டத்து பக்கம் சென்றனர் .

கலர் கலராக மலர்கள் ஒரு பக்கம் மணம் வீச தென்னை மா வேம்பு சப்போட்டா என்று மரங்கள் ஒரு பக்கம் அணி வகுக்க .அழகான மர ஊஞ்சல் தோட்டத்தின் நடுவில் தொங்கி கொண்டிருந்தது .ஊஞ்சலின் மேல் மல்லிகை கொடி படர்ந்தவாறு பார்ப்பதற்கு வெகு ரம்யமாக இருந்தது .

வாவ் வாட் எ பிளேசன்ட் பீல் .இல்ல டா ஷக்தி .

ஆமா டா சரவணா சூப்பர் ஆ இருக்கு. நான் அந்த ரோஸ் செடி பக்கத்துல போய் செல்பி எடுக்க போறேன் .இன்னைக்கு ஸ்டேட்டஸ் போட பிக் இல்லையே நு பீல் பண்ணுனேன் .இந்த கார்டன் குள்ள நிறைய செல்பி ஸ்பாட் இருக்கு .நான் யூஸ் பண்ணிக்க போறேன் .

சரியான ஸெல்ப்பி பைத்தியம் டா நீ .

உனக்கென்ன பா உன் ஆபீஸ் பீச் மால் நு அடிக்கடி பிக் எடுத்து ஸ்டேட்டஸ் போட்டுடற .நான் சுத்தி சுத்தி காலேஜ் ல எடுத்தாலும் ஒரே மாதிரி தான் விழுகுது .

டேய் அதான் உனக்கும் கேம்பஸ் ல கிடைச்சுருச்சுல .நெஸ்ட் இயர் ல இருந்து நீயும் வளைச்சு வளைச்சு ஸ்டேட்டஸ் போடு .

சரவணா நம்ம பொண்ணு பாக்க வந்துருக்கோம் டா .ஏதும் ஆர்வம் இல்லாம இருக்குற .கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா அதை விட்டுட்டு வாட்ஸாப் ஸ்டேட்டஸ் அது இதுனு டாபிக் போகுது .

ஷக்தி எனக்கு கல்யாணம் பண்ற ஆசை நிறைய இருக்கு பட் இப்போ பன்னிக்க ஆசை இல்லை .

ஏன் டா .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.