(Reading time: 16 - 31 minutes)

அவள் பேர்கூறி நர்ஸ் வந்து அழைத்தப் போது கண்திறந்தவள் தற்செயலாய் அருகிலிருந்தவனைப் பார்க்க ஒரு நொடி அந்த விழிகள் தன் கள்ளத் தனத்தை மறைக்க முயன்று தோற்றது.

“சோ இப்போ மேடம் என்ன ஐடியால இங்க வந்துருக்கீங்க?!”,அவன் குரலிலிருந்து அவளால் ஒன்றையும் கணிக்க முடியவில்லை.அவள் அப்படியே அமர்ந்திருப்பதை கண்டவன் நர்ஸின் பொறுமை காற்றில் பறப்பதை உணர்ந்தவனாய் எழுந்து நின்றான்.

கையோடு அவளையும் எழுப்பி முன்னே நடக்க அவள்புறம் திரும்பியவன்,”நா மட்டும் உள்ளே போய் ஒரு ப்ரோஜனமும் இல்லனு நினைக்குறேன்..இல்ல நடக்க மாட்டனா நா வேணா??”,அவன் முடிப்பதற்குள் அவனருகில் வந்தவள் டாக்டர் அறையை நோக்கி  நடந்தாள்.

அவர்களை வரவேற்று சிநேகப் புன்னகையை உதிர்த்த டாக்டர் அவர்களே பேசுவதற்காக காத்திருக்க திஷானி பேச போவதில்லை என்றறிந்தவன் அவனே வாய் திறந்தான்.

“ப்ரெக்னெஸி கன்பர்மேஷன்காக வந்துருக்கோம் மேம்..”

“ஓ குட்..செல்ப் செக் பண்ணிடியா மா?”

திஷானி இல்லை என்பதாய் தலையசைக்க இட்ஸ் ஓ.கே என்றவர் எக்ஸமைன் செய்ய அழைத்துச் சென்றார்.அபினவின் மனம் அனலாய் கனத்தது  இருந்தும் எதையும் அவளிடம் காட்ட விரும்பாதவனாய் அமைதி காத்தான்.

டாக்டர் தன்னிருக்கையில் வந்தமர்ந்தவர் புன்னகையோடு,”காங்க்ராட்ஸ் எய்ங் மேன்..ரிசல்ட் பாசிடிவ் தான்.கொஞ்சம் சோர்வா தெரியுறா மத்தபடி ஒருப்ராப்ளமும் இல்ல..ஹப்பியா பாத்துக்கோங்க..நல்லா சாப்பிட சொல்லுங்க..வழக்கமான மெடிசின்ஸ் தர்றேன் நெக்ஸ்ட் டைம் செக்கப் வர்ற வர கண்டிநியூ பண்ண சொல்லுங்க..”,என கடகடவென ஒப்பித்தவர் மாத்திரைகளை எழுதிக் கொடுத்து முடிக்கவும் திஷானி அவனருகில் வரவும் சரியாய் இருந்தது.

அவசரமாய் ஏதோ கூற வந்தவள் அபினவின் காரப் பார்வையை கண்டு வாயை மூடிக் கொண்டாள்.மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவன் அமைதியாய் காரை ஸ்டார்ட் செய்ய அவளுமே மௌனமே வடிவய் அமர்ந்திருந்தாள்.

பக்கத்து தெருவிலிருந்த பார்க் வாசலில் காரை நிறுத்தியன் உள்ளே செல்ல அவனை எதிர்த்து வாதிட தன்னை சமனப்படுத்தியவாறு பின்னே சென்றாள்.

“என்ன நினைச்சு நீ இதை பண்ணிட்டு இருக்க திஷானி?!”,இழுத்துப் பிடித்திருந்த பொறுமை அவன் குரலில்.

“எனக்கு இந்த குழந்தை வேண்டாம்..”

“வேண்டாம்னா எனக்கு புரில?”

“வேண்டாம்னா வேண்டாம் என் வயித்துல இருக்க வேணாம் இந்தபூமிக்கு வர வேணாம்..”

“சோ கொலை பண்ண தயாரா இருக்க அப்படிதான?”

“….”

“சொல்லு என்னை என்பிள்ளையை இரண்டு பேரையுமே கொல்ல தயாராய்ட்ட அப்படிதான?”

“அதெல்லாம் இல்ல ஏன் இந்த குழந்தை தான் வாழ்க்கையா?”

“ஆமாம்டீ எனக்கு அதுதான் வாழ்க்கை என் குழந்தை என் இரத்தம் என் காதலுக்கான வாரிசு..முக்கியமில்லாம வேறனென்ன?”

“……”

“என்கிட்ட கூட சொல்லனும்னு தோணலயா திஷாம்மா..”,கடுமையை தாண்டிய வருத்தம் தொணித்தது அந்த குரலில்.

இருந்தும் இரக்கமே இல்லாதவளாய் சிலையென அமர்ந்திருந்தாள்.அதில் மேலும் கடுப்பானவன்,

“அழுத்தம் பிடிச்சவ டீ நீ..சரி என் முடிவை சொல்லிட்டேன் எனக்கு இந்த குழந்தை நல்லபடியா பிறந்து ஆகணும்..வேற பேச்சு இல்ல போலாம்”,என எழுந்துக் கொண்டான்.

மனதில் பயமிருந்தாலும் அதைக் காட்டாமல் அவனோடு சென்றாள்.மதியமே வீட்டிற்கு இருவரும் சேர்ந்து வந்ததை ஆச்சரியமாய் பார்த்த பெரியவர்கள் கேள்வியாய் நோக்க அபினவ் வழக்கமான தன் விளையாட்டுத் தனத்தோடு,

“ம்மா சீக்கிரமே உன் மடில பங்கு கேட்க ஆள் வந்துருவாங்க போலயே இன்னும் ஒன்பது மாசம் தான்..அப்பறம் நான் என் பொண்டாட்டியோட செகண்ட் ஹனிமூன் கிளம்பிடுவேன் வர்றவங்கள நீ பாத்துப்பல?”,என்று கூறி கண்ணடித்துச் சிரித்தான்.

“அபினா உண்மையாவா டாக்டர்கிட்ட போய்ட்டு வந்தீங்களா?நாதான் அன்னைக்கே கண்டுபிடிச்சேனே என் மருமக முகம் பார்த்தே..திஷானிடா ரொம்ப சந்தோஷம் இருங்க இதோ வரேன்”,என வேகமாய் சமையலறைக்குச் சென்று சர்க்கரையை எடுத்துவந்து அபினவிற்கும் திஷானிக்கும் வாயில் ஊட்டிவிட்டார்.

மொத்தமாய் களைத்து இருந்தவள் மெதுவாய் சோபாவில் அமர சாரதா வந்து அவளருகில் அமர்ந்தார்.

“என்னாச்சு திஷானி எதுவும் சாப்டுறியா?ரொம்ப களைப்பா இருக்கியே!”

“அத்தை எனக்கு இந்த குழந்தை வேண்டாம்..ப்ளீஸ் அவர்கிட்ட சொல்லுங்க..”

“திஷா!!!”,அவருக்கு முன் அபினவ் தான் கத்தியிருந்தான் ஏற்கனவே கோபத்தை கட்டுப் படுத்தியிருந்தவன் இவள் சாரதாவிடமே இப்படி கூற தன்னையும் மீறி கத்திவிட்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.