(Reading time: 16 - 31 minutes)

“ம்ம் என்னவோ சொல்ற போடி உடம்பை ஒழுங்கா பாத்துக்கோ..இன்னொரு தடவை இப்படி பயமுறுத்தாத..சரி ஒழுங்கா தூங்கு இப்போ”

கணவன் உறங்கும் வரை அமைதியாய் விழி மூடியிருந்தவள் அதன்பின் மெதுவாய் கண் விழித்தாள்.அவனைவிட்டு எழுந்தமர்ந்தவள் தன் காலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.மனம் சலனமாகவே இருந்தது.

சற்றே சலிப்பாய் உணர்ந்தவள் எத்தனை நேரம் இப்படியே அமர்ந்திருக்க என்று எண்ணியவளாய் தூக்கத்தை தழுவினாள்.

அடுத்து வந்த மூன்று நாட்களும் அப்படி இப்படியாய் நகர ஒரு முடிவுக்கு வந்தவளாய் அந்த வார வெள்ளிக்கிழமை பள்ளியில் விடுப்பு கூறிவிட்டு அந்த ஏரியாவிலேயே இருந்த சிறந்த கைனிக் டாக்டரை பார்க்கச் சென்றாள்.

அதே நேரம் இங்கு தன் அலுவலகத்தில் மும்முரமாய் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த அபினவின் அலைப்பேசி அலர எண்ணைப் பார்க்காமலேயே அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

“வாழ்த்துக்கள் என் எரும மாடே”கிட்டதட்ட சாரு மறுபுறத்தில் அலறாத குறையாய் தன் வாழ்த்தை கூறினாள்.

“சனியனே!!ஏன் இப்படி கத்துற..நா ஆபீஸ்ல இருக்கேன்..இப்போ நா என்னத்த கிளிச்சுட்டேன்னு இந்த வாழ்த்து??”

“உன்னை மனுஷனா மதிச்சு கால் பண்ணேன் பாரு எனக்கு தேவைதான்.எப்போ பாத்தாலும் இஞ்சிதின்ன குரங்கு மாதிரி இருந்துட்டு பொண்டாட்டியை இப்படி பண்ணி வச்சுருக்கீங்க..பேச்சை பாரு..”

“அவளையா நா என்ன பண்ணேன்.ஏற்கனவே இங்க மண்டை காயுது இதுல நீ வேற விளையாடிட்டு இருக்க உன்ன கொன்னுருவேன்..என்ன வேணும் உனக்கு இப்போ??!”

“மண்ணெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண எவன் பொண்டாட்டி கன்சிவ் ஆனா எனக்கென்ன பே..பக்கி..”,என்றவள் கோபமாய் போனை வைத்துவிட்டாள்.

“பைத்தியம் அதுவே கால் பண்ணி என்னத்தையோ உளறிட்டு கால் கட் பண்ணுது பாரு..எனக்குனு வந்து வாய்க்குது எல்லாம்”,என்று புலம்பியவனுக்கு சட்டென மூளையில் பொறிதட்ட அவள் கூறியதன் அர்த்தம் புரிந்தும் புரியாததுமாய் இருக்க அடித்துபிடித்து அவளை அழைத்தான்.

“என்ன?? நீங்க தான் பெரிய மேனேஜர் வெங்காயமாச்சே போ போய் வேலையை கட்டி அழு..”,என்றவளின் குரல் லேசாய் கரகரத்தது.

“ஏய் லூசு சாரி ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன்..நீயெல்லாம் எப்படி ஒரு பிள்ளைக்கு அம்மாவா இருக்க!!இப்படி எதுக்கெடுத்தாலும் மூஞ்சியை தூக்கிட்டு..என் மச்சான் ரொம்ப பாவம் தான்..”

“அவரை பத்தி நீங்க ஒண்ணும் கவலபட வேண்டாம் இப்போ எதுக்கு கால் பண்ண?”

“ஏய் ஆமா நீ எதுக்கு எனக்கு விஷ் பண்ண”,என தன் ஆர்வத்தை மறைத்து கேட்க முயன்றான்.

“பிசாசே நீ அப்பாவானதுக்கு உனக்கு விஷ் பண்ணாம…வேணாம் எதாவது சொல்லிர போறேன்..”

“ஏய் என்னடீ சொல்ற!!!”

“சொன்னாங்க சோத்துல உப்பில்லனு..என்ன புருஷனும் பொண்டாட்டியும் என்ன கலாய்க்குறீங்களா??”

“ஹே சாரு ப்ளீஸ் தெளிவா சொல்லு திஷா உன்கிட்ட பேசினாளா??!”

அவன் குரலின் தீவிரமே அவன் பதட்டத்தை வெளிப்படுத்த அன்று நடந்ததை மறைக்காமல் கூறினாள்.

“அவ ஏன் உங்ககிட்ட சொல்லல!!அபி எனக்கு என்னவோ அவங்க பயம் இன்னும் மாறலையோனு???”

“இல்ல இதுக்கு மேல டிலே பண்ண முடியாது நா போய் அவளை பாக்குறேன் சாரு.எல்லாம் நல்லபடியா இருக்கணும்னு ப்ளீஸ் ப்ரே பண்ணிக்கோ..நா அவகிட்ட பேசிட்டு உனக்கு கூப்டுறேன்..பை”,என்றவன் அடுத்த முக்கால் மணி நேரத்தில் திஷானியின் பள்ளி வாசலில் இருந்தான்.

உள்ளே சென்று விசாரித்தலில் அவள் உடம்பு சரியில்லையென கூறி மருத்துவமனைக்குச் செல்வதாக கூறியதாய் ஆசிரியை ஒருவர் கூறினார்.

எந்த ஹாஸ்பிட்டல் போயிருக்கா என்ன பண்ண போறா ஒண்ணும் புரிலயே..கடவுளே எதுவும் தப்பா நடந்துர கூடாது என மனதினுள் குமைந்தவனின் முகமே பாவமாய் இருக்க அந்த ஆசிரியையே அவளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தாள்.

“சார் எதுக்கும் நம்ம ஏரியா கைனிக் விசாலாட்சி டாக்டர்ட்ட போய்ருக்காளானு பாருங்க.இங்க நல்ல லேடி டாக்டர் அவங்க தான் ஜெனரல் செக்கப்பும் பாப்பாங்க”

“ஓ எஸ் அதை எப்படி மறந்தேன்.தேங்க் யூ தேங்க் யூ சோ மச் மேம்..”,என்றவன் அடித்துப் பிடித்து மருத்துவமனைக்கு ஓடினான்.

அங்கு சென்று அவளை கண்களால் துழாவ ஒரு ஓரமாய் சாய்வாய் கண்மூடி அமர்ந்திருந்தாள்.சற்றே நிம்மதியாய் உணர்ந்தவன் ஒன்றும் கூறாமல் அமைதியாய் சென்று அவளருகில் அமர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.