ஆதியின் கைகள் உடனே நீண்டது..
ஆனால் பவித்ராவின் கைகளோ தயங்கின... இவன் கையை எப்படி பிடிப்பது என்று யோசித்து கொண்டே அசையாமல் இருந்தாள்..
“அம்மா... உங்க கையை கொடுங்க “ என்று ஐயர் மீண்டும் கூறவும் வேறு வழி இல்லாமல் கைகளை நீட்டினாள்..
ஐயர் அவளின் சுண்டு விரலை எடுத்து ஆதியின் விரலுடன் இணைத்து மேல ஒரு கை குட்டையால் கட்டினார்.
இணைந்த இந்த கைகள் எப்பொழுதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக...
அவளின் அந்த பிஞ்சு கையின் விரலை பிடித்தவன் முன்னே நடக்க பெண்ணானவள் பின்னே தொடர்ந்தாள்...இருவரும் மணமேடையை சுற்ற ஆரம்பித்த சில விநாடிகளில் ஆதித்யாவின் விரல்கள் பவித்ரா வின் மீதி விரல்களுடன் இணைந்தன.. அவளின் கையை இறுக பற்றி கொண்டவன் மெதுவாக கிள்ளினான் கை குட்டையின் மறைவில்...
பவித்ரா வோ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“கங்கிராட்ஷ் மச்சான்!!! . கலக்கிட்ட!!! Wish you both have a happy married Life” என்று ஆதித்யாவின் கைகளை குலுக்கினான் ப்ரேம்..
“சரி கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க கொஞ்சம் நேரம் ஓய்வு எடுங்க. நான் வர்ரேன்” என்று கிளம்பினான்...
சரண்யாவும் வாழ்த்துக்கள் சொல்ல வாயெடுக்கு முன்.