(Reading time: 16 - 32 minutes)

என்னனு சொல்றது இப்போ பொண்ணு பாக்க வந்துருக்கோம் ஒரு காபி சாப்டுட்டு பொண்ணு பிடிச்சுருக்குனு சொல்லி கல்யாணம் பண்றதுல எனக்கு விருப்பம் இல்லை .லைப் லாங் நம்ம கூடவே சுக துக்கங்களை பகிர்ந்து நமக்கு உயிரா மாற போறவங்களை அனு அனுவா காதலிச்சு கல்யாணம் பண்ணனும் .பாத்ததும் நான் அவளுக்குள்ளே விழுகணும் .முதல் பார்வையில காதல் வரும்னு நான் கேள்வி பட்டுருக்கேன் அதை அனுபவிக்கனும். எனக்காக பிறந்த என் சரி பாதியை பாத்ததுமே மனசு சொல்லணும் .ஸோ இப்போ இந்த பொண்ணு பாக்குறது எனக்கு இன்டெரெஸ்ட்டா இல்லை .அதுக்காக ஸ்வீட் சாப்பிட்டு சும்மா சைட் அடிக்க நான் வரலை .இந்த பொண்ணு கிட்ட போய் இப்போ எனக்கு மேரேஜ் ல இண்டெரெஸ்ட் இல்லை .இன்டெரெஸ்ட் இல்லாம மேரேஜ் பன்னிட்டு உங்க மனசை பின்னாடி ஹர்ட் பண்றதுக்கு இப்போவே தெளிவா சொல்லிடணும்னு தான் சொல்றேன் .சாரி நு சொல்லிட்டு போக தான் வந்தேன் ஷக்தி .

சரி தான் . இவன் நம்மளை கிளோஸ் பண்ண முடிவு பண்ணிட்டான் . ஷக்தி எஸ்கேப் ஆகிரு அதான் உனக்கு நல்லது .அப்பா என்னமோ இந்த சம்மந்தம் முடியணும்னு டெய்லி அம்மாட்ட சொல்லிட்டு இருந்தாரே .இவன் இப்படி பிளான் பன்னிட்டு இருக்கான் .யாரு அந்த எம்டன் கிட்ட வாங்கி கட்டிக்குறது .பேசாம எதாவது சொல்லிட்டு ஓடிருவோம் . ப்ரோ இங்கே பிக் கிளியர தெரில .நான் அப்படி போய் ஒரு ரெண்டு எடுத்துட்டு வரேன்னு ஓடி விட்டான்.

அப்படியே பின் வாசல் வழியாக ஹாலுக்குள் நுழைந்தான் ஷக்தி .

என்ன டா சரவணன் எங்க ?தனியா வர .

அப்பா டாடி பித்தாஜி அது வந்து

எல்லாம் நான் தான் டா அவனை எங்க ?

ஆண்டவா ரெம்ப கண்ணை கட்டுதே .அண்ணன் கால் பேசிட்டு இருக்கான் பா என்று வாயில் வந்ததை சொல் வைத்தான்.

இது தான் மா என் ரெண்டாவது பையன் ஷக்தி பைனல் இயர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்குறான். இவங்க தான் டா உங்க அண்ணனுக்கு பாத்துருக்க பொண்ணு சஹிஷா.

சஹி அந்த தம்பிக்கு ஸ்வீட் குடு மா என்றார் வசந்தி.

இவரு வேற அவன் பிளான் தெரியாம பேசிட்டு இருக்காரே.எதுக்கும் சிரிச்சு வைப்போம் .ஈ ரெம்ப நன்றி .

அப்புறம் ஷக்தி இந்த பொண்ணு மஹிமா இவளும் பைனல் இயர் இன்ஜினியரிங் தான் .சஹியோட தங்கை . ஹாய் என்று மஹியும் ஹலோ என்று சக்தியும் புன்னகையை பறி மாறிகொண்டனர் .

