(Reading time: 11 - 22 minutes)

“பாரதி இதை ஏன் நீங்க அன்னைக்கே சமர்ப்பிக்கலை....”

“யுவர் ஹானர்... நாராயணனும், கவுன்சிலரும் தங்கள் பணம் மற்றும் பதவி பலத்தால் செய்யாத அக்கிரமங்கள் இல்லை... அனைத்து ஆதாரங்களையும் திரட்டி இவர்கள் தப்பிக்க முடியாத அளவுக்கு வந்த பிறகே கோர்ட்டில் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தோம்.... ஏனெனில் பணம். பதவி என்னும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு சட்டத்தின் எந்த ஓட்டையிலேனும் இவர்கள் தப்பிக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பினோம்... எனவேதான் ஒரு குற்றம் இல்லாவிட்டாலும் அடுத்ததில் இவர்களுக்கு தண்டனை கிடைக்க நிறைய ஆதாரங்களை சேகரித்தோம்... இதோ உங்கள் முன்னால் அனைத்தயும் சமர்ப்பித்தாகி விட்டது...”,பாரதி பேச அடுத்து சாரங்கன் எழுந்து நின்றான்....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஏழை மக்களுக்கு சென்று சேர வேண்டிய ரேஷன் பொருட்களை அவர்களுக்கு சேர விடாமல் கள்ள மார்க்கெட்டில் விற்பது, அடுத்தவரை மிரட்டி அவர்களின் நிலத்தை அபகரிப்பது, தங்களுக்கோ தங்கள் தொழிலுக்கோ போட்டியாக இருப்பவர்களை போட்டுத் தள்ளுவது... என்று இவர்களின் குற்றங்கள் எண்ணிலடங்கா.... இதில் அணைத்து குற்றங்களிலும் நாராயணனின் அண்ணனுக்கும் பங்கு உண்டு.... ஆகவே அனைவருக்கும் தக்க தண்டனை தருமாறு மாண்புமிகு நீதிபதி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்....”,சாரங்கன் முடிக்க சந்திரன் இருவரையும் பெருமையுடன் பார்த்தார்....

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி தன் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்....

“அரசாங்கம் என்பது மக்களுக்கானது... அதன் சலுகைகளும் அவர்களை போய் சேரவேண்டியது... ஆனால் துரதிஷ்டவசமாக இந்த கவுன்சிலர் போன்ற ஒரு சிலரால் பல நல்ல திட்டங்கள் ஏழை மக்களை போய் சேருவதேயில்லை... கவுன்சிலர் என்று மட்டும் சொல்ல மாட்டேன்... மந்திரியில் ஆரம்பித்து அரசாங்கத்தின் கடை நிலை ஊழியன் வரை அவர் அவர் தங்கள் தகுதிக்கேற்றபடி மக்களுக்கு சென்று சேரவேண்டியதை சுரண்டுகிறார்கள்... இதில் இந்த கவுன்சிலர் சுரண்டியது அந்த மக்களுக்கு சேரவேண்டிய ரேஷன் பொருட்களை... ஏழை மக்களின் வயிற்றில் அடித்ததை எந்த விதத்திலும் பொறுத்தக்கொள்ள முடியாது... ஆகவே அந்த குற்றத்திற்கு அவருக்கும் அதில் உடந்தையாக இருந்த நாராயணனுக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆளுக்கு 5 லட்சம் அபராதமும் விதிக்கிறேன்....”

“அடுத்ததாக இரட்டை கொலை வழக்கில் நாராயணன், அவர் அண்ணன் மற்றும் கவுன்சிலருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறேன்... இந்த மூன்று வழக்குகளின் தண்டனைகளையும் அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிகிறேன்.... நரேஷ் மற்றும் நாராயணன் வழக்கில் திறமையாக வாதாடி உண்மையை வெளிக்கொணர்ந்த  வக்கீல் சந்திரன் அவர்களையும், அவர்க்கு உதவியாக இருந்த பாரதியையும், சாரங்கனையும் இந்த நீதி மன்றம் பாராட்டுகிறது...”,நீதிபதி தீர்ப்பளிக்க மதி அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றான்...

சந்திரனுக்கும், சாரங்கன் பாரதிக்கும் நீதிமன்றத்தில் பாராட்டுக்கள் குவிந்தன... ஏகப்பட்ட பாராட்டு மழையில் நனைந்து துள்ளலுடன் வீட்டிற்குள் நுழைந்த சாரங்கனையும், பாரதியையும் உக்ரகாளி ஸ்வரூபத்துடன் அவர்கள் அன்னையர் எதிர்கொண்டனர்....  

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப்பெறும்

Episode 35

Episode 37

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.