(Reading time: 16 - 31 minutes)

தொடர்கதை - அன்பின் அழகே - 14 - ஸ்ரீ

anbin Azhage

இதயம் இந்த இதயம்

இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ

இதயம் இந்த இதயம்

இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ

 

ஆசை தூண்டிலில் மாறிக்கொண்டு

இது தத்தளித்து துடிக்கிறதே

காயம் யாவையும் தேற்றி கொண்டு

இது மறுபடியும் நினைகிறதே

உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்

எத்தனையோ கடலை இது விழுங்கும்

 

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே

வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே

வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்

வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே

 

இது தவித்திடும் நெருப்பா

இல்லை குளிர்ந்திடும் நீரா

இது பனி ஏறி மழையா

இதை அறிந்தோர் யாருமில்லை

றக்கத்தில் இருந்து விழித்தவளாய் கண் திறந்த நேரம் அபினவின் மடியில் தலை சாய்தத்திருந்தாள் திஷானி.

சில நொடிகளில் அனைத்தும் நினைவிற்கு வர பதறி எழப் போனவளின் மனநிலை அறியாதவனோ அவளை எழவிடாது தன் மடிமீது அழுத்தினான்.

“திஷாம்மா ஸ்ட்ரெயின் பண்ணாத என்னடா ஆச்சு ஓவர் வேலையா?டயர்டா இருக்கியாமே அம்மா சொல்றாங்க..டாக்டர்கிட்ட போலாம் முதல்ல எதாவது சாப்டு..”

“இல்ல அதெல்லாம் வேணாம் டாக்டரெல்லாம் எதுக்கு ஏதோ டயர்ட்னெஸ் தான் வேற ஒண்ணுமில்லங்க..”

“டாக்டருக்கு எதுக்கு இவ்ளோ பயம்.. சரி போக வேணாம் நா சாப்பாடு எடூத்துட்டு வரேன் சாப்டு”,என்றவன் உணவு எடுத்து வந்து தானே ஊட்டியும் விட்டான்.அவனிடமிருந்து விழியகற்றாமல் ஒவ்வொரு வாய் உணவையும் உண்டவள் ஒரு நொடி அவனிடம் விஷயத்தை கூறிவிடலாமா என்று கூட எண்ணிணாள்.

இருந்தும் கடைசி நிமிடத்தில் தன் எண்ணத்தை மாற்றி அமைதி காத்தாள்.அவளை படுக்க வைத்து போர்வையை கழுத்து வரை மூடியவன் ஏசியை ஆன் செய்து இரவு விளக்கை போட்டுவிட்டு சாப்பிடச் சென்றான்.

மனதின் எண்ணங்கள்  சூனியமாய் தோன்ற வெறுமையாய் உணர்ந்தவளுக்கு நிச்சயம் ஒரு ஆதரவு தேவைப்பட சாருவுக்கு அழைத்து பேச எண்ணியவளாய் அவளுக்கு அழைத்தாள்.

“ஹாய் டா எப்படியிருக்க?”

“நல்லாயிருக்கேன் சாரு நீங்க எப்படியிருக்கீங்க?”

“நல்லாயிருக்கேன் என்னாச்சு இந்த நேரத்துல கால் பண்ணிருக்க!எதுவும் ப்ரச்சனையில்லையே?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல வந்து..நா கன்சிவ்வா இருக்கேனோனு சந்தேகமா இருக்கு சாரு..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அடிப்பாவி என்ன மாதிரியான விஷயத்தை என்ன ரியாக்ஷன்ல சொல்ற நீ..முதல்ல கன்பார்ம் பண்ணு..உங்க ஆள்கிட்ட சொல்லிட்டியா இல்லையா?ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு திஷானி..வாழ்த்துக்கள்..”

அப்படியாய் ஒரு மகிழ்ச்சி அவள் குரலில் அதுவே திஷானியை தன் பயத்தை பற்றி பேச தடையாய் இருக்க அப்படியே அமைதி காத்தாள்.

“இப்போனு பாத்து ஊருக்கு போக வேண்டிய நிலைமை ஏர்போர்ட்ல தான் இருக்கேன் திஷானி.ஹஸ்பண்ட் சைட்ல க்ளோஸ் ரிலேட்டிவ் ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்குறாங்க அதான் கடைசி ஃப்லைட்ல கிளம்புறோம்.

ஹில் ஸ்டேஷன் வேற கால் பேச முடியுமா தெரில அபிக்கு நா விஷ் பண்ணேன்னு சொல்லிடு..டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துரு மறக்காம..வந்து பேசுறேன்டா போர்டிங் அனௌன்ஸ்மெண்ட் பண்ணிடாங்க..சாரி டியர்..பை”என அழைப்பை துண்டித்திருந்தாள்.

திஷானியோ மொத்தமாய் பைத்தியமாகிக் கொண்டிருந்தாள் மனதளவில்.அவள் சிந்தனையை கலைக்குமாறு அபினவ் உள்ளே வந்து எப்போதும் போல் அவளை தன் கையணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.

“ஏய் கருப்பழகி ரொம்ப பயமுறுத்திட்ட..நாளைக்கு எதுக்கும் ஹாஸ்பிட்டல் போலாமா?”

“வேணாம் இப்போ நா நல்லாதான் இருக்கேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.