(Reading time: 16 - 31 minutes)

“திஷானி கொஞ்சம் ப்ராக்டிகலா யோசிங்க..சரி நா ஒண்ணு கேக்குறேன் உங்க குழந்தை அபிக்கு பாரமாகிட கூடாதுனு நினைக்குறீங்க சரி நாளைக்கே எதோ ஒரு காரணத்தால இதை சொல்ல எனக்கு பிடிக்கல ஆனா என் ப்ரெண்ட் நல்லாயிருக்கணும்னு ஆயிரம் தடவை கடவுளை வேண்டிட்டு இந்த வார்த்தையை சொல்றேன்..

நாளைக்கே அபி உடம்புக்கு எதாவதுனா அவரை பாரம்னு நினைச்சு விட்டுருவீங்களா?”

“சாரு!!!!”

“மன்னிச்சுரு திஷானி..உனக்கு வேற எப்படி புரிய வைக்குறது.நடக்குமா நடக்காதானு தெரியாத ஒரு விஷயத்தை பிடிச்சு தொங்கிட்டு இருந்தா வாழ்க்கை போய்டும் அது ஏன் உனக்கு புரில..என் ப்ரெண்ட்க்கு இப்போ வர நீதான் வாழ்க்கை.நாளைக்கு நீயும் உன் குழந்தையும் அது எப்படி இருந்தாலும் புரியுதா?நல்ல வாழ்க்கையை வீணாக்காத திஷானி..இந்த பயம் உன்னையே அழிச்சுரும் புரிஞ்சுக்கோ..உடம்பை பாத்துக்கோ நா நாளைக்கு பேசுறேன்..”

போனை வைத்தவளுக்கு மனம் படபடப்பாய் இருந்தது.பேச்சுக்காக கூறினாலும் சாருவின் வார்த்தை எத்தனை வலியும் வேதனையையும் கொடுத்தது.அப்படியிருக்க சின்னஞ்சிறு உயிரை கொல்லவே பார்த்தேனே கொலைகாரியா மாறத் தானே பாத்தேன்..அவர் சொன்ன மாதிரி அதை பண்ணி தொலச்சுருந்தா அந்த பாவமும் பழியும் என்னை விட்டுருக்குமா..வாழ்க்கையே சூனியம் ஆய்ருக்குமே..கடவுளே..”

மனதிற்குள் அரற்றிக் கொண்டிருந்தவளின் கையிலிருந்து போன் நழுவவுவதாய் தோன்ற இறுக்கிப் பிடித்த நேரம் அபினவின் கை அதில் இருந்தது.

ஒன்றும் பேசாமல் அவன் திரும்பி நடக்க எத்தனிக்க கையை அழுத்திப் பிடித்து நிறுத்தினாள்.நின்று என்னவென்பதாய் அவளைப் பார்க்க கண்ணில் கோர்த்த நீரோடு,

“சாரிங்க..ப்ளீஸ் உங்ககிட்ட சொல்லாம போனது தப்பு தான்..என்ன ஒதுக்கிடாதீங்க..ப்ளீஸ்..”

“பைத்தியம் தான் டீ பிடிச்சுருக்கு உனக்கு என்ன பேச்சு இது ஒதுக்கிடாதீங்க பாரமா இருக்கும்..குடும்பத்துக்குள்ள காதலுக்குள்ள இந்த வார்த்தைக்கெல்லாம் வேலையும் இல்ல அர்த்தமும் இல்ல திஷாம்மா..

சரி சொல்லு இனி எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ண மாட்ட தான?”

“இன்னும் என் பயம் அப்படியே தான் இருக்குங்க..ஆனா நா எடுத்த தப்பான முடிவை மறுபடியும் எடுக்க மாட்டேன்.ஆனா அதுக்கு நீங்க ஒரு சம்மதம் தரணும்..”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என்னது??”

“ஸ்கேன்ல ஒரு வேளை குழந்தைக்கு ப்ரச்சனை இருக்குனு தெரிஞ்சா அதுக்கு மேல நா என்ன சொல்றனோ அதுக்கு நீங்க ஒத்துக்கனும்..”,தயக்கமாய் அவனை பார்த்தவாறு கூறினாள்.

“உன்னையெல்லாம் அடிச்சு கொல்லலாம் போல ஆத்திரம் வருது..என்ன கருமம் டீ இது..ஆனா ஒருத்தன் அப்பா ஆக போறேன்ங்கிற விஷயத்தை இத்தனை கடுப்பான சூழ்நிலைல கேட்டுருக்க மாட்டான்..இதுக்கு மேல முடில திஷாம்மா..

இதுக்கு மேல உன்னை வழிக்கு கொண்டு வர வேற வழியே இல்ல..சாய்ந்திரம் நாம ரெண்டு பேரும் வெளில போறோம் அதுவரை வாயை மூடிட்டு தூங்கி ரெஸ்ட் எடு..அப்பறம் பேசிக்கலாம் எதுவா இருந்தாலும்..”

“எங்க போறோம்???”

“ம்ம் என் முதல் குழந்தை என் பொண்ணை பாக்குறதுக்கு..”

என்றவன் விருட்டென வெளியே சென்றுவிட தான் கேட்டது சரிதானா என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல் மீளத் தோன்றால் அப்படியே அமர்ந்துவிட்டிருந்தாள் திஷானி..

தொடரும்...

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1198}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.