பவித்ராவுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை..
ஒரு மனம் அவனின் செய்கையை ரசித்தாலும் மறுபாதி, இப்படியா பொது இடத்தில் சீண்டறது என்று மறுவி கொண்டே அவனின் கையை நறுக்கென்று கடித்தாள்..
அவளின் இந்த திடீர் கடியை எதிர்பார்க்காததால் ஆ வென்று அலறினான் ஆதித்யா..
அதை கண்டு அனைவரும் சிரித்தனர்..
“ராட்ஷஷி.... இப்படியா கடிப்ப?? இரத்தம் வருதுடி என்று பொய்யாக மெல்ல முனகினான்..
“அப்படிதான் வேணும் “ என்று மனதுக்குள் குத்தாட்டம் போட்டவள் அடுத்து அவளுடய முறை எனவும் திக் என்றது..
“ஐயோ!! இப்ப இவன் பலி வாங்க என்று என்ன செய்ய போறானோ??? “ என்று பயந்தவள்
“அண்ணா, ஏற்கனவே எடுத்த ஷாட் ஏ போதும். அதை வச்சு எப்படி வேணாலும் எடிட் பண்ணுங்க.. இனிமேல் வேணாமே!! என்று கெஞ்சல் பார்வையில் முடித்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ற... ஏதோ பவித்ராவுக்கு துணையா இருக்கனும்னு ஆன்டி கூப்பிட்டாங்கனு நீ முன்னாடியே வந்துட்ட.. இல்லைனா முகூர்த்தத்துகே போய் என்ன பண்றோம்னு எனக்கு சொல்லி குடுத்ததே நீ தான டீ “ என்று சரண்யாவை வாரினாள் கவிதா...
“ ஹீ ஹீ தெரிஞ்சுடுச்சா.... சரி அதை விடு.. மணமேடையில் நடந்த கூத்தை நீயே கேளு”