(Reading time: 16 - 31 minutes)

“அபி கொஞ்சம் பொறுமையா இரு..திஷானி ஏன் இப்படி சொல்ற முதல் குழந்தையை அப்படி சொல்லாத எத்தனை பேருக்கு இந்த வரம் கிடைக்காம இருக்காங்க தெரியுமா!!”

“அவளுக்கு அதெல்லாம் என்ன கவலை..பைத்தியகாரி மாதிரி அவ சொன்னத தான் சொல்லப் போறா..”

“அபி நீ உள்ளே போ..உன்னை பேச வேண்டாம்னு சொன்னேன்”,என சாரதா அதட்ட ராகவன் அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

“திஷானிம்மா எனக்கு பொண்ணு இல்லனு ரொம்பவே வருத்தப்பட்டுருக்கேன்.நீ இந்த வீட்டுக்கு வந்தப்பறம் எனக்கு அந்தகுறையே போய்டுச்சு.உன் அம்மாவா சொல்றேன் நீ எதை நினைச்சு இப்படி சொல்றனு எனக்கு தெரில ஆனா இனி அந்த நினைப்பு கூட உனக்கு வரக்கூடாது..போ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு போ..”,என அவளை மேலும் குழப்ப விரும்பால் அறைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு அபினவோ பால்கனியில் நின்று எங்கோ வெறித்துப் பார்த்திருந்தான்.அவள் வரும் ஓசை கேட்டு கடினப்பட்டு தன்னை பொறுமையாக்கி அவளருகில் வந்தவன் அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான்.

“ஏன் டீ இப்படி பண்ற..உலகத்துக்கு வர்றதுகுள்ள அந்த பிஞ்சு கருவை ஏன் அழிக்கனும்னு நினைக்குற..பாவம் டீ..”

கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அவள் தன் கைகளுக்குள் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்திருந்தாள்.வேகமாய் எழுந்து அவளருகில் அமர்ந்தவன் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

“வேணாம் அபிப்பா..இந்த குழந்தையும் என் ஜீன்ல வந்துட்டா..”,என அவள் தேம்பினாள்.

வேகமாய் அவள் தாடையை பிடித்து நிமிர்த்தியவன்,”வந்துட்டா வந்துட்டா என்ன டீ என் பிள்ளையை ராஜாவாட்டம் வளர்ப்பேன்..போதுமா!!”

அதிர்ச்சியான பார்வை திஷானியிடம் சாருவின் மூலம் அவளின் பயம் பற்றிய தகவல் அவனை எட்டியிருப்பதை உணர்ந்தாள்.

“என்ன பாக்குற திஷாம்மா எல்லாம் தெரியும்.உன் பயத்தை நா தப்பா சொல்லல ஆனா அது தேவையில்லாததுனு தான் சொல்றேன்.நம்ம குழந்தையை நானே எப்படி பாரமா நினைப்பேன்.ஏன் அது உன் மரமண்டைக்கு புரிய மாட்டேங்குது.

என்கிட்ட விஷயத்தையே சொல்லாம அப்படியே அபார்ட் பண்ணிட்டு வந்துர அளவு உனக்கு என் மேல பாசம் இல்ல??”

“இல்லங்க அப்படியில்ல.உங்களுக்கு பாரம்னு நினைச்சது உண்மைதான் ஆனா அதையும் தாண்டி என் குழந்தையும் என்ன மாதிரி கஷ்டத்தை அனுபவிக்க கூடாதுனு தான் இந்தமுடிவுக்கு வந்தேன்.

அந்த குழந்தையை எல்லோரும் இரக்கத்தோட பார்ப்பாங்க ஸ்கூல்ல மத்த பசங்க மாதிரி அந்த குழந்தையால சந்தோஷமா இருக்க முடியாது காலேஜ்ல எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க.எல்லாத்துக்கும் மேல உங்களை மாதிரியே அந்த குழந்தைக்கும் நல்ல பார்ட்னர் கிடைப்பாங்கனு என்ன சாத்தியம் இருக்கு??”

“திஷா பிறக்காத பிள்ளையை ஊனமாக்கி அதுக்கு கல்யாணம் வரை யோசிக்க தெரிஞ்ச உனக்கு அதை நல்லபடியா பெத்து வளர்ப்போம்னு ஏன் யோசிக்க முடில..

ஒரு வேளை இந்த குழந்தை சாதாரணமா பிறக்க போற குழந்தைனு கடவுள் முடிவெடுத்துருந்தா தேவையில்லாத ஒரு பயத்துக்காக ஒரு உயிரை அழிச்ச பாவம் நம்மள நிம்மதியா இருக்க விடுமா சொல்லு திஷா..”,ஆற்றாமையோடு அத்தனை பேசினான் இருந்தும் அவள் மனம் இன்னுமே தெளிவானதாய் தோன்றவில்லை அவனுக்கு.

வெறுத்துப் போய் கட்டிலில் அப்படியே விழுந்தான்.இதற்குமேல் என்ன செய்ய வேண்டுமென தெரியாமல் விழிமூடி கிடந்தவனின் அலைப்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தவன் சாருவின் எண்ணைக் கண்டு எழுந்தமர்ந்து காலை அட்டெண்ட் செய்தான்.

“சொல்லு”

“என்னாச்சு திஷாவ பாத்து பேசினீங்களா?சமாதானம் ஆய்ட்டாங்க தான?உங்ககிட்ட ஏன் சொல்லலையாம்???”

'ப்ரெண்ட்னு சொன்ன பாவத்துக்கு உனக்கு இருக்குற அக்கறை பிள்ளையை பெத்துக்க போறவளுக்குல இருக்கணும்..என்னால ஆனத பேசிட்டேன்..அவளுக்கு இந்த குழந்தை வேண்டாமாம் என்னை என்ன பண்ண சொல்ற?”,வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

“ஹே லூசு..அவங்களுக்கு புரிய வைக்க சொன்னா நீங்களும் இப்படி கத்திட்டு இருந்தா என்ன அர்த்தம்??நீங்க போனை அவங்ககிட்ட கொடுங்க..”

“ஆமா யார் சொல்லியும் கேக்காதவ நீ சொன்னவுடனே கேட்டு கிளிச்சுற போறா..என்னவோ பண்ணித் தொல.”,என்றவன் போனை அவள் கையில் திணித்துவிட்டு நகர்ந்தான்.

“என்ன திஷானி இதெல்லாம்..உன்ட்ட படிச்சு படிச்சு எவ்ளோ சொன்னேன்..நீ என்ன பண்ணி வச்சுருக்க?”

“சாரு நீங்களும் என்னை புரிஞ்சுக்காம இப்படி பேசுறீங்களே”,இயலாமையாய் ஒலித்தது அவள் குரல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.