உங்கள் விருப்பம் அப்பா என்று சொன்ன சஹியை வேற்று கிரக வாசி போல் பார்த்தாள் மஹி.இவளுக்கு என்ன அம்னிஷியாவா? ஏ சக்கு உங்கிட்ட அப்பா மாப்பிள்ளையை பிடிச்சுருக்கான்னு கேட்டதுக்கு உன் இஷ்டம்னு சொல்லிட்ட. அவரு பிக்ஸ் பண்ண போயிருக்காரு மண்டு என்றவாறு சஹியை நிமித்தி முகம் பார்த்தாள்.அதில் ஒரு விதமான பூரிப்பு தெரிந்தது.
சிரித்தவாறு உள்ளே நுழைந்த சரவணனிடம் என்ன டா பொண்ணு பிடிச்சிருக்கா நிச்சயம் பணிருவோமா?
நிச்சயம் வேண்டாம் பா .
போச்சு போச்சு எம்டன் கோவத்துக்கு ஆளாகிட்டான் நம்ம குறுக்கால பூந்து டைவர்ட் பன்னுவோம் .அது வந்து பா என்று ஷக்தி ஆரம்பிக்க . டிரெக்டா கல்யாணம் வச்சுருங்க என்று சரவணன் முடித்தான்.
என்ன டா நடக்குது இங்க 5 நிமிசத்துக்கு முன்னாடி வேற மாதிரி பேசுனானே.சரி எதோ நல்லது நடந்தா சந்தோசம் தான்.
என்ன சம்மந்தி என் மருமக என்ன சொல்றா.அவளுக்கு ச்ரவணனை பிடிச்சிருக்கா?
அதான் வாய் நிறைய உங்க மருமக நு சொல்லிட்டிங்க அப்புறம் சந்தேகம் என்ன.சஹிக்கு ரெம்ப பிடிச்சுருக்காம் என்று சிரித்தவாறு பேசிக்கொண்டனர் மித்ரனும் நாராயணனும்.
சரவணன் விழி அலைபாய்ந்து கொண்டே இருந்தது. சஹியை தேடி .
சரி எல்லாரும் வாங்க சாப்பிடலாம் என்று வசந்தி அழைக்க ஸந்தோஷமாக சஹியை காண போகும் ஆவலில் குதூகலித்தான்.சரவணன்.
வசந்தி பரிமாற நாராயணனும் மித்ரனும் அருகே அமர்ந்து கொண்டனர் .ஷக்தி லக்ஷ்மி அருகில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கவும் மஹி வந்து அவன் எதிரில் அமர்ந்தாள்.இயற்கையிலே இருவருக்கும் வாய் கொஞ்சம் அதிகம் என்பதால் சற்று நேரத்தில் காலேஜ் கதைகள் பேசியவாறே சாப்பிட்டனர்.சரவணன் தான் எதிர் பார்த்து எதிர் பார்த்து ஏமாந்து போனான் .சாதம் தொண்டைக்குள் இறங்காமல் சதி செய்ய கைகளால் உணவை அலைந்து கொண்டிருந்தான்.மகனின் மன நிலை ஒரு வாரு புரிய அண்ணி சஹியை காணோமே வர சொல்லுங்கள் சேர்ந்து சாப்பிடலாமே என்று கூறிய அம்மாவிற்கு மனதிற்குள் பாராட்டு மழை யை பொழிய விட்டு கொண்டிருந்தான்.
இதோ கூப்பிடறேன் அண்ணி.
சஹிமா சாப்பிட வா.எல்லாரும் சேர்ந்து சாப்பிடணும்னு பிரிய படறாங்க வா மா.
ஏற்கனவே என்னமோ செய்து கொண்டிருந்த மனதை அடக்கியவள் இப்போது மறுபடியும் அவனை பார்க்கணுமா.அவனை பார்த்தால் பரவசமாக இருக்கிறதே.சரி பேசாமல் குனிச்சுக்கிட்டே போய் சாப்பிட்டு வந்துருவோம்.
பூந்தோட்டத்தில் பூக்களுக்கு நடுவில் அவனிடம் வாசத்தை மட்டும் விட்டு சென்ற அவனின் செம்பருத்தி பூ மீண்டும் அவனுக்கு காட்சி கொடுத்தாள்.அவள் தந்தையின் அருகில் அவனுக்கு நேர் எதிரில் வந்து அமர்ந்தாள்.லட்சுமி கேட்ட ஓரிரு கேள்விக்கு சிரித்தவாறே பதில் கொடுத்து கொண்டிருந்தாள்.சரவணன் மனதில் அவளின் சிரித்த முகத்தை படம் எடுத்து கொண்டிருந்தான்.
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுளே என்னுளே
ஏதேதோ செய்கிறதே ஒஹ்ஹஹ்
தொடரும்
{kunena_discuss:1208}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.