(Reading time: 10 - 19 minutes)

அப்போது நேற்று அவள் பார்த்ததை அவனும் கவனித்திருக்கிறான் ஆனால் அவன் சொல்வதைப் போல அவள் ஒன்றும் வெறிக்க வெறிக்க அவனைப் பார்க்கவில்லை என்ற நினைப்பு வர,

மற்றவர்கள் என்னைப் பற்றி தவறாக எண்ணுவதால் மட்டும் என் ஒழுக்கம் கெட்டுப்போவதில்லை அதிலும் என்னைப் பற்றி உங்களுக்கு மட்டும் என்ன தெரியும் என்றாள் சுள்ளென்று ! 

உன் ஜாதகமே தெரியும். பெயர் உத்ரா.... மூன்று பெண் ஒரு ஆண் கொண்ட குடும்பம் உன்னுடையது அப்பா இல்லை அம்மா மட்டும் சமீபத்தில் தங்கைக்கு அதிலும் உன்னை விரும்பியவனை மணம் முடித்து வைத்திருக்கிறாய். குடும்பத் தேவைக்காக இந்த வேலைக்கு விண்ணப்பத்திருக்கிறாய். இத்தனை விவரங்கள் போதுமான இல்லை.....ஒரு இக்கட்டான கட்டத்தில் உனக்கு உதவியவன் என்பதால் என்னிடம் இத்தனை கோபம் காட்டியிருக்க வேண்டாம்.

இதெப்படி....?! என்று யோசித்தபோதும், அவன் தன்னை மரியாதை தெரியதாவள் என்று குட்டியிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு,

உங்கள் உதவிக்கு நன்றி, அன்றைய சிக்கலில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, நேற்று அதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள் அளிக்கவில்லை, என்னைப் பார்க்கும் போதே முன்பின் அறியாதவர் போல தாங்கள் சென்றபிறகு நானெப்படி உங்களிடம் நன்றி கேட்க முடியும். அதிலும் நான் என் விண்ணப்பத்தில் பெயர் விவரம் மற்றும் தானே குறிப்பிட்டு இருந்தேன் ஆனால் என் தனிப்பட்ட விவரங்கள்.

அவளின் நெற்றியில் விழுந்த குழப்ப முடிச்சுகளை ரசித்து விட்டு, 

நான்தான் இந்த பயண ஏற்பாட்டை செய்திருக்கிறேன் என்றால் ஆட்களை தேர்வு செய்யும் பொறுப்பும் என்னுடையதுதானே இந்தப் பணிக்கு விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்ததே அதைப்போல் உங்களைப் பற்றிய விவரங்களை சேகரிக்க ஒரு தனி டிடெக்டிவ் ஏஜென்ஸி அமைந்திருந்தோம் அவர்களிடம் பெற்ற விவரங்கள். நேற்று உன்னை கண்டும் காணாததற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது உத்ரா... நான் ஒரு ஆண்மகன் நேற்று என்னுடன் ஒரு நாள் தங்கியவளைப் பற்றி இங்கே எல்லாருக்கும் தெரியும். ஆனால் என் தனிப்பட்ட விஷயத்தில் அவர்கள் மூக்கை நுழைப்பது இல்லை, அதே உன்னிடம் நான் வந்த முதல் நாளே பேசியிருந்தால் மற்றவர்கள் நமக்குள் ஏதோ என்று எண்ணிவிடக் கூடும் அதனால் உனக்கு ....

அப்படி யோசிப்பவர் இப்போது மட்டும் ஏன் பேச வேண்டும் ஏனோ உத்ராவின் முகம் சுருங்கியது. 

இந்த சிறு பெண்ணின் அழகு இன்று அதிகாலையிலேயே என்னை இழுத்து வந்துவிட்டது என்று சொல்வேன்.

என்னது. .... 