சத்தி போய் அண்ணனை கூப்பிடு என்று நாராயணன் சக்தியை கூறினார். இரு ஷக்தி. நீங்க ஏதும் நினைக்கலைனா சஹி கார்டென்ல போய் சரவணன் கிட்ட பேசிட்டு வரட்டுமே. மனசு விட்டு தனியாக பேசி அவர்களே முடிவு பண்ணட்டுமே என்று தயங்கியவாறே லக்ஷ்மி கூறினார். இது பெரியர்வர்களுக்கு நல்ல யோசனையாக பட்டது.

ஏன் மகாராஜாவை தேடி போய் தான் பாக்கணுமோ. ஓவர் அ இருக்கு என்று அழுத்தவாறே சென்றாள்.

சரவணன் அந்த அடுக்கு செம்பருத்தி பூவின் அழகை ரசித்தவாறே கைகளை குறுக்காக கட்டி மரத்தின் மேல் சாய்ந்தவாறு இருந்தான். அந்த பூவை படம் எடுக்க தனது செல் போனில் சரியாக கிளிக் செய்த நேரம் பூவையவள் அவனின் கண்களில் விழுந்தாள்.

1000 பெண்கள் இருந்தாலும் தன்னவளாள் மட்டுமே ஒருவனின் கண்களுக்கு அழகாக தோன்ற முடியுமாம்.எங்கயோ படிச்சது நினைவுக்கு வந்தது சரவணனுக்கு. செம்பருத்தி பூ தான் சேலை கட்டி வந்து விட்டதை போல் ஒரு உணர்வு. ஏதோ தேடியது கிடைத்து விட்டது போல் ஒரு நிறைவு .இவள் எனக்காக பிறந்தவள். தலை குனிந்து அவள் நின்ற கோலம் மனக்கண்ணில் நிறைந்தது.சஹி அவனை நோக்கி நடந்து வருகிறாள். பார்த்தவாறே நின்றான் சரவணன்.

அவனின் கூர்மையான பார்வையில் காந்தமான புன்னகையில் அலைபாய்ந்த கேசத்தில் சாய்ந்து நின்ற தோரணையில் சஹி அவனுக்குள் தொலைந்து போய் கொண்டிருந்தாள்.

ஏன் இவனது அளவெடுக்கும் பார்வை என்னை என்னமோ செய்கிறது .பேச நினைத்து வந்ததெல்லாம் பேச தோணலையே கால்கள் முன்னோக்கி செல்ல மறுக்கிறதே .மனமோ செல் என்கிறது .கை கால் எல்லாம் சில்லிட்டு போகிறதே.என்ன இப்படி சிரிச்சுகிட்டே வேற பாக்குறான் .இவன் வேற நேர காலம் தெரியாம .ஐயோ எதோ பேச போறான் போல இருக்கே

என்னை பிடிச்சிருக்கா

அவ்ளோ தான் உதட்டில் ஒரு சின்ன புன்னகையோடு பின் வாசல் வழியாக உள்ளே வந்து விட்டாள் சஹி

ஹே செம்பருத்தி பூ சொல்லிட்டு போ .

ம்ம்ஹ்ம் அவன் அழைத்த செல்ல பெயர் அவள் காதில் விழுந்ததாக தெரியவில்லை .அவன் கேட்ட கேள்விக்கும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை

ஓடி வந்தவள் ஓசை படாமல் அறைக்குள் சென்றாள்.

ஹேய் சக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டியா?.மாப்பு சூப்பரா இருக்காரு.ஹ்ம்ம் என்ன இருந்து என்ன ஆக போகுது நீ தான் டயலாக் அடிப்பியே.மஹி அவள் போக்கில் பேசிக்கொண்டிருக்க சஹியோ அவள் உலகத்தில் சிரித்து கொண்டிருந்தாள்.சஹிமா மாப்பிள்ளை பிடிச்சிருக்கா என்றவாறு மித்ரனும் வசந்தியும் வந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.