(Reading time: 16 - 32 minutes)

ஆமா அத தான் நானும் செஞ்சுட்டு இருந்தேன். இவ அவ ஜெவெல்ஸ் போட்டு ரெடி ஆகம நான் பார் வெல் பார்ட்டிக்கு போட வச்சிருந்த பாங்கிள்ஸ் எடுத்தா அதான் .

நீ ஏன் டி அத எடுத்த .இந்த ஸரீக்கு அதான் மேட்ச் ஆ இருக்கும் .அதான் .

இப்படி தான் அன்னைக்கு காயத்ரி அண்ணி மேரஜ் கு உன் பேர்ல் செட் கேட்டேன் குடுத்தியா .இப்போ மட்டும் என்னவாம்.

மஹி இன்னைக்கு அவள பொண்ணு பாக்க வராங்க அவ சாய்ஸ் கு விடேன்

 சரி பொழச்சு போ சக்கு போய் ரெடி ஆகு.

ஒரு வழியா சாஹி ரெடி ஆகிட்டா .இந்த பொண்ணுங்களை வச்சுக்கிட்டு என்று அலுத்து கொண்டார் வசந்தி.

சிரித்தவாறே வசந்தி இது இன்னைக்கு புதுசா நடக்குறதில்லயே .நம்ம பொண்ணுங்க சண்டை போட்டாலும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரவே இருக்காங்க .மத்தவங்க கிட்ட விட்டு கொடுக்கவும் மாட்டாங்க . சஹிக்கு பாக்போனே(backbone) மஹி தான் ..அது மாதிரி மஹிக்கு எல்லாமே சஹி தான . நீ டென்ஷன் ஆகாம போயி ரெடி ஆகு.

சரிங்க . ஏ மஹி இன்னுமா டி கிளீன் பண்ற .குங்கும தட்டை கொண்டுட்டு எங்க போன .என்று மஹியை தேடினார் .

மா அவ பிரண்ட் அந்த ஒல்லி குச்சி அபி கால் பன்னுனானு மாடிக்கு போயிட்டா என்று சரியான சமயத்தில் போட்டு குடுத்து பழி தீர்த்தாள் நம் நாயகி சஹி.

அவளை இப்போ என்ன செய்றேன் பாரு என்று மாடி ஏற போனவரை வசந்தி என்ற கணவரின் குரல் தடுத்தது .இதோ வரேங்க என்று மித்ரனை பார்க்க சென்றார்.

சே மஹி தப்பிச்சுட்டா .சோ வாட் நம்ம செய்வோம் அம்மா செய்ய நினைத்ததை என்று சத்தமில்லாமல் மாடி ஏறினாள் சஹி . மஹி அங்கு இருந்த சுவரில் மேல் உக்காந்து மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள் .சஹி சைலெண்டா போய் பாஆஆ என்று கத்தவும் .மஹி கையில் இருந்த மஞ்சள் குங்கும தட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்த நம் நாயகன் சரவணனின் மேல் விழுவதற்கும் சரியாக இருந்தது .

அயோ சக்கு என்ன இப்டி பண்ணிட்ட என்று கீழே பார்த்தாள் மஹி .தலை முடி முகம் டீ ஷர்ட் என அனைத்திலும் குங்குமமும் சந்தனமும் கொட்டி இப்போ தான் ஹோலி பண்டிகை முடித்து வந்தவன் போல காட்சி அளித்தான் saravanan.

சஹி பார்ப்பதற்குள் வசந்தி அவனை உள்ளே அழைத்து சென்று விட்டார் .

அச்சோ மன்னிச்சுக்கோங்க தம்பி . நீங்க எல்லாரும் உக்காருங்க இதோ வரேன் என்று பதட்டமாக உள்ளே சென்று கணவரிடம் நடந்ததை கூறினார் . அவசரமாக வந்து நடந்ததற்கு இருவரும் மன்னிப்பு வேண்டினர் .

அதற்குள் லஷ்மி விடுங்க அண்ணா குங்குமம் மஞ்சள் தவறுறது நல்லது தான் .நல்ல சகுனம் .நாங்க ஏதும் நினைச்சுக்கல .அப்படிதானே சரவணா .

 இதை நான் சொல்லணும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டு அதெல்லாம் பரவாயில்லை ஆன்ட்டி .ரெஸ்ட் ரூம் எங்கன்னு சொல்லுங்க போய் வாஷ் பன்னிக்குறேன்

.டேய் சரோ கண்ணா கார் ல ஒரு செட் டிரஸ் இருக்கு .சக்தி மா போய் எடுத்துட்டு வந்து அண்ணா கிட்ட குடு என்று கூல் ஆஹ் ஒரு லுக் விட்டார் சரவணனை . அந்த பார்வையில் பார்த்தாயா கடைசியில் நான் செலெக்ட் பண்ணுன போர்மல்ஸ் டிரஸ் தான் உனக்கு என்ற அர்த்தம் புதைந்திருந்தது .

பல்லை கடித்தவாறு தமையன் குடுத்த ஷர்ட் வாங்கிட்டு ரெஸ்ட் ரூம் சென்றான்

.வசந்திக்கும் நாராயணனுக்கும் இன்னும் படபடப்பு குறையவில்லை .அவர்களை பார்த்து சங்கடத்துடன் சிரித்தனர் .சாப்பிடுங்க தம்பி பிரஷ் ஆகிட்டு வந்ததும் பொண்ணை கூட்டிட்டு வரேன் என்றவாறு காபி குடுத்தார்

.ஏன் சஹி நம்ம குங்கும அபிஷேகம் நடத்துனது மாப்பிள்ளைக்கா இல்ல கூட வந்த வேற யாருக்குமா

.என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியுமா .போட்டோ கூட நான் இன்னும் பாக்கலை .நீ யார் மேல கொட்டூனியோ மக்கு .

நான் மட்டுமா இதுக்கு காரணம் . நீ தான் ஆஆ நு கத்துன .அதான் பயத்துல கீழ போட்டுட்டேன் .இப்போ என்ன சொல்ற சக்கு கொக்கு .ஆமா இப்போ ஏன் இவ்ளோ கஷ்ட படற .எப்படியும் மாப்பிள்ளை பிடிக்கலைன்னு தான சொல்ல போற .என்ன சக்கு பாக்காமலே லவ் வந்துருச்சா.

மக்கு மஹி நம்ம வீட்டுக்கு வந்தவங்க இப்படி ஆகிருச்சே நு பீல் ஆகுது .மத்தபடி பாக்காமலே லவ் பார்த்த முதல் நாளே லவ் லாம் வராது .

அது எப்படி சொல்லுற சக்கு . சரி லவ் பத்தி உன்னோட அவிப்பிராயம் என்ன

. சூப்பர் கொஸ்டின் பட் டயமிங் தப்பு .இப்படி பொண்ணு பாக்க மாப்பிள்ளையை வர சொல்லிட்டு இப்படி கேக்குற மஹி .

லூசு அக்கா லவ் வரதுக்கும் மாப்பிள்ளைக்கும் சம்மந்தம் என்ன இருக்கு .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.