கண்களை உருட்டாதே... இயல்பாய் இரு... குடும்பத்தினருக்காகத்தானே இங்கே ஆபத்துகள் இருக்கும் என்று அறிந்தும் வந்தாய் நேற்று இரவே நீ வெகு நேரம் நின்றிருந்ததை நான் கவனித்தேன். இப்போது இந்த டிரைனிங் பீரியட் இன்னும் நாம் செயற்கைப் பவளப்பாறைகள் அனைத்தும் அமைக்கும் முறை என்று உனக்கு நிற்கவோ யோசிக்கவோ நேரம் வாய்க்காது. இங்கே இருப்பவர்களை உன் குடும்பத்தினர் போல நினைத்துக் கொள். ஆண்கள் டீமில் இருக்கும் மற்றவர்களில் பிரியன் மிகவும் துடிப்பானவன் நல்லவனும் கூட பெண்கள் பிரிவில் தகுதியின் அடிப்படையில் உன்னைத்தான் நான் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப் போகிறேன். உன் நீந்தும் திறன் அபாரம், அதிலும் முதலுதவி செய்வதிலும் உனக்கு இருக்கும் முன் அனுபவமும் மற்ற சான்றிதழ்களையும் பார்த்தேன் திருப்தியாய் இருந்தது. இத்தனை திறமையை வைத்துக் கொண்டு நீ ஏன் அந்த கடையில் போய் வேலை செய்தாய் என்றுதான் எனக்கு ஆச்சரியமே ? மாலை தலைமைப் பதவியில் இருப்பவர்கள் மற்றவர்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்று ஒரு வகுப்பு இருக்கிறது அப்போது பிரியனை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். பொழுது விடியப்போகிறது போ கொஞ்சநேரம் போய் தூங்கு....

லையசைத்துவிட்டு செல்லும் உத்ராவிடம் ஏன் இத்தனை அன்பு தன்னையும் அறியாமல் பெருகுகிறது என்று பரத்திற்குப் புரியவில்லை.

இதுநாள் வரையில் நான் சந்திக்காத பெண்களே இல்லை, சிலர் விருப்பத்துடன் வருவார்கள். சிலரை அவனே விரும்பிச் செல்லுவதும் உண்டு, வாழ்வின் வெறுமையை மறைக்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் இவை. பரத்தின் தந்தை சக்கரவர்த்திக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவியின் மகன் பரத் தாயின் இறப்பிற்கு பிறகு பரத்தை காரணம் காட்டியே இரண்டாவது ஒருத்தியை மணந்தார். முதலில் இருந்தே பரத்திற்கும் இரண்டாவது தாய்க்கும் ஒட்டுதல் இல்லை, பரத்தும் அதைப்பற்றி பெரியதாய் கவலைப்பட வில்லை, அவனின் தேடுதல் விரியத் தொடங்கியது. சக்கரவர்த்தியும் பிள்ளையிடம் பாசத்தை பொழியும் ரகம் இல்லையென்றாலும், இரண்டாம் தாரத்தின் பிள்ளைக்கும் இவனுக்கும் சமமாகவே எல்லாம் செய்து வந்தார். 

பரத் படிப்பை முடித்த கையோடு தந்தையின் தொழிலில் பங்கு கொண்டாலும், ஏதாவது வித்தியாசமான அட்வென்ஸர்ஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தான். கல்லூரியில் படித்த நண்பனோடு கடல் ஆராய்ச்சியைப் பற்றி டிஸ்கஸ் செய்தபோது கடல் மீது இருந்த சுவாரஸ்யம் அதிகரிக்கத் துவங்கியது அப்போது கடல் அரிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் மட்டும் பவளப்பாறையின் அழிவுகள் என்று தன்னையும் அறியாமல் இந்த சுவாரஸ்யத்தில் சிக்கிக் கொண்டவனுக்கு அதை விட்டு மீள பிடிக்கவும் இல்லை, வாழ்வின் வெறுமைக்கு வெகு சுவாரஸ்யமாகவே இது கழிந்தது. எனவே நண்பனோடு சேர்ந்து ஒரு தன்னார்வத் தொண்டாகவே இதை தொடங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.